Kathir News
Begin typing your search above and press return to search.

ஒன்றுமே தெரியாமல் உளறிக்கொட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் - 'பல் இளிக்கும்' பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள்

ஒன்றுமே தெரியாமல் உளறிக்கொட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் - பல் இளிக்கும் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள்

Mohan RajBy : Mohan Raj

  |  19 March 2023 10:40 AM GMT

பள்ளிக்கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவெடுக்க தெரியாமல் திணறி வருவதால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் வரும் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித்துறை இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது, குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் மாணவர்கள் வருகை பதிவேடு, மாணவர்கள் பாதியில் கல்வியை விட்டு விலகுவது, அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வி முறை, அரசு பள்ளி மாணவர்களை உருவாக்குவதில் ஏற்பட்ட தொய்வு, மாணவர்களின் நலன் ஆகியவை என இப்படி எல்லாமே கேள்விக்குறியாகி வருகிறது.

இதெற்கெல்லாம் பின்னணியில் அமைச்சர் அன்பில் மகேஷ் விவரம் புரியாத, பள்ளிக்கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அமைச்சராக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் விவரம் புரியாமல் மாணவர்கள் வருகை பதிவேடு விவகாரத்தில் எதுவுமே புரியாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் உளறியதும் அம்பலம் ஆகியுள்ளது.

கடந்த 4 நாட்கள் முன்பு பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு ஆரம்பமாகியது. இந்த பொதுதேர்வின் முதல் நாளில் தமிழ் தேர்விற்கே 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராமல் அப்சென்ட் ஆகியது அம்பலம் ஆகியது, மேலும் அடுத்த நாள் நடந்த ஆங்கிலம் தேர்வுக்கு அதே மாதிரி 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அதாவது தேர்வு எழுத விண்ணப்பித்து, ஹால் டிக்கெட் வரை தயாராகி, அவர்களுக்கு வரிசை எண் கூட அனைத்தும் கடந்த மாதம் வரை விநியோகிக்கப்பட்டுள்ளது. இப்படி கடந்த மாதம் வரை வரிசை எண், ஹால் டிக்கெட் என அனைத்தையும் [பெற்ற மாணவர்கள் இப்படி தேர்வுக்கு வராமல் அதுவும் 50 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வு எழுதாமல் இருந்தது மிகவும் சிக்கலான விஷயம்,

இந்த சம்பவம் குறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், 'தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்கள் பள்ளிகளுக்கு குறைந்த நாட்களே வந்திருந்தாலும், அவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேர்வு எழுத வைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம். அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிகளில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற விதிகள் இருந்தாலும் கூட, இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள், இனியும் அனுமதிக்கப்படுவார்கள்' என பேசினார்.

என்ன 2 நாள் வந்தால் கூட ஹால் டிக்கெட் கொடுப்போம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சரே கூறியது கல்வியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் விஷயத்தின் விபரீதத்தை தாமதமாக உணர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அடுத்த நாளே இந்த விவகாரத்தில் பல்டி அடிக்கும் விதமாக மாற்றி பேசியுள்ளார்.

தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், 'பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடக்காது. அப்படி விதிமுறைகள் மாற்றப்பட்டால், மாணவர்கள் பள்ளிகளுக்கு வர மாட்டார்கள். இனி 75 சதவிகிதம் வருகை பதிவேடு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதில் வரும் கல்வியாண்டில் எந்த மாற்றமும் இருக்காது' என அப்படியே மாற்றி கூறினார்.

இப்படி முதல் நாள் ஒன்று கூறி அடுத்த நாள் அதனை இல்லை என அமைச்சர் மறுத்துள்ளது இவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தானா? இவருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பு இருக்கிறதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இப்படி அமைச்சரே முதல் நாள் கூறியதை அடுத்த நாள் இல்லை என மறுத்து பேசுகிறார் நான் அப்படி சொல்லவே இல்லையே என கூறுகிறார் என்றால் அமைச்சரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? அமைச்சரின் கீழ் துறை செயல்படும் துறை எப்படி இருக்கும்? இந்த நிலையில் அமைச்சர் இருந்தால் அமைச்சருக்கு கீழ் செயல்படும் துறை! அதனை நம்பி படிக்கும் மாணவர்கள்! மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் இவர்களின் எதிர்காலம் என்ன ஆவது என்ற கேள்வியை மக்கள் இப்பொழுது முன்வைத்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News