Kathir News
Begin typing your search above and press return to search.

'யார்கிட்ட எங்க திராவிட தலைவன்கிட்டயேவா?' - முதல்வர் ஸ்டாலினை மீண்டும் வம்பில் கோர்த்துவிட்ட ஆ.ராசா!

யார்கிட்ட எங்க திராவிட தலைவன்கிட்டயேவா? - முதல்வர் ஸ்டாலினை மீண்டும் வம்பில் கோர்த்துவிட்ட ஆ.ராசா!

Mohan RajBy : Mohan Raj

  |  9 March 2023 2:23 PM GMT

அடிக்கடி ஏதாவது சர்ச்சையாக பேசி திமுகவை வம்பில் மாட்டி விடும் ஆராசா இந்த முறை முதல்வர் ஸ்டாலினை வடமாநில தொழிலாளர்கள் விவாகரத்தில் மீண்டும் வம்பில் மாட்டிவிட்டு இருக்கிறார்.

திமுகவின் நீலகிரி தொகுதி எம்.பி மற்றும் துணைப் பொதுச் செயலாளரான ஆ.ராசா எப்போதும் ஏதாவது சர்ச்சை கருத்தை கூறி திமுகவை வம்பில் மாட்டிவிடுவார், குறிப்பாக இந்து சமுதாய மக்கள் குறித்து இவர் கருத்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ஏதாவது சர்ச்சையாக குறிப்பிடுவதும் அதன் பின்னர் திமுகவின் ஆண்டிமுத்து ராசா பேசியதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதும் சகஜமாகிவிட்டது. இந்துக்கள் அனைவரும் பிறப்பிலேயே தவறு என ஒரு முறை திமுக எம்பி ஆ.ராசா கூறியது அவ்வப்போது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இதன் காரணமாக இந்துக்களை திமுக மிகவும் இழிவாக நடத்துகிறது என்ற கருத்தும் நிலவி வந்தது, ஏற்கனவே இந்துக்களின் விரோதி திமுக என முத்திரை விழுந்துள்ள நிலையில் அவ்வாறு திமுக மீது முத்திரை விழுந்ததற்கு திமுக எம்பி ஆர் ராசாவும் முக்கிய காரணம் என திமுகவிலேயே அவ்வப்போது பேச்சுக்கள் எழுத தொடங்கின.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் முதல்வர் ஸ்டாலினை சிக்க வைத்திருக்கிறார் திமுக எம்பி ஆ.ராசா, வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் தற்பொழுது தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது, அதுமட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் இந்த விவகாரம் தமிழகத்தை உற்று நோக்க வைத்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை, வட மாநில தொழிலாளர்கள் குறித்து பரவிய வதந்தி வடமாநில தொழிலாளர்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது என பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள், பிரதிநிதிகள் வந்து தமிழகத்தில் ஆய்வு செய்துவிட்டு அறிக்கை அளித்துவிட்டு போகின்றனர்.

இந்த நிலையில் வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்கும், இரு மாநிலங்களில் நிலவும் சர்ச்சையை தணிப்பதற்கும் தமிழகத்திற்கு வந்தார் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான். வடமாநில தொழிலார்கள் குறித்து தமிழகத்தில் இருந்து இருந்து விவரம் சேகரித்து இரு மாநிலத்திற்கும் அமைதி ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் வந்த அவர்.தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை சந்தித்து பேசும் திட்டமுடன் தமிழகம் வருகை புரிந்த அவருக்கு ஆளுநர் ஆர்.எஸ்.ரவி அவர்களை மட்டும் பார்ப்பதற்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்கியது. இதனை தொடந்து முதல்வர் ஸ்டாலினை பார்ப்பதற்கு சிராக் பஸ்வான் அனுமதி கோரினர் ஆனால் தலைமை செயலகத்தில் இருந்து இருந்து சிராக் பஸ்வானுக்கு முதல்வர் ஸ்டாலினை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அப்பொழுது சிராஜ் பிரஸ்வான் தமிழக முதல்வர் பார்க்க எனக்கு அனுமதி கிடைக்கவில்லை என கூறியது மட்டுமல்லலால் 'முதலமைச்சரின் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவுக்கு எங்கள் மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு சந்தித்து பேச நேரம் ஒதுக்கியதாகவும் ஆனால் மக்கள் பிரச்சனை தொடர்பாக சந்தித்து பேச நேரம் கேட்ட எனக்கு ஒதுக்கப்படவில்லை' எனவும் சிராக் பஸ்வான் கூறியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் வட மாநில தொழிலாளர்களை விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் அலட்சியமாக கையாளுகிறார் என்ற ரீதியில் கருத்துக்களை அனைவரும் மத்தியில் எழுப்பி வந்த நிலையில் தற்போது சிராக் பஸ்வான் வேறு இவ்வாறு கூறிவிட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அறிவாலயம் தரப்பில் இருந்து இதற்க்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சிராக் பஸ்வான் மீது திமுக எம்.பி ஆ.ராசா குற்றம் சுமத்தியுள்ளார், இது தொடர்பாக ஆ.ராசா விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் பணிபுரியும் அவர்களின், நிம்மதியைக் கெடுக்கும் வகையில் சுயநல அவதூறு அரசியலை பா.ஜ.க செய்வதும், அதற்கு மறைந்த மதிப்பிற்குரிய ராம் விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான சிராக் பாஸ்வான் துணை போவதும் கடும் கண்டனத்துக்குரியது. சிராக் பாஸ்வானை வைத்து நடத்தும் நாடகங்களையும் மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருக்கிற வடமாநிலத் தொழிலாளர்களிடையே, பா.ஜ.க-வின் விஷமத்தனப் பிரசாரத்துக்குத் துணைபோக வேண்டாம் என ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களது மகனுக்கு எச்சரிக்கையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்' என ஆ.ராசா குறிப்பிட்டுள்ளார்.

இப்படி வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஸ்டாலின் அலட்சியமாக நடந்து கொள்கிறார் என சிராக் பாஸ்வான் அறிக்கை விட்டதன் காரணமாக முதல்வர் ஸ்டாலினுக்கு தேசிய அளவில் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொள்கிறார் என கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் வேறு பீகாரில் இருந்து வருகை தந்த சிராக் பாஸ்வானை நேரில் சந்திக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இப்படி முதல்வர் முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் சிராக் பாஸ்வான் குற்றம் சுமத்தும்போது அவரை கண்டித்தும், வம்பிழுக்கும் வகையிலும் ஆ.ராசா அறிக்கை கொடுத்ததன் மூலமாக சிராக் பாஸ்வான் தரப்பை கோபப்படுத்தியுள்ளார். இதனால் சிராக் பாஸ்வான் தரப்பு தேசிய அளவில் முதல்வர் ஸ்டாலின் வட மாநில தொழிலாளர்கள் தொழிலாளர்கள் விவகாரத்தை அலட்சியமாக கையாளுகிறார் என எடுத்து செல்ல வாய்ப்புகள் அதிகம்.

ஏற்கனவே திமுக அரசை கலைக்க தேசிய அளவில் சதிகள் நடக்கிறது என முதல்வர் ஸ்டாலின் புலம்பும் வேளையில் இப்படி வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் ஸ்டாலினை சிக்க வைக்குமாறு திமுக எம்பி ஆண்டிமுத்து ராசா வம்பிழுத்து பேசியது அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News