'நானும் உழைச்சுட்டு தான் கட்சியில் வளர்ந்தேன்' - உதயநிதி புலம்பிய பின்னணி!
By : Mohan Raj
திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் வளரும் தலைவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை உதயநிதி புலம்பும் அளவிற்கு சென்றுள்ளது.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு திமுக தலைவர் பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் ஏற்றார். ஏற்ற அடுத்த மூன்று ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வந்தது, சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக முதல்வராக பதவி ஏற்றார். முதல்வராக பதவி ஏற்ற வரையில் திமுக கட்சியின் வளர்ச்சி நல்ல பாதையில் சென்று கொண்டிருந்தது.
அதன் பிறகு தான் வேலையே ஆரம்பித்தது குறிப்பாக முதல்வர் பதவியை திமுகவின் தலைவர் ஸ்டாலின் ஏற்றவுடன் அவர் தன்னை முன்னிலைப்படுத்துவதை விட அதிகமாக அவரது மகன் உதயநிதியைத்தான் முன்னிலைப்படுத்தினார். இது திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது! காரணம் 93 வயது வரை வாழ்ந்த கருணாநிதி கூட தான் இறக்கம் தருவாயில் கூட யாரையும் முன்னிறுத்தி அரசியல் செய்யவில்லை தான் மரணப்படுக்கையில் கூற தன் தலைமை பொறுப்பை விட்டுக் கொடுக்கவில்லை.
அவர் இறப்பதற்கு முன்னால் நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கூட தன்னைத்தான் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டார். 85 வயதிலும் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக் கொண்டு சட்டமன்ற தேர்தல் வேலைகளை பார்த்தார் கருணாநிதி, ஆனால் முதல்வர் ஸ்டாலினோ இப்படி முதல்வரான ஒரே ஆண்டில் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் வேலையை செய்கிறார் என மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். இதன் காரணமாக திமுகவில் மூத்த தலைவர்கள் வளரும் தலைவர்கள் மத்தியில் பிரிவு ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
குறிப்பாக திருச்சியில் கே.என்.நேரு என்றால் ஒரு அணி என்றால் மற்றொரு அணி அன்பில் மகேஷ் இதேபோல் பொன்முடி, ஏ.வ.வேலு, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி போன்ற மூத்த தலைவர்கள் எல்லாம் ஓர் அணியாகவும், இந்த பக்கம் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, உதயநிதி போன்ற ஒரு வளரும் தலைவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் திமுகவில் தற்போது இளைய தலைவர்களின் கை தான் ஓங்கி இருக்கிறது, குறிப்பாக செந்தில் பாலாஜியின் கை மற்ற எல்லாத்தையும் விட ஓங்கி இருக்கிறது! அமைச்சர் அன்பில் மகேஷ் திமுகவில் முக்கிய தலைவராக வலம் வருகிறார், முதல்வர் குடும்பத்துடன் இவர் இருக்கும் அளவிற்கு மத்த அமைச்சர்கள் யாரும் நெருக்கமாக இல்லை, அந்த அளவிற்கு அன்பில் மகேஷ் அவர்களின் பவர் தற்பொழுது திமுகவில் உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருக்கும் காரணத்தினாலும் அன்பில் மகேஷ் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இப்படி ஒரு புறம் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலும், இன்னொரு புறம் முதல்வர் குடும்பம் மற்றும் அதிகார மையத்தில் அன்பில் மகேஷ் தலையிடுவதாலும், மற்றொருபுறம் உதயநிதி முதல்வரின் மகன் உதயநிதி தான் முக்கிய பவர் சென்டராக இருந்து வருவதாலும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே புலம்பி வருகின்றனர்.
இப்படி குடும்பம், இளைய தலைமுறையினர் என்று இருந்தால் இத்தனை ஆண்டுகளாக கட்சியை கட்டி காப்பாற்றியது யார்? கருணாநிதியே எங்களை கேட்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டார்! அமைச்சரவில் எந்த ஒரு மாற்றமும் செய்ய மாட்டார்! இது சரியா என அனைவரையும் மதித்து கேட்பார்! ஆனால் தற்பொழுது கட்சியின் பவர் சென்றாக விளங்கி வரும் உதயநிதி எந்த ஒரு முடிவும் எங்களைக் கேட்டு எடுப்பதில்லை, கட்சியாக இருந்தாலும் சரி, ஆட்சியாக இருந்தாலும் சரி அவர்களே முடிவெடுக்கிறார்கள் அவர்களே அறிவித்துக் கொள்கிறார்கள் இப்படி இருக்கையில் நாங்கள் எங்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது! என சில மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே புலம்பி வருகிறார்கள்.
இப்படி மூத்த தலைவர்கள், வளரும் தலைவர்கள் மத்தியில் திமுகவில் வெடித்து வந்த பனிப்போர் சற்று அதிகமாகியுள்ளது. அதன் காரணமாகத்தான் உதயநிதி நானும் உழைத்துத்தான் கட்சியில் வளர்ந்தேன் என கூறியது திமுகவில் நிகழும் பனிப்போரை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
தான் நடித்த கண்ணை நம்பாதே பட நிகழ்ச்சியில் உதயநிதி பேசிய சமயம், கண்ணை நம்பாதே படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த போது நான் அரசியலுக்கு வருவேனா என்றே தெரியாது. கட்சியில் மட்டுமே இருந்தேன்.. முதல் ஷெட்யூல் முடித்த பிறகு எம்பி தேர்தல் பிரசாரத்திற்குச் சென்றேன். அதன் பிறகு சட்டசபை உறுப்பினர். அதன் பிறகு எம்எல்ஏ இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன். நான் ஒரே பாடலில் பெரிதாகிவிட்டேன் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், உழைத்துத் தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்' என்று அவர் தெரிவித்தார்.
மூத்த தலைவர்கள் உதயநிதியின் பவர் சென்டர் காரணமாக அதிருப்தியில் இருக்கும் வேளையில் உதயநிதி நானும் உழைத்துத்தான் திமுகவில் வளர்ந்துள்ளேன் என கூறியது திமுகவில் நிகழும் பனிப்போரை வெளிச்சம் போட்டு உலகத்திற்கு காட்டியுள்ளது.