Kathir News
Begin typing your search above and press return to search.

பேசின ராகுலுக்கே இப்படீன்னா, செங்கல்லை தூக்கி காமிச்ச நமக்கு? - பதட்டத்தில் உதயநிதி!

பேசின ராகுலுக்கே இப்படீன்னா, செங்கல்லை தூக்கி காமிச்ச நமக்கு? - பதட்டத்தில் உதயநிதி!

Mohan RajBy : Mohan Raj

  |  25 March 2023 1:28 PM GMT

என்ன ராகுல் காந்தி பதவி நீக்கமா? என அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாது அச்சமும் அடைந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.


கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து "எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி" என ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீனும் வழக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 பிணையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் ராகுல் காந்தியின் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் பொருட்டு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியை இழந்துவிட்டார். ஏனென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி ஏதாவது ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தண்டனை விதிக்கப்பட்டால் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார். மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. அதன் அடிப்படையில் இனிவரும் 8 ஆண்டுகள் ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.


இப்படி ராகுல் காந்தி பதவி நீக்கப்பட்ட விவகாரம் மற்றும் அதனை தொடர்ந்து தேர்தலில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பங்கேற்க முடியாது என்பது போன்ற விவகாரமும் இந்திய அரசியலில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, குறிப்பாக கூற வேண்டும் என்றால் தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியை நம்பியே தேசிய அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் திமுகவை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதுவும் குறிப்பாக திமுகவின் அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் டிவிட்டர் பதிவிலும் கருத்து தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், 'பாஜகவினர் தொடந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்ததும், தீர்ப்பு வந்ததும் அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை கண்டிக்கிறேன் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை பாசிஸ்டுகளை அச்சமூட்டி உள்ளது' என அதில் கூறியுள்ளார்.


ஆனால் உதயநிதி இப்படி பேசியதற்கு பின்னணியில் விமர்சித்து பேசிய ராகுல் காந்திக்கே இப்படி என்றால் செங்கலை தூக்கி காண்பித்த பெரிதும் விமர்சித்த எனக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் தான் பின்னணியில் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஏனெனில் திமுக சார்பில் நடந்த கூட்டங்களில் பிரதமர் மோடி குறித்தும், பாஜக குறித்தும் பல்வேறு விதங்களில் திமுகவினர் பலர் பேசியுள்ளனர்.


குறிப்பாக கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் 2019 மற்றும் 2021 தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவினர் பேசிய பேச்சுக்களில் அதிகம் பாஜகவையும் மோடியை விமர்சித்துள்ளனர். எங்கே ராகுல் காந்திக்கு நடந்தது போன்ற இந்த பேச்சுக்களை எல்லாம் சேகரித்து யாராவது வழக்கு தொடர்வார்களோ? அந்த வழக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டால் ராகுல் காந்திக்கு ஏற்பட்ட நிலைமை நமக்கு ஏற்படும் என்ற பயமே தற்பொழுது திமுகவினருக்கு அதிலும் குறிப்பாக உதயநிதிக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.


ஏற்கனவே மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாரிசு, துணிவு ஆகிய படங்களை தனது ஆளும் அதிகாரத்தை பயன்படுத்தி நள்ளிரவு காட்சிகளை திரையரங்குகளில் திரையிட்டது. அதிக விலைக்கு டிக்கெட் விற்றது போன்ற புகாரை தக்க ஆதாரங்களுடன் கொடுத்துள்ளார். இந்த புகாரில் ஆளுநர் விரைவில் நடவடிக்கை எடுப்பார் எனவும் சவுக்கு சங்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News