'அப்பாவை தேசிய அரசியலுக்கு அனுப்பிட்டா! முதல்வர் பதவி நமக்குத்தான்' - மாஸ்டர் பிளானுடன் உதயநிதி!
By : Mohan Raj
'அப்பா போதும்ப்பா! டெல்லி அரசியலுக்கு போங்க, இங்க நான் முதல்வர் பதவியை எடுத்துகிறேன்' அப்டின்னு உதயநிதி ஸ்டாலின் ஒரு ரகசிய திட்டம் போட்டு வர்றது அம்பலமாகிருக்கு.
திமுகவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் மறைந்த வரையில் திமுக தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டிருந்தார். எக்காரணத்தைப் கொண்டும் முதல்வர் பதவியும், திமுக தலைவர் பதவியும் தான் இருக்கும் வரை யாருக்கும் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார், அதன் காரணமாகத்தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இறந்த பிறகுதான் திமுக தலைவர் பதவி கிடைத்தது.
ஆனால் அப்பா கருணாநிதி போல் இல்லை முதல்வர் ஸ்டாலின்! அப்பா எப்படி தான் இருந்த வரையில் பதவி கொடுக்காமல் வைத்திருந்தாரோ அதேபோல் இல்லாமல் தான் இருக்கும் பொழுதே மகனுக்கு முக்கிய அமைச்சர் பதவி, கட்சியில் முடிவெடுக்கும் பொறுப்பு, இவ்வளவு ஏன் துணை முதல்வர் பதவி எல்லாவற்றையும் வாரி வழங்கி விட வேண்டும் என துடிப்புடன் செயல்படுகிறார்.
தமிழக அமைச்சரவையில் கூட உதயநிதி ஸ்டாலினுக்கு பத்தாவது அமைச்சர் என முக்கிய இடத்தை கொடுத்துள்ளார். மேலும் திட்ட அமலாக்க துறை என்னும் முக்கிய பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் தன் மகன் உதயநிதிக்கு வழங்கியுள்ளார்.
நம்ம பையன் தானே என்கின்ற ஆசையில் முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அனைத்தையும் கொடுத்து வருகிறார், அதற்கு திமுகவில் உள்ள அனைவரும் உதவி செய்து வருகின்றனர்! இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி மீது ஆசை வந்துள்ள காரணத்தினால் அப்பாவை எப்படியாவது தேசிய அரசியல் ஒதுக்கிவிட்டு முதல்வர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற திட்டம் திட்டி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலை மையபடுத்தி நடத்தப்பட்ட விழா அது.
அந்த விழாவில் பங்கேற்று பேசிய ஃபரூக் அப்துல்லா
எதிர்க்கட்சிகளை இணைக்கும் முக்கிய கருவியாக ஸ்டாலின் மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன். நாட்டை மேலும் வலுப்படுத்த கடவுள் அவருக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார், மேலும் அந்த விழாவில் திமுக அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'நீங்கள் கைகாட்ட வேண்டும் என கோபாலபுர இல்லத்திற்கு டெல்லி வந்து நிற்கும்' என்றார். எம்.பி ஆண்டிமுத்து ராசாவோ ஒரு படி மேலே போய் பிரதமரே நீங்கதான் தலைவரே என பேசி வைத்தார். இப்படி அனைவரும் ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு நகர்த்த திட்டமிடும் வேளையில் மாநிலத்தில் முதல்வர் பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கு தனியார் யூ ட்யூப் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் இது பற்றி கூறுகையில், 'அப்பாவை எப்படியாவது முதல்வர் பதவியிலிருந்து அப்புறப்படுத்திட்டு அந்த பதவியை பிடிக்கறது தான் உதயநிதி ஸ்டாலின் இப்ப பிளான் போட்டுட்டு இருக்காரு! அதனாலதான் இவரை தேசிய அரசியலுக்கு போங்க, தேசிய அரசியலுக்கு போங்க அப்டின்னு விரட்டிட்டு இருக்காங்க! இவர் தேசிய அரசியலுக்கு போயிட்டா பிரதமர் வேட்பாளர், கிங்மேக்கர் அப்டின்னு ஏத்திவிடலாம் இவரும் போய்டுவாரு. அப்படியே நம்ம அந்த முதல்வர் இடத்தை பிடிச்சிட்டு மாநிலத்தில் செட்டில் ஆகலாம்' என உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போலவே 2024 நாடாளுமன்ற தேர்தலும் இருக்கும்னு முதல்வர் ஸ்டாலின் வேற சூசகமா சொல்லிருக்கார்! பார்க்கலாம்!