Kathir News
Begin typing your search above and press return to search.

ஐயா ப்ளாக் ஷீப் சேனல் ரெய்டுல என்னை கோர்த்துவிடாதீங்க - டெல்லியில் பம்மிய உதயநிதி!

ஐயா ப்ளாக் ஷீப் சேனல் ரெய்டுல என்னை கோர்த்துவிடாதீங்க - டெல்லியில் பம்மிய உதயநிதி!

Mohan RajBy : Mohan Raj

  |  2 March 2023 10:35 AM GMT

உதயநிதி உறவினர் பிளாக் ஷீப் தொலைக்காட்சிக்கு பொருள்கள் வாங்கியதில் நடந்த முறைகளை தொடர்பாக தொடரப்பட்ட ரைடு நடவடிக்கையில் சமாதானம் செய்வதற்க்கே டெல்லி சென்றுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அமைச்சர் உதயநிதி கடந்த இரு நாட்களாக டெல்லிக்கு சென்றார், அங்கை தங்கி பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்தார். மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஸ்ரீகிரிராஜ் சிங்கை இப்படி பிரதமர் மற்றும் முக்கிய 2 அமைச்சர்கள் சந்தித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்திக்க நினைத்து அது நடக்கவில்லை எனவும் தெரிகிறது. இந்த நிலையில் அதற்கு பிண்ணனியில் உள்ள பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.


முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கு சொந்தமானது கலைஞர் தொலைக்காட்சி, இந்த கலைஞர் தொலைக்காட்சியின் மற்றொரு பிரிவு சித்திரம் டிவி. இந்த சித்திரம் டிவியை பிளாக் ஷீப் என்ற யூ ட்யூப் சேனல் தற்பொழுது எடுத்து நடத்த துவங்கியது. அந்த பிளாக் ஷீப் யூட்யூப் சேனல் உதயநிதி அவர்களின் உறவினர் மகன் கார்த்திக் மற்றும் பிளாக் ஷீப் விக்னேஷ் ஆகிய இருவரிம் பங்குதாரர் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அந்த கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிளாக் ஷீப் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து ரெய்டு தொடங்கியது. அந்த ரெய்டில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன எனவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் பிளாக் ஷீப் டிவிக்கு உபகரணங்கள் வாங்கியதில் வரிவிதிப்பு செய்தது மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி நடத்தியதில் முறைகேடு நடந்தது போன்ற பல்வேறு ஆவணங்கள் பிடிபட்டது.

மேலும் இது தொடர்பாக தற்பொழுது விசாரணை நடந்து கொண்டு வருகிறது, இந்த நிலையில் இப்படி விசாரணை நடக்கும் சமயத்தில் உதயநிதி ஸ்டாலினின் உறவினர் கார்த்தி அவர்களின் விசாரணை வளையத்திற்குள் இருப்பதால் எங்கே தனக்கு ஆபத்து வந்து விடுமோ என்று தான் உதயநிதி தற்பொழுது டெல்லி சென்றுள்ளனர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் இது குறித்து தனியா யூ ட்யூப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து கூறியுள்ளார். பிளாக் ஷீப் தொலைக்காட்சி சித்திரம் டிவி ஆகிய இரண்டும் இணைந்து நடத்த இருந்த சேனலில் கேமரா, லென்ஸ் மற்றும் உபகரணங்கள் வாங்கிய விவகாரத்தில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு தெரிந்துள்ளது. இதன் தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் பிளாக் ஷீப் சேனல் நிறுவனத்தின் மற்றும் சித்திரம் டிவி தொலைக்காட்சி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர், இந்த அதிரடி சோதனை நடத்தியது மட்டுமல்லாமல் மற்றொரு விவகாரமாக யுவன் சங்கர் ராஜாவை வைத்து திருச்சியில் நடத்திய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் டிக்கெட் விற்பனையிலும் வரி ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி ஏய்ப்பு செய்தது யார் என்று பார்த்தால் உதயநிதி ஸ்டாலின் உறவினர் கார்த்திக், இந்த கார்த்திக் தான் தற்பொழுது விசாரணை வளையத்திற்குள் உள்ளார். எங்கே இந்த விசாரணை வளையம் இருகினால் தன் பெயர் வெளியில் வந்து விடுமா என பயந்து தான் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.


உதயநிதி ஸ்டாலின் தன் மீது ரெய்டு வரக்கூடாது, தன் மீது வரி ஏய்ப்பு நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தக்கூடாது, கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்தது கண்டுபிடித்து விடக்கூடாது என்ன மத்திய அரசிடம் சரண்டர் ஆகவே டெல்லி சென்றுள்ளார்' எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News