Kathir News
Begin typing your search above and press return to search.

இனி சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு கிடையாது - சாட்டையை சுழற்றிய அமித்ஷா!

இனி சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு கிடையாது - சாட்டையை சுழற்றிய அமித்ஷா!

Mohan RajBy : Mohan Raj

  |  29 March 2023 7:39 AM GMT

இட ஒதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷா சாட்டையை சுழற்ற துவங்கிய சம்பவம் தற்பொழுது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்தியாவில் தற்பொழுது நடைமுறையில் உள்ள சாதி மற்றும் மத வாரியான இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டும் பொருளாதார ரீதியாக ஏழைகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்குவது சரி சாதி ரீதியாக வழங்கப்படும் இட ஒதுக்கீடு சில இடங்களில் முறைகேடுகளுக்கு வழி வகுக்கின்றன, பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்கப்படும் சமயத்தில் அவை சரியான வகையில் சிரமப்படும் ஏழைகளுக்கு உதவும் என்பது போன்ற கருத்துக்கள் அதிகம் தலையெடுக்க துவங்கியுள்ளது.


மேலும் பொருளாதார ரீதியா ஐடா ஒதுக்கீடு வழங்கும் நேரத்தில் அவை இடஒதுக்கீடு எதற்காக வழங்கப்படுகிறதோ அதற்க்கு பயன்படும் மேலும் சாதி, மத ரீதியிலாக வழங்கப்படும் இடஒதுக்கீடு பல வேளைகளில், பல இடங்களில் முறைகேட்டிற்கு வழிவகுக்கிறது என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா இதற்கு முடிவெடுக்கும் விதமாக தனது சாட்டையை சுழற்ற துவங்கியுள்ளார்.


இதன் முதற்கட்டமாக சிறுபான்மையினருக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்ய கர்நாடக மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது இந்த முடிவை வரவேற்றுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது அந்த சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் காரணத்தினால் பாஜக தலைவர்கள் கர்நாடகத்தில் தற்பொழுது அதிக அளவில் கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றன. கடந்த வாரம் கூட பிரதமர் மோடி கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இந்த நிலையில் அங்கு தேர்தல் களம் இப்பொழுது சூடு பிடிக்க துவங்கியுள்ளது.


ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக தேர்தல் பணிகள் இறங்கி உள்ளன. ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என பாஜக மும்முரம் காட்டி வருகிறது, தேர்தல் பணிகளை பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேரடியாக கவனித்து வருகின்றனர். மேலும் தமிழக பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையை கர்நாடக தேர்தலுக்கு மேற்பார்வையாளராக அறிவித்து என்ன நடக்கிறது என அடிக்கடி அப்டேட் கேட்டு வருகின்றனர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்.


இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் பிரபராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மாநில பாஜக அரசு சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கி அந்த இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை செய்துள்ளது. கடந்த மார்ச் 24ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் சிறுபான்மையினருக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்து அமைச்சரவை ஒப்புதல் அளித்தது மேலும் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீடு இனி ஒக்கலிகா சமூகத்தவருக்கு இரண்டு சதவீதமும் லிங்காயத்துகளுக்கு இரண்டு சதவீதம் வழங்கப்படும் என கர்நாடகா அரசு முடிவு செய்து அறிவித்தது.


இந்த அறிவிப்பு எதிர்கட்சிகளால் சில சலசலப்புகளை ஏற்படுத்தப்பட்டது, ஆனால் லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகத்தினர் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனர் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்கள் சமுதாய முன்னேற்ற மிகவும் ஏதுவாக அமையும் என கர்நாடக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் பிதார் மற்றும் ராய்ச்சூர் மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பேசிய உத்தர அமைச்சர் அமித்ஷா, 'கர்நாடக மாநில கட்சி காங்கிரேஸ் தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தியது, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சரியான இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தி பட்டியல் சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியை போக்கியுள்ளது.

சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டப்படி செல்லாது மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை இனி, இந்த காங்கிரஸ் அரசியல் ஆதாயத்திற்காக சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது. பாஜக சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஒக்கலிகா சமுதாய ஆட்களுக்கு இரண்டு சதவீதமும் லிங்காயத்துகளுக்கு இரண்டு சதவீதம் வழங்கி உள்ளது. இது பொருளாதார ரீதியாக உண்மையில் நலிவடைந்தவர்களை மேலே கொண்டு வரும்' என பேசினார்.


மேலும் இதுபோன்று இந்திய அளவில் குறிப்பாக முதலில் பாஜக ஆளும் மாநிலங்களில் அமல்படுத்திவிட்டு அடுத்தபடியாக பிற மாநிலங்களில் அமல்படுத்த பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News