கனிமொழிக்கும், உதயநிதிக்கும் சண்டையை மூட்டிய செந்தில்பாலாஜி - பரபர பின்னணி என்ன?
By : Mohan Raj
திமுகவில் உதயநிதி தரப்பிற்கும் கனிமொழி தரப்பிற்கும் தற்பொழுது அமைச்சர் செந்தில்பாலாஜி காரணமாக மோதல் அதிகமாக வெடித்துள்ளது.
திமுகவில் தற்போது தலைவர் பொறுப்பில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தங்கை கனிமொழி மகளிர் அணியை நிர்வகித்து வந்தார், மேலும் அவர் அதிகமாக உழைத்து மகளிர் அணியை உருவாக்கியவர் என திமுகவினரால் பாராட்டப்பட்டு வந்தவர், தற்பொழுது துணைப் பொதுச் செயலாளர் பதவியை வகிக்கும் கனிமொழி மகளிர் அணியை இன்னும் பல உயரங்களுக்கு எடுத்து செல்ல பல திட்டங்கள் வைத்திருந்தார் என திமுக தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுகவில் உதயநிதியின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது எனவும் உதயநிதி தான் முன்னிறுத்தப்படுகின்றார் கனிமொழி முன்னிறுத்தப்படவில்லை மேலும் கனிமொழியை முன்னிறுத்தாமல் வைப்பது ஓரங்கட்டி வைப்பதற்கான வேலைகள் நிறைய நடந்து வருகிறது அந்த வேலைகளை முதல்வர் ஸ்டாலின் குடும்ப முன்னெடுத்து வருகிறது என்ன பல தகவல்கள் அவ்வப்போது உலாவி வந்தன.
இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜியால் திமுகவில் உதயநிதி கனிமொழிப் பிரச்சினை அதிகமாக வெடித்துள்ளது. திமுகவில் மகளிரணி மற்றும் மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது. இந்த நேர்காணலை கடந்த பிப்ரவரி 11-ம் தேதி திமுகவின் துணை பொதுச்செயலாளரான கனிமொழி துவங்கி வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த துவக்க நிகழ்ச்சியை தொடர்ந்து மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெற்று வருகிறது, அதில் சேர்வதற்கு வருபவர்களை நேர்காணல் எடுத்து மகளிரணியினர் சேர்த்து வருகின்றனர். மேலும் திமுகவின் மகளிர் அணி செயலாளரான ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும் அணியின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் பொறுப்பை கனிமொழி தான் தற்பொழுது பார்த்து வருகிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்காணல் தொடர்பாக வெளியிடப்படும் விளம்பரம் மற்றும் நோட்டீஸ் ஆகியவற்றில் கனிமொழியின் படம் தான் இதுவரை இடம் பெற்று வந்தது. ஆனால் கொங்கு மண்டலமான கோவை மாநகர், தெற்கு கோவை, தெற்கு வடக்கு மாவட்டங்களில் நடைபெறும் நேர்காணலில் கனிமொழியின் படம் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக உதயநிதியின் படம் விளம்பரத்தில் இடம்பெற்று இருப்பது மகளிர் அணியில் மட்டுமல்ல திமுகவிலேயே பஞ்சாயத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக கனிமொழி ஆதரவாளர்கள் சிலர் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்தனர். கனிமொழி ஆதரவாளர்கள் இது தொடர்பாக என்ன கூறுகின்றனர் என்றால், 'மார்ச் 22ஆம் தேதி கோவையில் நடைபெறவிருக்கும் இந்த நேர்காணலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் தலைமை வைக்கிறார். நேர்காணலுக்காக அச்சடிக்கப்பட்ட விளம்பர நோட்டீஸில் கனிமொழியின் படத்தை திட்டமிட்டே புறக்கணித்து இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி.. மகளிர் அணி மேற்பார்வை பொறுப்பு கனிமொழி தான் என கட்சி தலைமையே அறிவுறுத்தியும் கனிமொழியின் படத்தை போடாமல் அமைச்சர் உதயநிதியின் படத்தை போட்டுள்ளார்.
உதயநிதிக்கு மகளிர் அணிக்கும் என்னங்க தொடர்பு இருக்கிறது, கனிமொழியை இவர்கள் இப்படி சீண்டி பார்ப்பது முதல் முறையல்ல உதயநிதியின் படத்தை போட்டு நோட்டீஸ் அடித்து கனிமொழியை புறக்கணிக்கும் வேலையை அவர்கள் துவங்கி விட்டனர், விரைவில் கனிமொழியை முழுவதுமாக இவர்கள் புறக்கணித்துவிடுவார்கள்' என மகளிரணி நிர்வாகிகள் புலம்பி தள்ளியுள்ளனர். மேலும் அவர்கள் கூடுதல் தகவலாக, 'ஈரோடு கிழக்கு இணைத்தேர்தலின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு அளிக்கப்பட்ட பகுதிக்குள் கனிமொழி பிரச்சாரம் செய்ய முதலில் திட்டம் இடப்பட்டது, ஆனால் கடைசி நேரத்தில் செந்தில் பாலாஜி கனிமொழி பிரச்சாரம் செய்யக்கூடாது என மறுத்து விட்டதனால் அடுத்த நாளே உதயநிதியை அழைத்து வந்து கனிமொழி பேச இருந்த அதே பகுதியில் பிரச்சாரம் செய்ய வைத்தார் செந்தில் பாலாஜி. உதயநிதியை குளிர வைத்துதான் அரசியல் செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி முடிவெடுத்துவிட்டார். அது அவரது விருப்பம் அதற்காக கனிமொழி சீண்டி பார்க்கக்கூடாது என கோபமாக மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து அறிவாலயம் வரை சென்றுள்ளது, அதன் பின்னர் அறிவாலயம் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வேளையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே உட்கட்சி பூசல் அதிகமாக இருக்கும் நிலையில் இது மேலும் விஸ்வரூபமாக வெடிக்கும் என்பதால் இது திமுகவிற்கு நல்லதல்ல எனவே இந்த விவகாரத்தை தற்போது ஆற போடலாம் என திமுக தரப்பு முயற்சித்து வருகிறது. இப்படி செந்தில் பாலாஜி திட்டமிட்டு கனிமொழியை ஓரம் கட்டி உதயநிதியை முன்னிறுத்தும் வேலை செய்வதனால் திமுகவில் கனிமொழி அணி உதயநிதி அணி என இரு அணிகள் உருவாகும் விபரீத நிலை ஏற்பட்டுள்ளது.