'ஒழுங்கா கூட்டணியில் இருக்கனும் இல்லன்னா அவ்ளோதான்', திருமாவளவனை மிரட்டிய திமுக! - பரபர பிண்ணனி!
By : Mohan Raj
போன வாரம் வரை திமுகவை எதிர்த்து பேசி வந்த திருமாவளவன் தற்பொழுது பாராட்டி பேசியுள்ளதின் பின்னணியில் திருமாவளவன் அறிவாலயத்தில் மிரட்டப்பட்டாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
திமுக கூட்டணியில் கடந்த இரண்டு மூன்று தேர்தலாக திருமாவளவன் இருந்து வருகிறார். 2019 தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் கடந்த 6 ஆண்டு காலமாக திமுக கூட்டணியில் திருமாவளவன் இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீப காலமாக திருமாவளவன் திமுக கூட்டணி இடையே விரிசல் எழ துவங்கியது. குறிப்பாக திருமாவளவனை சுதந்திரமாக திமுக கூட்டணி செயல்படவில்லை எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக அரசு நினைக்கக்கூடிய ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம், மத்திய அரசு எதிர்ப்பு போராட்டம் இதுபோன்ற போராட்டத்தை மட்டுமே திமுக அரசு செய்ய சொல்வதாக வேலை வாங்குவதாக கூறி சிறுதலை சிறுத்தைகள் கட்சியில் எழுந்த சலசலப்பு காரணமாக திமுக கூட்டணியை திருமாவளவன் மெல்ல எதிர்க்கத் தொடங்கினார்.
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் எம்பி பதவி வேண்டுமென்றால் அதற்கு திமுக கூட்டணியிடம் சென்றால் தனக்கு மீண்டும் உதயசூரியன் போட்டியில் போட்டியிட கண்டிப்பாக கூறுவார்கள், எதிர்க்கட்சியாக இருந்த பொழுதே இவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறி நிர்பந்தித்தனர் இப்பொழுது ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது கண்டிப்பாக இவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கூறுவார்கள் என்று திருமாவளவன் அரசியல் கணக்கு போட்டு திமுக கூட்டணியை எதிர்த்து பேசி வந்தார்.
குறிப்பாக கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டம் கூட்டத்தில் மேடையில் இடதுசாரிகளை வைத்துக்கொண்டு 'பதவி என் தலை முடிக்கு சமம்! திருமாவளவனை பதவியை காட்டி வளைத்து விடலாம் என நினைக்க முடியாது' என மறைமுகமாக ஸ்டாலினை தாக்கி பேசினார். இந்த நிலையில் இப்பொழுது ஸ்டாலினை தாக்கி பேசிய திருமாவளவன் திடீரென பின்வாங்கும் விதமாக முதல்வர் ஸ்டாலினை ஆதரித்து பேசியுள்ளார்.
கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்தார் சந்தித்த பிறகு தனியார் ஊடகத்துக்கு பேட்டியளிக்கையில் என்ன கூறினார் என்றால்,'பாஜக இருக்கும் இடத்தில் இருக்கமாட்டாம் என்று மீண்டும் மீண்டும் கூறி உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் அதிமுக, பாஜக பக்கம்தான் போவார்கள், எனவே அதிமுக பக்கம் போவதற்கு எங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தவே சொல்கிறேன். நாங்கள் மக்கள் பிரச்சனைக்கு போராடுகிறோம் என்று புரிந்துகொள்ளாமல், எதோ திமுகவுக்கு ஒரு சிக்னல், அதிமுகவுக்கு ஒரு சிக்னல் தருகிறோம் என்று புரிந்துகொள்கிறார்கள். அதை நான் மறுக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனால், பாஜக, பாமக இருக்கும் இடத்தில் ஒருக்காலும் இருக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். திமுக தலைமையில் அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியை வலிமைப்படுத்தவேண்டும், இதில் நான் தெளிவாக இருக்கிறேன். திமுக கூட்டணியில்தான் இருப்பேன், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக எதிர்ப்பு சக்திகள் இணைந்த கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியை செய்யவேண்டும். அந்த ஒருங்கிணைக்கும் பணியை எங்களால் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்ற முறையில் ஸ்டாலினால் செய்ய முடியும்' என பேசினார்.
இப்படி போன வாரம் வரை திமுக எதிர்த்து பேசி வந்த திருமாவளவன் இந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசும் காரணம் என்ன இதன் பின்னணியில் திமுக திருமாவளவனை மிரட்டியதா அல்லது திருமாவளவன் திமுகவிலிருந்து விலக வாய்ப்பு இல்லாதபடி ஏதேனும் சம்பவங்கள் நடந்துள்ளதா எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றன. போன வாரம் வரை முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசிவிட்டு இந்த வாரம் திருமாவளவன் ஸ்டாலின் புகழ்ந்து பேசும் திருமாவளவனின் அரசியல் செயல்பாடு பல்டி அடிக்கும் விதமாக உள்ளது.