Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த பூச்சாண்டியெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க - திருமாவளவனை அசால்ட்டாக டீல் செய்த அண்ணாமலை

இந்த பூச்சாண்டியெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க - திருமாவளவனை அசால்ட்டாக டீல் செய்த அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 March 2023 2:22 PM GMT

பாஜக, விடுதலை சிறுத்தைகள் மோதல் முற்றியுள்ள நிலையில் திருமாவளவனுக்கு பதிலடி தரும் விதமாக அண்ணாமலை கூறிய ஒற்றை சொல் திருமாவளவன் தூக்கத்தை கெடுத்துள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருவாரூரில் நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் பாஜக பட்டியலின தலைவர் தடா.பெரியசாமி திருமாவளவனை விமர்சித்து பேசினார். அப்போது அந்த கூட்டத்தில் அவர் திருமாவளவன் பழைய வாழ்க்கையை பற்றி உண்மைகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். மேலும் பட்டியலின மக்களின் பாதுகாவலன் என கூறி திருமாவளவன் செய்துவரும் அரசியலை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் அவரது வீடு மர்ம நபர்களால் அடைத்து உடைக்கப்பட்டது, இது தொடர்பாக தமிழக பாஜக ஒரு மாபெரும் போராட்டத்தை சென்னையில் நடத்தியது.. இப்படி திருமாவளவன் தனது அரசியல் இப்படி மக்கள் மத்தியில் வீதிக்கு வந்துவிட்டது என பயந்த நிலையில் அதுக்கு கண்டனம் தெரிவித்து தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.

பாஜகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருமாவளவனுக்கு துணையாக தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக வின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் இப்படி மற்ற கட்சியினரையும் சேர்த்துக்கொண்டார் திருமாவளவன்.

அந்த கூட்டத்தில் பேசிய திருமாவளவன். 'தமிழ்நாட்டில் தொடர்ந்து பாஜகவினர் பதற்றத்தை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள். பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர். நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர். பாஜகவினர் மாட்டு மூத்திரத்தை குடிப்பார்கள். பசும்பாலை கொட்டுவார்கள் இதுதான் சனாதன தர்மம்.” என திருமாவளவன் ரொம்பவே காட்டமாக பாஜகவை விமர்சித்தார்.

இந்த போராட்டத்தில் பேசிய திருமாவளவன் பாஜகவை ரொம்பவே விமர்சித்து பேசிய காரணத்தினால் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை அதற்க்கு பதிலடித்தனமாக திருமாவளவன் அரசியலை ஒரே வார்த்தையில் விமர்சித்தார்.

இன்று பேசிய அண்ணாமலை, 'திருமாவளவன் முதலில் எங்கள் கட்சியில் இருக்கும் தடா பெரிய சாமியை வார்த்தைகளில் வெல்லட்டும், அவருடன் மோதட்டும் அவரிடம் மோதிவிட்டு பிறகு தேசிய அளவில் விஸ்வரூபம் என்று நிற்கும் பாஜகவை பற்றி பேசட்டும் இப்படி சும்மா பூச்சாண்டி காட்டும் வேலையெல்லாம் வேண்டாம்' எனக் கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலையின் இந்த பதில் திருமாவளவன் அவர்களை மீண்டும் தூங்க விடாமல் செய்துள்ளது, எப்படியும் அடுத்த ஒரு வாரம் முழுவதும் திருமாவளவன் போராட்டத்தில் இருப்பார் எனவும் தெரிகிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அதிலிருந்து விலகும் நிலையில் இருப்பதால் திமுகவை விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த பக்கம் திமுக கூட்டணியிடம் ஒத்துவரவில்லை, அந்த பக்கம் பாஜக எதிர்க்கிறது, பட்டியலின பாதுகாவலர் என்ற முகமூடியும் கழன்று விட்டது என திருமாவளவன் தற்போது கோபத்தில் இருக்கிறார் அதனால்தான் இவர் இப்படி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தனது இருப்பை காட்ட இப்படி போராடி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News