Kathir News
Begin typing your search above and press return to search.

'கைக்கு அஞ்சு! வாய்க்கு பத்து!' அர்த்தராத்திரியில் தன்னிலை மறந்த ஆபாச திமுக எம்.பி அப்துல்லா - பரபர பின்னணி!

கைக்கு அஞ்சு! வாய்க்கு பத்து! அர்த்தராத்திரியில் தன்னிலை மறந்த ஆபாச திமுக எம்.பி அப்துல்லா  - பரபர பின்னணி!

Mohan RajBy : Mohan Raj

  |  13 March 2023 7:33 AM GMT

அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பொதுவெளியில் திமுக புதுக்கோட்டை எம்.பி அப்துல்லா தரை லோக்கலாக இறங்கி பேசிய விவகாரம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

படைப்பில் ஒரு சில விஷயங்கள் பிரிக்க முடியாதவை வானமும் நீல வண்ணமும்! பிரபஞ்சமும் நட்சத்திரங்களும்! சூரிய ஒளியும் வெப்பமும்! இப்படி அடுக்கி கொண்டே போகலாம் இந்த விஷயங்கள் எல்லாம் பிரிக்க முடியாதவை மட்டுமல்ல அது அந்த படைப்புகளின் குணாதிசயம், குணாதிசயத்தை என்றும் மாற்ற முடியாது! எப்படி இறைவனால் படைக்கப்பட்ட பொருள்களில் கூட அதை குணத்தை மாற்ற முடியாதோ அதுபோலத்தான் திமுக பேச்சாளர்களின் ஆபாச பேச்சுகளையும் மாற்ற முடியாது.

சமூக வலைதளம் 2010 களின் பிற்பகுதியில் தான் அதிக வீச்சில் மக்கள் மத்தியில் பரவத்துவங்கியது. அதற்கு முன்பிருந்த திமுகவின் பேச்சுக்கள் எல்லாம் சமூக வலைத்தளத்தில் ஆவணப்படுத்தினால் இன்று திமுக என்ற ஒரு கட்சியே பெண்கள் மத்தியில் துரத்தப்படும் கட்சியாக மாறியிருக்கும் அந்த அளவிற்கு திமுகவின் மேடை பேச்சுக்கள் வரலாற்று பிரசித்திபெற்றவை.

குறிப்பாக கட்சியை துவங்கிய அண்ணாதுரை முதல் தற்பொழுது மேடையில் பேசும் கடைமட்ட தொண்டன் வரை காதில் கேட்க முடியாத வார்த்தைகளை பேசுவதையே பெருமையாக நினைத்துக்கொண்டு பேசுவார்கள், அதனையும் பெருமையாக வேறு சட்டை காலரை தூக்கி ‘எப்படி பேசிட்டோம் பார்த்தியா, நாமெல்லாம் யாரு?’ என பெருமையாக கூறுவார்கள், அதனை கேட்டுகொண்டு தி.மு.க தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள், தி.மு.க தொண்டர்கள் குஷியாகி விசிலடிப்பார்கள். இது தி.மு.கவினர் ரத்தத்தில் ஊறியது என பலமுறை விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆரம்பகால அண்ணாதுரை நடிகை பற்றி நாராசமாக பேசியதும், கருணாநிதி திராவிட நாடு பற்றி உதாரணம் கூறுகையில் பாவாடை நாடா பற்றி பேசியதும், இதுபோல ஆரம்பக் காலகட்டத்தில் திமுகவின் பேச்சாளர்கள் பேசிய பேச்சுக்களை நிறையவே கூறலாம், வெற்றி கொண்டான், தீப்பொறி திருமுகம் இவர்கள் எல்லாம் பேச ஆரம்பித்தால் இன்றைய குழந்தைகள் youtube-யில் கூட அந்த பேச்சுக்களை கேட்க முடியாது. அப்படி இருக்கும் திமுக பேச்சாளர்கள் பேச்சுக்கள்.

அதன் பிறகு ஸ்டாலின் ஜெயலலிதா அம்மையார் பற்றி பேசியதும், அவரது மகனும், தற்போதைய தி.மு.க'வின் அமைச்சர் உதயநிதி சசிகலா அம்மையார் காலில் எடப்பாடி விழுந்ததை குறித்து அவதூறாக பேசியதும், சமீபத்திய சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி தயார்பற்றி தி.மு.க'வின் எம்.பி ஆ.ராசா அவதூராக பேசியதும் தி.மு.க'வின் ஆபாச பேச்சுகளுக்கான வரலாற்று சுவடுகள்.

சரி தலைவர்கள் தான் இப்படி பேசுகிறார்களே நாம மட்டும் என்ன சளைத்தவர்களா என தி.மு.க'வின் பேச்சாளர் சைதை சாதிக் தி.மு.க நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பா.ஜ.கவில் உள்ள பெண்களை குறிப்பாக நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதால் டெல்லி சென்ற தேசிய மகளிர் ஆணையத்திடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு சமீபத்திய சாதனை, அதனை தொடர்ந்து புது பீஸ் உடன்பிறப்பெல்லாம் இப்படி பேசுனா நாஸ்டால்ஜியா பீஸ் உடன்பிறப்பு நாங்க எப்படி பேசுறோம் பார்க்குறியா என திமுகவின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும் மிகவும் மோசமாக பேசினார்.

இதனை பார்த்து ஜீன்களில் உறைந்த காரணத்தினால் அந்த வழியே வந்த தற்கால திமுகவினரும் அதனை தவறாமல் பின்பற்றி வருகின்றனர். பொதுவெளியில் பேசுகிறோமே! மக்கள் பிரதிநிதியாக பேசுகிறோமே மக்களிடத்தில் ஓட்டு கேட்க செல்ல வேண்டுமே! ஏற்கனவே கையெடுத்து கும்பிட்டு ஓட்டு வாங்கினோமே! அந்த கையெடுத்து கும்பிட்டதற்கு தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்ற கொஞ்சம் கூட நினைப்பும் இல்லாமல் தன் வாயில் வந்ததை அப்படியே பேசி விடுகிறார்கள் திமுகவினர்.

அப்படி திமுக புதுக்கோட்டை எம்பி அப்துல்லா பேசியது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, மூத்த பத்திரிகையாளராக தொடர்ந்து பரபரப்பாக இயங்கக்கூடியவர் சவுக்கு சங்கர், இவர் அனைத்து கட்சிகளையும் விமர்சித்து அரசியல் விமர்சகராக தனது சமூக வலைதள பதிவுகள் மூலமும், யூடியூப் சேனல் நேர்காணல்கள் மூலமும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இவரது நேர்கானல்களை தற்பொழுது முன்பை விட அதிக அளவில் மக்கள் பின் தொடர துவங்கிவிட்டனர். இவர் திமுக அரசை விமர்சித்த காரணத்திற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு 63 நாட்கள் சிறையில் இருந்தார், குறிப்பாக ஒற்றை எழுத்து நிறுவனத்தை விமர்சித்தது, அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்தது, இது எல்லாவற்றிற்கும் மேலாக பட்டத்து இளவரசர் உதயநிதியை விமர்சித்து போன்ற காரணங்களுக்காக இவர் 63 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்துவந்தார்.

ஆனால் பிணையில் வெளியில் வந்த பிறகுதான் இவரின் பேச்சு இன்னும் அதிகமானது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் இவரின் பேச்சுக்களால் தூக்கம் தொலைத்த திமுகவினர் இணையத்தில் கூச்சலிட்டு வருகின்றனர். இதெற்கெல்லாம் மேலாக ஒரு மக்கள் பிரதிநிதி என்பதை மறந்த திமுகவின் எம்பி அப்துல்லா தானே போய் ஆபாசமாக பேசிய விவகாரம் பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

சவுக்கு சங்கரின் சமூக வலைதள திமுக விமர்சன பதிவை குறிப்பிட்டு திமுக எம்.பி அப்துல்லா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், தன்னை பிம்ப் போல சின்னமலை ஐ.டி டீம் ஃபோட்டோஷாப் செய்ததாக சவுக்கு சொல்கிறாரே? சின்னமலை டீம் செய்து இருந்தால் மெரினா பீச் பின்ணணியில் ‘கைக்கு அஞ்சு வாய்க்கு பத்து’ என போட்டு இருப்பார்கள். இவ்வளவு டீசண்டா பண்ணிருக்க மாட்டாங்க!! எனவே அவர்கள் அல்ல என மிகவும் கேவலமாக எம்.எம்.அப்துல்லா பதிவிட்டார்.

அதனை குறிப்பிட்ட சவுக்கு சங்கர், 'இவனெல்லாம் எம்பி. நல்ல ஆளை எம்.பி ஆக்கிருக்கீங்க' முதல்வர் ஸ்டாலினை குறிப்பிட்டு சவுக்கு சங்கர் பதில் ட்வீட் போட்டார். இப்படியே தொடர்ந்த சமூக வலைதள பதிவுகள் இரண்டு மணி நேரம் நீடித்தது.

குடியரசு தின அரசு நிகழ்ச்சியில் 30 நிமிடம் உட்கார முடியாமல் பாதியில் அலட்சியமாக நிகழ்ச்சியை புறக்கணித்து சென்ற எம்.பி தொடர்ந்து இரண்டு மணிநேரம் சமூக வலைதளத்தில் சவுக்கு சங்கருடன் நேரத்தை சவுண்டுவிட்டு செலவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணிவரை இணையத்தில் சண்டை போட்ட எம்.பி உங்களுக்கு எம்.பி சீட் எப்படி கிடைத்தது தெரியுமா என சவுக்கு சங்கர் கேள்வி கேட்கும் வரை தொடர்ந்தது.

இப்படி மக்கள் உலாவும் சமூகவலைத்தளத்தில் தான் ஒரு எம்.பி என்பதை மறந்து சுயநினைவின்றி திமுக எம்.பி ஆபாசமாக பேசியது தொடர்பாக இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, மக்களும் இதெல்லாம் என்ன கூத்து என தலையில் அடித்து கொள்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News