Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலை செய்றதுதான் கரெக்ட் - பச்சைக்கொடி காட்டிய சி.டி.ரவி! ஆரம்பமாகும் ஆட்டம்!

அண்ணாமலை செய்றதுதான் கரெக்ட் - பச்சைக்கொடி காட்டிய சி.டி.ரவி! ஆரம்பமாகும் ஆட்டம்!

Mohan RajBy : Mohan Raj

  |  26 March 2023 1:07 PM GMT

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசியலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்ற அண்ணாமலையின் திட்டத்திற்கு தற்பொழுது வெற்றி கிடைத்துள்ளது.


தமிழக அரசியல் களத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன, கடந்த 1960 களில் துவங்கி காங்கிரஸ் ஆட்சியில் இருந்து இறங்கியபின் திமுக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து இதுவரை திமுக, அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கவில்லை. இந்த நிலையில் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மிகப்பெரும் கட்சியான பாஜக தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல திட்டங்களை தீட்டி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்ததற்கு பிறகு தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக அளவில் கவனித்து வருகிறார்.


ஆனால் தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுடன் தான் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற நிலையில் தான் பாஜக உள்ளது.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பொறுப்பை ஏற்றதிலிருந்து அவரின் செயல்பாடுகள் புயல் வேகத்தில் வீச துவங்கியது. இளைஞர், காவல்துறை அதிகாரியாக இருந்தவர் மேலும் தொலைநோக்கு சிந்தனை உடையவர், பணம் போன்ற இதர எதிரிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாதவர் இப்படி பல்வேறு திறன்களுடன் கூடிய ஒரு தலைவரைத்தான் இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருந்தோம் என்கின்ற ரீதியில் தமிழக பாஜக கட்சியில் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் அண்ணாமலைக்கு ஆதரவு பெருகியது.


இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அண்ணாமலையும் பாஜகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையாக மிகுந்த பிரயாசைப்பட்டு கடின உழைப்புடன் கட்சியை வளர்த்து கொண்டிருந்தார் அந்த உழைப்பின் பலனாக தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.

மேலும் தமிழக பாஜக இப்போது இருக்கும் இந்த சூழலில் இதுதான் சரியான நேரம் இப்படி நாம் இப்பொழுது அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்து பாஜக தலைமையில் புதிய கூட்டணி அமைத்தால் மட்டுமே நம்மால் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என அண்ணாமலை நன்கு உணர்ந்த காரணத்தினால் கடந்த சில நாட்களாகவே பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி முறிந்து விடும் என்கிற ரீதியில் பேச்சுக்கள் கிளம்பியது. இந்த நிலையில் அதற்கு சில எதிர்ப்பு குரல்கள் கிளம்பியதால் உடனடியாக டெல்லி சென்றார் அண்ணாமலை டெல்லி சென்ற அண்ணாமலை தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார்.


சந்தித்து விட்டு தனது திட்டங்கள் அனைத்தையும் எடுத்து கூறி அதற்கெல்லாம் அனுமதி வாங்கிய பின் தமிழகம் திரும்பி உள்ளார்.அண்ணாமலை. இந்த சந்திப்பின்போது பாஜக தலைவர் ஜே பி நட்டாவும் அமித்ஷாவும் ஒருமித்த மனதாக தமிழக பாஜக அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் கண்டிப்பாக தனியாக தான் போட்டியிட வேண்டும் என்ற அண்ணாமலை கருத்தை ஏற்றுக் கொண்டனர்.


மேலும் இன்னும் உங்களுக்கு என்ன செய்யத் தோன்றுகிறதோ அவற்றையெல்லாம் செய்யுங்கள் என்கிற ரீதியில் பச்சைக்கொடி காட்டி அனுப்பிய காரணத்தினால் விரைவில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியில் வந்துவிடும், வெளியில் வந்து தனி கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. இத்தனைநாள் வரை அதிமுக கூட்டணியில் பாஜக இருந்து வந்தது அதிமுகவிற்கு தான் சுமைய தவிர பாஜகவிற்கு சுலபமான பாதை தான் என அரசியல் ரீதியாக கருத்துக்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்டு வந்தாலும் இனிமேல் பாஜக தலைமையில்தான் தனித்து போட்டிஎன்ற சூழல் தற்பொழுது உருவாகியுள்ளது.


அப்படி பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் நிலையில் கண்டிப்பாக பிரதமர் மோடி மத்தியில் பிரதமராக வருவதற்கு உண்டான மக்கள் ஆதரவும் இருக்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அதிமுக தனித்துவிடப்பட்டால் அதிமுகவால் தற்போது இருக்கும் சூழலில் காங்கிரசை ஆதரிக்க முடியாது, எனவே பிரதமர் வேட்பாளர் என யாரை வைத்து ஓட்டு கேட்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


இந்த நிலையில் அண்ணாமலையின் இந்த முடிவு குறித்து தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி அதிரடி ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து சிடி ரவி கூறியதாவது, 'தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் தான் அரசியல் செய்து வருகிறார் தமிழ்நாட்டில் அவர் செய்யும் அரசியல் சரியானதுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என கூறுவது பாஜகவிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அண்ணாமலையின் அரசியல் நேர்த்தியாக உள்ளது அண்ணாமலை இது போன்ற கருத்துக்களை கூறினால் மட்டுமே அதிமுகவினர் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வருவார்கள்' என கூறியது வேறு அண்ணாமலை ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News