'வேலைன்னு வந்துட்டா செந்தில்பாலாஜி' - உதயநிதி கொளுத்திப்போட்ட வெடியால் திமுகவில் ஏற்பட்ட கரைச்சல்!
By : Mohan Raj
'வேலைன்னு வந்துட்டா செந்தில் பாலாஜி தான் அப்படின்னா அப்ப நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்' என திமுகவில் மூத்த தலைவர்கள் மத்தியில் சலசலப்பு வெடித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி செந்தில்பாலாஜி ஆரம்பத்துல திமுகவில்தான் தனது அரசியல் பயணத்தை துவங்கினர், பின்னாளில் 2000மார்ச் 13ஆம் நாள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னர் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார், பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் மாவட்ட செயலாளர் போன்ற பொறுப்புகளைப் பெற்றார். 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 2011இல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தபோது போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் இருந்தும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்தும் 2015இல் ஜெயலலிதாவால் அரசியல் காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையில் டி. டி. வி. தினகரன் ஆதரவாளராக கொஞ்ச நாள் அமமுகவில் இருந்த இவர் 2018 திசம்பர் 14 அன்று மீண்டும் திமுகவில் இணைந்தார்
இப்படி ஐந்து கட்சிகள் மாறி தற்பொழுது திமுகவில் ஐக்கியமாகி முக்கிய இரு முக்கிய துறைகளை கையில் வைத்துக்கொண்டு அமைச்சர்களில் முதன்மை அமைச்சராக வரும் செந்தில் பாலாஜி திமுகவில் முதல்வர் மட்டுமல்ல முதல்வர் குடும்பத்திற்கே பிரியமான அமைச்சரா இருக்கார். இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி காங்கிரஸ்காரர்களே இறங்கி வேலை செய்யாத சமயத்தில் தானே இறங்கி வேலை செய்து அதிகாரிகளை சமாளித்து தேர்தலை வெற்றிகரமாக முடித்து திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். வெற்றியை தேடித்தந்தது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவுடன் இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா முதல்வர் ஸ்டாலினும், அவரது மகன் அமைச்சர் உதயநிதியின் கடின உழைப்பும் தான் எனக்கு கூறி தன்னடக்கமாக இருக்குறார்.
இப்படி தன்னகடக்கமாக செந்தில் பாலாஜி இருந்ததற்கு தற்பொழுது அதிக பலன் கிடைக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செந்தில் பாலாஜி பற்றிய புகழ்ந்து பேசி உள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி என்ன சொன்னாருன்னா, 'வேலைன்னு வந்துட்டா எல்லாரும் வெள்ளைக்காரன் சொல்லுவாங்க! ஆனா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் கிடையாது வேலைன்னு வந்து செந்தில் பாலாஜி தான் சொல்லுவேன். அந்த அளவுக்கு கட்சி வேலை அதுவும் தேர்தல் வேலைன்னு வந்துட்டா செந்தில் பாலாஜியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. மற்ற அமைச்சர்களை விட, மற்ற மாவட்ட செயலாளர்களை விட இறங்கி வேலையை பார்ப்பார்! அவரும் தூங்க மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார், அப்படி செந்தில் பாலாஜி அர்பணிப்புடன் பணியாற்றுகிறார் செந்தில் பாலாஜி மற்றவர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்' அப்டின்னு அமைச்சர் உதயநிதி பேசிருக்கார்.
இவர் இப்படி பேசினது தான் இப்ப பிரச்சினையா வெடிச்சிருக்கு! குறிப்ப திமுக மூத்த அமைச்சர்களை ரொம்பவே கோபப்படுத்தி இருக்கு. இத்தனை ஆண்டு காலம் திமுகவிலிருந்து உழைத்து கட்சியை இந்த அளவிற்கு கொண்டு வந்து கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த பொழுதிலும் திமுகவின் பிம்பத்தை மக்கள் மத்தியில் இருந்து காப்பாற்ற நாங்கள் எவ்வளவோ போராடி இன்று ஆளுங்கட்சி வரிசையில் வந்ததற்கு பிறகு அந்த பலனை அனுபவிக்க விடாமல் அனைத்து பேரையும் செந்தில் பாலாஜி எடுத்துக் கொண்டு செல்கிறாரே என கோபத்தில் உள்ளனர் திமுகவின் மூத்த அமைச்சர்கள்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் செந்தில் பாலாஜியை இப்படி புகழ்வது இனி வரும் காலத்திற்கு நல்லதல்ல! எவ்வளவு தூரம் போகட்டும் பார்க்கலாம், என திமுக அமைச்சர்கள் அதுவும் மூத்த அமைச்சர்கள் ரொம்பவே கோபமா இருக்காங்க. யார் என்ன கோபமா இருந்தாலும் எனக்கு கவலை இல்லை நாம போற ரூட்டே வேற அப்டின்னு செந்தில்பாலாஜி எல்லாரையும் ஓரங்கட்டிட்டே போய்ட்ருக்கார். குறிப்பா செந்தில்பாலாஜி திமுகவில் இருக்கும் முக்கிய மாவட்ட செயலாளர் முதல் கிளை கழக செயலாளர் வரை அடிக்கடி பணம் கொடுத்துட்டே வர்ராரு இது கண்டிப்பா ஒருநாள் பிரச்சினையில் வந்து முடியும் அப்ப தெரியும் செந்தில்பாலாஜி பத்தின்னு சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சவுக்கு சங்கர் ஒரு யூ ட்யூப் சேனல் பேட்டில சொன்னது வேற பலருக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கு!