Kathir News
Begin typing your search above and press return to search.

வட இந்திய தொழிலார்கள் விவகாரத்தை நைசாக பாஜக பக்கம் திருப்ப தி.மு.க சதி - பரபர தகவல்கள்!

வட இந்திய தொழிலார்கள் விவகாரத்தை நைசாக பாஜக பக்கம் திருப்ப தி.மு.க சதி - பரபர தகவல்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  5 March 2023 12:55 PM GMT

வட இந்திய தொழிலாளர்கள் மீதான விவகாரத்தை பாஜக மீது இருப்ப திமுக நிர்வாகி முயற்சி செய்தது அம்பலம் ஆகியுள்ளது.

தமிழகத்தில் தற்பொழுது பெரும்பாலான இடங்களில் வட இந்திய தொழிலாளர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக உணவகம், கட்டிட வேலை, மருந்தகம், சமைக்க, சுத்தம் செய்ய, தோட்டவேலை, பல்பொருள் விற்பனையகங்களில் வேலை என பல்வேறு இடங்களில் வட இந்தியர்கள் குறிப்பாக உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தராகண்ட், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி வேலை செய்கின்றனர்.

அதற்கு பல காரணங்கள் உள்ளன, வட இந்தியாவில் வேலை வாய்ப்புகள் குறிப்பாக அவர்கள் வாழும் மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருப்பதாலும், தமிழகத்தில் நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை நிறைவாக இருப்பதாலும் கொஞ்சம் கொஞ்சமாக வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை நம்பி இங்கு வேலைக்கு வருகின்றனர்.

ஒரு வட மாநில தொழிலாளி ஒரு வாரம் முழுவதும் தமிழகத்தில் வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் ஒரு வாரத்திற்கு 3500 அவரால் சம்பாதிக்க முடியும், இதே அவரது மாநிலத்தில் வேலை பார்த்தால் 1000 ரூபாய் 1500 ரூபாய் வரைதான் சம்பாதிக்க முடியும் இப்படி அவரது வருமானத்தை எண்ணி இங்கு தமிழ்நாடு வந்து வேலைக்கு வந்துள்ளார்கள். மேலும் தமிழ்நாட்டில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதும், வேலைக்கு அதிகமாக ஊதியம் கேட்பதும் பெருகி வருவதால் வட மாநில தொழிலாளர்கள் அந்த வேலைக்கு நியமிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஒரு நாளைக்கு கட்டிட வேலைக்குச் செல்லும் ஒரு ஆள் தமிழர் என்றல் அவர் கேட்கும் ஊதியம் தோராயமாக 1200 ரூபாய், வட மாநில தொழிலாளர்கள் 500 ரூபாய்க்கு என இரண்டு பேரை வைத்து அந்த வேலையை செய்ய முடியும்! இதன் காரணமாகவே வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் நிறைந்துள்ளார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் கலவரம் குறித்து வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதால் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் வட மாநில தொழிலாளர்களை பற்றியும், அவர்கள் தாக்கப்படுவதாகவும், அவர்கள் வேலையை பறிப்பதாகவும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தால் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்தது.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் வரும் ஏழாம் தேதி அன்று ஹோலி பண்டிகைக்காக தற்பொழுது அதிக அளவில் அவர்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். நமது தமிழ்நாட்டில் எப்படி தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து அவர்கள் சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பார்களோ அதேபோல் வடமாநில தொழிலார்கள் ஹோலி பண்டிகைக்காக அவர்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல புறப்படுவதால் ஒரு சில சமூக வலைதள பதிவுகளில் வட மாநில தொழிலாளர்கள் மொத்தமாக வெளியேறுகின்றனர் என்ற அவதூறு பரப்பப்பட்டு வந்தது.

இப்படி அவதூறு பரப்பப்பட்டு வந்த காரணத்தினால் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தது, இதே போல் அவதூறை பரப்ப வேண்டாம், அவதூறு பரப்புவது கூடாது, வட மாநில தொழிலாளர்களுக்கு நாம் தான் பாதுகாப்பளிக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது மட்டுமல்லாமல் காவல்துறை தொலைபேசி எண்களையும் பகிர்ந்தது. வட மாநில தொழிலாளர்கள் ஆகிய உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளது அச்சுறுத்தலை ஏற்பட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என அவர்களை ஆதரவாளிக்கும் விதமாக காவல்துறை அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சர்ச்சை குறித்து திமுக மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி இதுகுறித்து ட்விட்டரில், 'நம் ஊரில் வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகார் மாநிலம் முழுவதும் பீகார் பாஜக அவதூறு பரப்பி வருகிறது! தமிழ்நாட்டின் மீது அவதூறு பரப்பும் பீகார் பாஜகவை பற்றி வாய் திறக்க முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை யோசிக்கிறார். திட்டமிட்டு பாஜக கலவரம் செய்ய தூண்டுகிறது!!' என ராஜீவ் காந்தி ஒரு சர்ச்சை பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் குறித்து அண்ணாமலை தனது கருத்தை தெளிவாக கூறும் விதமாக, 'வட மாநில இளைஞர்களுக்கு விவகாரத்தில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கும். வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுளார் அண்ணாமலை. இப்படி வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் ஏற்படுவதை பாஜகவிற்கு எதிராக திருப்ப முயலும் திமுகவின் சதி அம்பலம் ஆகியுள்ளது.

எதற்கெடுத்தாலும் பாஜக தான் காரணம் என குற்றம் சாட்டியே பழக்கப்பட்ட திமுக வட மாநில தொழிலார்கள் விவகாரத்தையும் பாஜக மேல் பழி சுமத்த பார்க்கிறது என தற்பொழுது அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News