Kathir News
Begin typing your search above and press return to search.

ஒன் மேன் ஷோ - இடதுசாரிகளை கதறவிடும் ஆளுனரின் மாஸ்டர் ப்ளான்!

ஒன் மேன் ஷோ - இடதுசாரிகளை கதறவிடும் ஆளுனரின் மாஸ்டர் ப்ளான்!

Mohan RajBy : Mohan Raj

  |  8 April 2023 2:13 PM GMT

'தமிழக அரசியலில் ஒன் மேன் ஷோவாக ஆளுநர் ஆர்.என்.ரவி இடதுசாரிகளை கதறவிட்டுக்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்திற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி வந்ததிலிருந்து அரசியல் ரீதியாக அவர் கூறும் கருத்துக்கள் பெரிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. வரலாற்றில் இதற்கு முன்பு இதுபோன்று தமிழகத்தில் ஆளுநர்கள் இடதுசாரி சித்தாந்தத்தை எதிர்த்து பேசியது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர்கள் என்றால் வருவார்கள் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வார்கள், அரசு நிகழ்ச்சிகளில் ஏற்பாடு செய்யப்பட்டால் அங்கு வந்து குத்து விளக்கு ஏற்றுவார்கள், குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்திற்கு கொடி ஏற்றி சம்பிரதாயமாக பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பார்கள், ஆளுநர்கள் பணிக்காலம் முடிந்த பின்பு ஆளுநர் மாளிகையில் ஒரு தேநீர் விருந்து அரசியல் கட்சிகளுக்கு வைத்து விட்டு சென்று விடுவார்கள் என இருந்து வந்த பாரம்பரியத்தை உடைத்து தற்பொழுது தமிழக அரசியலில் சித்தாந்த ரீதியாக ஆளுநர் இறங்கி அடிக்கும் சம்பவம் ஒரு சில அரசியல் கட்சிகளுக்கு வாழ்நாள் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

குறிப்பாக வலது சாரி சித்தாந்தத்தை தீவிரமாக கடைபிடிக்கும் ஆளுநர் வலதுசாரி சித்தாந்தமே சரி, இடதுசாரி சித்தாந்தம் என்றுமே நாட்டிற்கு ஆபத்து என்கின்ற தோணியில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் 'எண்ணி துணிக' என்ற நிகழ்வில் ஆளுநர் கலந்துரையாடினர். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவாக அளித்த பதில்கள்தான் சில தமிழக அரசியல்வாதிகளுக்கு கோடை வெயிலை விட சூடேற்றியுள்ளது.

ஆளுநர் கூறிய முக்கிய விஷயங்களான ஸ்டெர்லைட் விவகாரமும், மசோதா விவகாரமும் ஆளுநர் மீது அவதூறு பரப்பி வந்த சில அரசியல் தலைவர்களை தூங்க விடாமல் செய்துள்ளது. அரசியலமைப்பின்படி ஆளுநருக்கு மசோதா மீது நடவடிக்கை எடுக்க 3 விதமான வாய்ப்புகள் உள்ளன, ஒன்று மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அது சரியாக இருந்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும், இரண்டாவது சரியான மசோதா இல்லை என்றால் அந்த மசோதாவை நிறுத்தி வைப்பது நிறுத்தி வைப்பது என்றல் கிட்டத்தட்ட அந்த மசோதாவை நிராகரிப்பது தான் என அர்த்தம் இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது நேரடியாக நிராகரிப்பதாக இல்லாமல் நிறுத்தி வைப்பது என அழைக்கப்படுகிறது, மூன்றாவது வாய்ப்பாக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர் எடுக்கலாம்' இப்படி ஆளுநர் குடுத்த விளக்கம் அரசியல் உள்நோக்கத்துடன் மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய திமுக அரசுக்கு பேரிடியை இறக்கியுள்ளது.

குறிப்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நிறுத்தி வைத்துள்ளார்,ஆன்லைன் சூதாட்டம், நீட் போன்ற மசோதாக்கள் அவர் அனுப்பவில்லை எனக் கூறிய அரசியல் செய்து வந்த திமுகவிற்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. நீங்கள் கொடுத்த மசோதாவை நான் அனுப்பவில்லை என்றாலே அது நிராகரிப்பு தான் என அர்த்தம் என ஆளுநர் அசால்டாக கூறியது வேறு திமுகவிற்கு விடுத்த அரசியல் பதிலாகவே பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள், அதற்கு ஆளுநர் கொடுத்த விளக்கம் தான் தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி சித்தாந்த அரசியல்வாதிகளுக்கு வாழ்நாள் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ஆர்.என் மாணவர்கள் மத்தியில் கூறியதாவது, 'வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை தனிநபரோ ஒரு தொண்டு நிறுவனமும் நன்கொடை பெறுகிறது என்றால் அது ஒரு முறை என்றால் பிரச்சனை இல்லை தொடர்ச்சியாக அந்த நன்கொடை வருமானால் அந்த வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வரும், உதாணரமாக தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் அந்நிய நிதி பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள் வெளிநாடு நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது. இந்திய தேவையில் 40 சதவீத தாம்பரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது அதை மூடிவிட்டார்கள், அதனால் இந்தியாவின் 40% தாமரை தேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதி பெற்று வந்தது தெரிய வந்துள்ளது' என ஆளுநர் கூறியதுதான் ஹைலைட்..

குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தங்கள் அரசியல் லாபத்திற்காக ஸ்டெர்லைட் விவகாரத்தை பயன்படுத்தியிருந்தனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் சமயம் அதிமுக ஆட்சிக்காலம். அப்பொழுது அதிமுக ஆட்சிக்காலத்தில் எந்த ஒரு சிறு விஷயங்கள் நடந்தாலும் அதனை ஊதி பெருசாக்கி 'பாருங்கள் அதிமுக என்றால் மக்களுக்கு எதிரான கட்சி, அதிமுக ஆட்சி நடப்பதால் மக்கள் நிம்மதியா இல்லை' என அதை தனது அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வந்தது. அதன் காரணமாகவே ஸ்டெர்லைட் போராட்டத்தையும் தனது அரசியலுக்காக திமுக பயன்படுத்தி வந்தது கூடவே திமுகவோடு சேர்ந்து பயணிக்கும் இடதுசாரி கட்சிகளாகிய விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் திமுகவுடன் சேர்ந்து எதிர்ப்பில் இணைந்து கொண்டன.

ஸ்டெர்லைட் மக்களுக்கு தீங்கானது, ஸ்டெர்லைட் ஆலை இயங்கவே கூடாது என்பது போன்ற கருத்துக்களை எல்லாம் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக பெருமளவில் கையில் எடுத்து வந்தது இதன் காரணமாக இந்தியாவிற்கு 40% தாமரை சேவையை பூர்த்தி செய்து வந்த ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையை வைத்திருக்கும் வேதாந்த நிறுவனம் அதனை தற்போது விற்கும் நிலைக்கே வாழ்ந்து விட்டது. இப்படி ஸ்டெர்லைட் ஆலை இந்தியாவிற்கு நன்மை செய்தது என தெரிந்தும் அதனை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தி மூட வைத்ததன் பின்னணியில் வெளிநாட்டு நிதி விளையாடியது என்ற காரணத்தினால் தான் என ஆளுநர் கூறியது திமுக உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஆளுநர் இதை பேசியது அரசாங்கத்தின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது, மக்கள் மத்தியில் குறிப்பாக ஆளுநர் இதனை கூறும் பொழுது வெளிநாட்டு நிதிகள் இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்கின்றன, வெளிநாட்டு நிதிகள் இந்தியாவின் வளர்ச்சியை சிதைக்கின்றன, அதன் விளைவு தான் ஸ்டெர்லைட் என கூறியது மக்கள் மத்தியில் 'அப்போ திமுக வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி வரும் போராட்டத்தை ஆதரித்து அரசியல் செய்து வருகிறதா எனவும், கிட்டத்தட்ட இந்திய அரசியலமைப்புக்கும் சரி இந்தியாவில் இருக்கக்கூடிய இடதுசாரி போராட்டத்திற்கும் பாதுகாப்பு கொடுத்த திமுக ஆதரித்துள்ளது' என்ற கருத்தை மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. இப்படி ஆளுநர் ஒன் மேன் ஷோவாக இடதுசாரிகளை எதிர்த்து வருவது தற்பொழுது தமிழக அரசியல் ஒரு புயலை கிளப்பி உள்ளது வரும் காலங்களில் இது போன்ற இடதுசாரி சதித்திட்டங்களை ஆளுநர் கண்டிப்பாக அதிகம் கூறுவார் என்ற தகவல்களும் கிடைத்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News