Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை போட்ட ஸ்கேட்ச் - சிக்கியது யார்?

அண்ணாமலை போட்ட ஸ்கேட்ச் - சிக்கியது யார்?
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 March 2023 7:19 AM GMT

தமிழக பாஜக வளரவேண்டும் என நினைபபவர்கள் யார்? தமிழக பாஜக பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது யார் என தெரிந்துகொள்ள அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது.

தமிழக அரசியல் களம் தற்பொழுது பாஜகவை சுற்றியே நகர்கிறது என கூறலாம், குறிப்பாக தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள்? யார் வெளியில் செல்கிறார்கள்? யார் என்ன கருத்தை கூறுகிறார்கள்? என மற்ற கட்சிகள் அதனை விமர்சித்தோ, ஆதரித்தோ பேசி அரசியல் செய்யும் நிலையில் தான் தற்பொழுதைய தமிழக அரசியல் உள்ளது. தமிழக பாஜக தான் தற்பொழுது பேசுபொருளாக ஆகிவிட்டது, இவ்வளவுக்கும் தமிழக பாஜக ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது தமிழகத்தில். இப்படி பாஜக தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறிவர காரணம் அண்ணாமலை என்ற இளைஞரின் தமிழக பாஜக தலைமை, ஜே.பி.நட்டாவும், அமிஷாவும், பி.எல்.சந்தோஷும் எதை முன்னிறுத்தி அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தார்களோ அதற்கு உண்டான காலம் தற்பொழுது நெருங்கிவிட்டது.

தமிழக பாஜக இத்தனை ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும், இல்லையேல் தனித்து நிற்கும் ஆனால் பெருமளவில் மக்கள் பிரதிநிதிகளை பெற முடியாத நிலையில் இருந்து வந்தது என்றே கூற வேண்டும். தமிழக பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் பொழுது அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேறு மாதிரி இருக்கும், திமுக கூட்டணியில் இருக்கும் பொழுது பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேறு மாதிரி இருக்கும். ஆனால் தற்பொழுது தமிழக பாஜக அதனை எல்லாம் தகர்த்துவிட்டு கூட்டணி அமைந்தால் அது பாஜக தலைமையில் தான், இப்படி தமிழக பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால்தான் பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரும் என்ற நிலையை எட்டி உள்ளது. இதற்கு அண்ணாமலை போட்ட திட்டமும் ஒரு முக்கிய காரணமாகும், குறிப்பாக தற்பொழுது உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி எப்படியும் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத எதிர் கூட்டணியில் தான் 2024 தேர்தலை சந்திக்கும். அதிமுக கூட்டணி தற்பொழுது இருக்கும் இரட்டை தலைமை முடிவிற்கு வந்த உடன் திமுகவை எதிர்ப்பதை பிரதானமாக வைக்குமே தவிர தேசிய அரசியலில் என்றுமே அதிமுக பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை.

அதிமுகவை பொறுத்த வரையில் மக்கள் மத்தியில் நாங்கள் எம்ஜிஆர் துவங்கிய கட்சி, ஜெயலலிதா வழி நடத்திய கட்சி திமுகவின் எதிர்ப்பே எங்கள் நிலைப்பாடு என்கிற ரீதியில் அரசியல் செய்து தான் வருமே தவிர தேசிய அரசியலில் பெரிய அளவில் அதிமுக என்றுமே ஈடுபட நினைத்ததில்லை, ஈடுபடமும் ஈடுபடாது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் தேசிய அரசியலில் பங்கு பெற விரும்பும் கட்சிகளான புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, அமமுக இது போன்ற கட்சிகள் தங்களுடைய பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டும் என நினைக்கும் கட்சிகளாகும்.

இந்த கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு புதிய கூட்டணியை பாஜக தலைமையில் அமைக்கும் பட்சத்தில் பாஜக பிரதான கட்சியாகவும் இருக்கும், மக்கள் பிரதமர் மோடி தான் 3 வது முறையாக வர வேண்டும் என நினைக்கும் சமயத்தில் பாஜக கூட்டணியை ஆதரிக்க செய்வார்கள் அதனாலதான் அண்ணாமலை தற்பொழுது காய்களை நகர்த்தி வருகிறார். இந்த சூழலில் அண்ணாமலை நகர்த்தும் காய்களை ஒரு சிலர் பாஜக ஆதரவாளர்களாக காண்பித்துக் கொண்டு அண்ணாமலை செய்வது சரியில்லை, பாஜக கூட்டணியுடன் தான் இருக்க வேண்டும், அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? அண்ணாமலை ஏன் கூட்டணியை விட்டு விலக நினைக்கிறார்? என்கிற ரீதியில் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.


இது அண்ணாமலைக்கு கட்சியில் யார் யாரெல்லாம் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்கள். யாரெல்லாம் இப்படியே இருந்தால் போதும் என நினைக்கிறார்கள் என கண்டறிய நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. காரணம் பாஜகவில் தலைவர் பொறுப்பை அண்ணாமலை கையில் எடுத்த சமயம், 'எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது, நான் எனக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தமிழகத்தில் பாஜகவை பிரதான கட்சியாக கொண்டு வருவேன்' என சபதம் எடுத்து அந்த சமயத்தில் தலைவர் பொறுப்பிற்கு வந்தார்.

இதனால்தான் பாஜக அடுத்த கட்டத்திற்க்கு நகர வேண்டும், நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றால் முதலில் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும், முதலில் கூட்டணி இருந்து வெளியே வரவேண்டும் என்றால் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் மட்டுமே பாஜக தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலர வைக்க முடியும் அதனை விடுத்து நம் மற்ற கட்சி கூட்டணியில் ஒட்டிக் கொண்டு இருந்தால் தமிழகத்தில் பாஜக என்றைக்கும் தனியாக வளரவே வளராது, நமது சித்தாந்தம் இங்கே தமிழ்நாட்டில் இறங்க வேண்டும் என்றால் அதற்க்கு பாஜக தலைமையிலான கூட்டணி வேண்டும் என நினைத்து அண்ணாமலை முழுவதும் செயல்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக தற்பொழுது கூட்டணியில் நான் இருக்கப் போவதில்லை என அண்ணாமலை கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அண்ணாமலை கூட்டணியில் இருந்து பிரிந்தால் யாரெல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள் எனவும், கூட்டணியில் இருந்து பிரிந்தால் யாரெல்லாம் அதற்கு மறுக்கிறார்கள் எனவும் அண்ணாமலை அனைவரையும் கவனித்து வருகிறார் கூட்டணியில் பிரிந்தால் வாருங்கள் நம் தனியாக களம் காணலாம் என்பவர்கள் கட்சிக்காக வேலை செய்பவர்கள், கட்சி வளரவேண்டும் என நினைப்பவர்கள் என்றும்! கூட்டணியில் இருந்து பிரிந்தால் ஏன் நாம் தனியாக பிரிய வேண்டும் நம் அப்படியெல்லாம் பிரியக்கூடாது நாம் கூட்டணி கட்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் கட்சி வளருவதை விரும்பாதவர்கள் என அண்ணாமலை கணக்கு போட்டு விட்டார். இதன் காரணமாகத்தான் அண்ணாமலை இந்த முடிவை அறிவித்ததாக வெளியில் செய்தி பரவ விட்டது தெரியவந்துள்ளது, விரைவில் இது குறித்த பல செய்திகள் வெளிவரும் எனவும் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News