Kathir News
Begin typing your search above and press return to search.

'திராவிட புகழ் பாடிட்டு எதுக்கு ஆன்மீக வேஷம்' - சுகி சிவத்தை ஓடஓட விரட்டிய வலதுசாரிகள்!

திராவிட புகழ் பாடிட்டு எதுக்கு ஆன்மீக வேஷம் - சுகி சிவத்தை ஓடஓட விரட்டிய வலதுசாரிகள்!

Mohan RajBy : Mohan Raj

  |  9 March 2023 2:23 PM GMT

தீவிர திமுக ஆதரவாளரான ஆன்மீக பேச்சாளர் சுகி சிவத்தை கருத்து கேட்பு கூட்டத்தில் வலதுசாரிகள் கதற விட்டுள்ளனர்.

திமுக மேடைகளில் முதல்வர் ஸ்டாலின் புகழ் பாடி வலம் வருபவர் பேச்சாளர் சுகி சிவம், இவர் ஆன்மீக பேச்சாளர் என்ற பெயரில் பல இடங்களில் உரை நிகழ்த்தியுள்ளார். இந்த உரை நிகழ்த்தும் தருணத்தில் திராவிட ஆட்சி பற்றி அவ்வபோது புகழ்ந்து பேசுவார். இதன் காரணமாகவே இவருக்கு தமிழ் வளர்ச்சித்துறை விருது திமுக அரசு அமைத்த பிறகு வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2022ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றிய தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்த சமயம் 21 பேரில் ஒருவராக 2021 ம் ஆண்டிற்கான மறைமலையடிகளார் விருது பேச்சாளர் சுகி.சிவம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அளவிற்கு திமுக ஆதரவாளர் சுகி சிவம். இந்த சுகி சிவத்தை வலதுசாரிகள் கோவில் விவகாரத்தில் உங்களுக்கு என்ன வேலை என விரட்டிய சம்பவம் திராவிட பேச்சாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில்களில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருநெல்வேலி தனியார் மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்தார், மேலும் சிரவை குமரகுரு சுவாமிகள், பேரூர் மருதாச்சலம் அடிகள், பேச்சாளர் சுகிசிவம், அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இந்து முன்னணி, பாஜக உட்பட வலதுசாரிகளும், கட்சியினரும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என விரும்பியவர்கள், அதற்கு கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள், எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர். அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொரு கோயில்களில் இருந்தும் தலா 10 பேரை அழைத்துவந்து தமிழில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனவும் சர்ச்சை எழுந்தது.

இந்த நிகழ்ச்சி துவங்கியதும், ஒருவர் நிகழ்ச்சி குறித்து பேசும்போது கோயில் தொடர்பான கருத்து கேட்பு கேட்கிறீர்கள். ஏன் அந்த பேனரில் சாமி படம் இல்லை? குத்துவிளக்கு கூட இல்லாமல் கூட்டத்தை நடத்துவது சரியா? என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து அங்கு நெல்லையப்பர் படம் கொண்டு வந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுகிசிவம் பேச முற்பட்டபோது அவரை பேச விடவில்லை மேலும் சுகி சிவத்தை நீங்கள் திமுக ஆதரவாளர், நீங்கள் எப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவது பற்றி அதுவும் இந்துக்கள் ஆலய குடமுழுக்கு பற்றி எப்படி பேசலாம் என அங்கிருந்தவர்கள் ரவுண்டு கட்ட ஆரம்பித்துவிட்டனர்.

ஆன்மிக பேச்சாளர் என்ற போர்வையில் திமுக ஆதரவாளர்களாக வலம் வந்துவிட்டு ஏன் உங்களுக்கு இந்த வேலை? எதற்கு தேவையில்லாமல் நீங்கள் ஆன்மீக பேச்சாளர் என திராவிட புகழ் பாடுகிறீர்கள்? நீங்கள் ஆன்மீக பேச்சாளர் என்றால் ஆன்மீகத்தை மட்டும் பேச வேண்டும், அதை விடுத்து விட்டு மேடைக்கு மேடை திமுகவை பற்றி புகழ்ந்து பேசும் உங்களுக்கு எதுக்கு ஆன்மிகம்? எதுக்கு இந்து மத சடங்குகள் பற்றிய பேச்சு? இந்து மத வழிபாடு குறித்த கருத்து உங்களுக்கு ஏன்? என வலதுசாரிகள் சுகி சிவத்தை ரவுண்டு கட்ட துவங்கியது சுகிசிவம் அங்கிருந்து வெளியேற துவங்கினார், இந்த சம்பவம் சுகி சிவத்தை மட்டுமல்லாமல் திமுகவினரை சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் மற்றொரு சர்ச்சையாக இந்து மதம் சாராத ஒருவர் அங்கு தன் பெயரை மாற்றி மாற்று மதத்தை சேர்ந்த ஒருவர், அய்யப்பன் என படிவத்தில் பெயர் எழுதி கொடுத்திருந்தார். ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்தவர்கள் அவரது தோற்றத்தை வைத்து மாற்று மதத்தை சேர்ந்தவரை எப்படி உள்ளே அனுமதித்தீர்கள்? அவரை உள்ளே விட்டு அறநிலையத்துறை குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறதா என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அங்கு சர்ச்சை ஏற்படும் என கணித்தபின் அவரை போலீசார் வெளியேற்றினர்.

இப்படி திமுக ஆதரவாளர் சுகி சிவம் வெளியேற்றப்பட்டது, மாற்று மதத்தவர் இந்து சமய கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டது என இந்து சமய கருத்துக்கேட்பு கூட்டம் சலசலப்பில் முடிந்தது இந்து சமய அறநிலையத்துறை செயலை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News