போராட்டத்துக்கு திருமாவளவன், ஆடம்பரமான நிகழ்ச்சிக்கு கமலஹாசன் - திமுகவின் அரசியல் ஆடுபுலி ஆட்டம்!
By : Mohan Raj
போராட்டத்துக்கு திருமாவளவன், ஆடம்பரமான நிகழ்ச்சிக்கு கமலஹாசன் என திமுக இப்ப யாரை என்ன வேலை வாங்கணும்ன்னு திமுக சிறப்பான அரசியல் செஞ்சுட்டு வருது.
திமுக தன் அரசியல் லாபத்திற்கு யார் யாரை எங்கெங்கு பயன்படுத்தும் என நன்றாகவே தெரியும், குறிப்பா பார்த்தீங்கன்னா சினிமாக்காரர்களை மேடையில் அழைத்து வைத்துக்கொண்டது திமுகவினர் புகழ் பாட வைப்பது, போராடும் கட்சிகளை கூட்டணி வைத்துக்கொண்டு களத்தில் தான் இறங்கி போராடாமல் கூட்டணி கட்சிகளை போராட வைப்பது போன்ற பல வேலைகளை திமுக அப்பப்ப செஞ்சுட்டு வரும். இது கருணாநிதி காலத்துலேர்ந்து கடைபிடிச்சுட்டு வர்ற டெக்னீக்.
அந்த வகையில் தற்போதைய அரசியலில் திமுக போராட்டத்திற்கு திருமாவளவனை கூட்டணியில் வைத்துக்கொண்டு அவரை பயன்படுத்தி வருகிறது. புகைப்பட கண்காட்சி போன்ற ஆடம்பரமான நிகழ்ச்சிக்கு கமலஹாசனை கையில் வச்சுக்கிட்டு அசால்ட்டா கேம் ஆட்டிட்டு வருது.
நேற்று தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க பாஜக முயல்வதாக குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, மதிமுக சார்பாக துரை வைகோ, வாழ்வுரிமை கட்சி சார்பாக வேல்முருகன் இப்படி எல்லாரும் கலந்துக்கிட்டாங்க.
இப்படி பாஜக அரசியலை விமர்சனம் செய்வதற்கும், பாஜகவை கண்டித்து போராட்டம் நடத்தவும், ஆளுநர் ஆர்.என்.ரவி எதாவது கருத்து சொன்னா அவரை கண்டிச்சு கருத்து சொல்ல, ஆளுநர் மாளிகையை கண்டிச்சு போராட்டம் நடத்த இப்படி திமுக எங்கேயும் களத்துல இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய விஷயத்துக்கெல்லாம் திருமாவளவனை அழகா பயன்படுத்துது.
அதே சமயத்துல மற்றொரு நிகழ்ச்சியாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' அப்டின்னு 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் என்ற புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்துல ஒரு நிகழ்ச்சி நடத்துனாங்க, இந்த புகைப்பட கண்காட்சியை கமல்ஹாசன் திறந்து வைத்தார். திறந்து வச்சுட்டு 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கலைஞர் மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். நெருங்கிய நட்பு என்று சொல்ல முடியாது. ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் இருவருமே பலமுறை நிரூபித்துக் கொண்டும் வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கிறோம்' அப்டின்னு ரொம்பவே பெருமையா பேசினார்.
இப்படி புகழ் பாடும் ஆடம்பர நிகழ்ச்சிக்கு சினிமா நடிகர் கமலஹாசனையும், போராட வேண்டிய நிகழ்ச்சிக்கு தெருவில் திருமாவையும் இறக்கி விட்டு விட்டு திமுக நன்கு அரசியல் செய்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்லிட்டு வர்ராங்க. அது மட்டுமில்லாம நேத்து திருமாவளவனை பாஜக'விற்கு எதிரா போராட விட்டுட்டு இந்த பக்கம் உதயநிதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திச்சதுதாங்க ரொம்பவே ஹைலைட்!