Kathir News
Begin typing your search above and press return to search.

இனிமே எல்லாமே மாறுகிறது - புதிய நாடாளுமன்ற பின்னணியில் பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!

இனிமே எல்லாமே மாறுகிறது - புதிய நாடாளுமன்ற பின்னணியில் பிரதமர் மோடியின் அதிரடி திட்டம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  3 April 2023 10:00 AM GMT

புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கப்பட்ட பரபர பின்னணி வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இப்போதைய

நாடாளுமன்றம் சுமார் 96 ஆண்டுகள் பழைமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல்

பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய

நாடாளுமன்றம் கட்டப்பட்டு வருகிறது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ

மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. மத்திய விஸ்டா என்ற திட்டத்தின்

கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவை

கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா

திட்டம் கடந்த நவம்பர் மாதம் முடிந்து விடும் என்று

எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பணிகள் முடிவடைய தாமதம் ஆனது. தற்போது

இறுதி கட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய நாடாளுமன்றத்தின் பிரம்மாண்ட ஹால்களில் நின்றபடி

அங்கு நடக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். இந்த புதிய

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், கேபினட் செயலகம்,

இந்தியா ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்

உள்ளிட்டவற்றையும் கட்டப்படுகின்றன. தற்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் 450

முதல் 500 உறுப்பினர்கள் வரை மட்டுமே அமர முடியும். ஆனால் புதிதாக

கட்டப்பட்டுள்ள விஸ்டா கட்டிடத்தில் குறைந்தபட்சம் 1000 உறுப்பினர்கள்

அமர முடியும், மேலும் பல உச்சகட்ட வசதிகளை இந்த பாராளுமன்ற வளாகம்

கொண்டுள்ளது.

இப்படி புதிய நாடாளுமன்றத்தை வேகவேகமாக அமைவதற்கான பின்னணிகள் உள்ள

தகவல்கள் அதிரடியாக வெளியாகியுள்ளன. வரும் 2024 மே மாதம் இந்தியாவில்

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.எப்படியும் அந்த தேர்தலில் பிரதமர்

மோடி கண்டிப்பாக 3வது முறையாக பிரதமர் பதவியில் அமர்வார் என கருத்து

கணிப்புகள் கூறி வருகின்றனர். அப்படி மூன்றாவது முறையாக பிரதமர் மோடி

பொறுப்பில் அமர்ந்ததற்கு பிறகு நாட்டில் உள்ள எம்பி தொகுதிகளின்

எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் தற்பொழுது ஆறு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு

எம்பி தொகுதி என்ற அளவில் சராசரியாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம் இது

மூன்று சட்டமன்ற தொகுதிக்கு எம்பி அளவில் என மாறுவதற்கான வாய்ப்புகள்

அதிகம்.

அதாவது ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் எம்.பிக்கள் இரட்டிப்பாக

வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள், 8

யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன இந்த மாநிலங்களின் எண்ணிக்கையை

அதிகரிக்கவும் பாஜக அதிரடி திட்டங்கள் தீட்டி உள்ளதாகவும் தெரிகிறது.

இதற்கெல்லாம் பின்னணியில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப

தொகுதிகளின் எண்ணிக்கையும், மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையும்

அதிகரித்தால் மட்டுமே அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் சரியான

அளவில் மக்கள் மத்தியில் சேரும்.

நம் தமிழகத்தையே எடுத்துக்கொண்டால் 39 மக்களவை தொகுதிகள் இருக்கின்றன,

234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன சாரிசாரியாக 6 சட்டமன்ற தொகுதிக்கு

ஒரு எம்.பி என்ற அளவில் மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த

எண்ணிக்கை இரட்டிப்பாக அதாவது 80 மக்களவை தொகுதிகள் என உயரும் பட்சத்தில்

மக்களுக்கு கிடைக்கப்போகும் எம்.பி'க்களின் எண்ணிக்கை அதிகமாகும், இதனால்

நிறைய மக்கள் திட்டங்கள் சரியான முறையில் சென்று சேருகிறதா என அரசு

கண்காணிக்க எதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் இந்திய வல்லரசாக அமைவதற்கு தற்பொழுதுள்ள

இந்த கட்டமைப்பு பத்தாது இது எல்லாவற்றையும் விட மிகப் பெரிய கட்டமைப்பு

தேவை அதற்கெல்லாம் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கையை முதற்கட்டமாக

அதிகரிக்க வேண்டும் இப்படி மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரித்தால்

இப்பொழுதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் போதுமான அளவு இருக்காது என்ற

தொலைநோக்குடன் பிரதமர் மோடி இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டியுள்ளதாக

தெரிவிக்கின்றன. விரைவில் இந்த நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா மிகவும்

கோலாகலமாக நடக்கப்பட உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News