Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் திமுக'விற்கு ஆளுநர் போட்ட ஸ்கெட்ச் - பரபர தகவல்கள்!

ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் திமுகவிற்கு ஆளுநர் போட்ட ஸ்கெட்ச் - பரபர தகவல்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  15 March 2023 3:47 AM GMT

ஆன்லைன் சூதாட்டம் தடை விவகாரத்தில் திமுக அரசுக்கு ஆளுநர் ரவி போட்டுள்ள ஸ்கெட்ச் விவகாரம் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.


திமுக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது, அந்த குழு அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா அக்டோபர் 19ம் தேதி நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28ம் தேதி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் சட்ட மசோதா குறித்து, கடந்த 24ம் தேதி கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு ஏற்பட்டிருக்கிற சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் தயாரித்து, கடந்த 25ம் தேதி கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆனாலும், கவர்னர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என திமுக தரப்பில் கூறப்பட்டது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆராய்ந்து அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து இது கண்டிப்பாக நீதிமன்றத்தில் சட்டமாக நிற்காது, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இதில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி மீண்டும் அமலுக்கு வந்துவிடும் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கூறி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இதன் பின்னணியில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் மாஸ்டர் பிளான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூதாட்ட தடையை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்யும், இப்படி அவர்கள் தீவிரமாக அரசியல் செய்து மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தை அவர்கள் கண்டிப்பாக மசோதாவாக மீண்டும் தாக்கல் செய்து அனுப்புவார்கள். அப்பொழுது மீண்டும் சட்டமாக இயற்றப்பட வேண்டும் என விதிமுறைகள் இருப்பதால் இதை வைத்து ஆளுநர் ஒரு ஆட்டம் ஆட திட்டமிட்டுள்ளார்.

இப்படி மீண்டும் திமுக மசோதாவை தாக்கல் செய்து அதனை சட்டமாகும் வேளையில் அதனை ஆளுநர் மாளிகை சட்டப்படி அந்த மசோதாவை கையெழுதிட்டு அனுப்பிவிடும். பிறகு அதில் உள்ள சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் அந்த தடையை உடைத்துவிடும். இப்படி ஆன்லைன் நிறுவனங்கள் தடையை உடைத்தால் மக்கள் மத்தியில் திமுக ஆடிய நாடகங்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என ஆளுநல் மாளிகை கணக்கு போட்டு வருவதாக தெரிகிறது.

திமுக அரசின் ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் உள்ள இந்த முகமூடியை மக்களுக்கு புரிய வைப்பதற்காகவும் ஆளுநர் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி இவர்கள் கொண்டுவரும் சட்டத்தை எல்லாம் என்னால் எப்படி அனுமதிக்க முடியும்? அனுமதிக்க முடியாது, மேலும் இவர்கள் இப்படி அவசர சட்டம் கொண்டு வருவதனால் யாருக்கு என்ன பயன் ஏற்படுகிறது என்பதை விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இதுதான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில் ஆளுநரின் அதிரடி நடவடிக்கை என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இப்படி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா விவகாரத்தில் திமுக அரசுக்கு ஆளுநர் ஸ்கெட்ச் போட்டு வருவது தமிழக அரசியல் அடுத்து என்ன நடக்குமோ என அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News