Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன நடந்தாலும் சரி ஒரு கை பார்த்துடலாம் - திருப்பி அடித்த அண்ணாமலை, திகைத்து நிற்கும் திமுக!

என்ன நடந்தாலும் சரி ஒரு கை பார்த்துடலாம் - திருப்பி அடித்த அண்ணாமலை, திகைத்து நிற்கும் திமுக!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 April 2023 12:43 PM GMT

'என்ன நடந்தாலும் பரவால்ல ஒரு கை பார்த்திடலாம்' என அண்ணாமலை தற்பொழுது திமுகவை எதிர்த்து திடமாக இறங்கி உள்ளார்.

திமுக சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டது முதல் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது, திமுகவின் சொத்து பட்டியல் திமுக தலைவர்கள் இவ்வளவு ரூபாய் சம்பாதித்து வைத்துள்ளார்கள், கிட்டத்தட்ட 1.32 லட்சம் கோடி சொத்துக்கள் திமுக தலைவர்கள் பெயரில் இருக்கின்றன என அண்ணாமலை வெளியிட்டது தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் திமுகவினருக்கு இது பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அண்ணாமலை திமுகவை பற்றி கூறியது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க போகிறோம், எனக் கூறி 500 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

உடனே திமுக மத்தியில் பார்த்தீர்களா நாங்கள் நோட்டீஸ் அனுப்பி விட்டோம், இனி அண்ணாமலையால் எதுவும் செய்ய முடியாது எங்கள் மேல் அவதூறு பரப்ப முடியாது. இதனை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் திமுகவின் முக்கிய தலைவர்கள் யாரும் இது பற்றி வாய் திறக்கவில்லை, இந்த நிலையில் அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் என பெரிதும் எதிர்பார்த்து வந்த நிலையில் அண்ணாமலை அதிரடியாக தனது முடிவை அறிவித்துள்ளார். அதாவது என்ன நடந்தாலும் பரவாயில்லை ஒருகை பார்த்து விடலாம் என்கின்ற முடிவில் அண்ணாமலை இறங்கியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அண்ணாமலை கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களையும் சிபிஐயிடம் அளிக்க உள்ளதாகவும், திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கும் மற்றும் இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை, ஆர்.எஸ்.பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் தான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை சுமத்தியதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் 500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருவதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில், தன் மீதும் தனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இப்படி அண்ணாமலை அறிக்கையை வெளியிட்டது பல திமுக தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டால் அண்ணாமலை அடங்கி விடுவார் மேலும் இது குறித்து பேச மாட்டார் என நினைத்து வந்த நிலையில் எது நடந்தாலும் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் இனி நீதிமன்றமாக இருந்தாலும் சரி! அரசியல்களமாக இருந்தாலும் சரி! எதனையும் சந்திக்க நான் தயார் என அண்ணாமலை திடமாக எதிர்த்து நிற்பது அண்ணாமலை மீது திமுகவிற்கு பெரிய அளவில் பயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் திமுகவின் தலைவர்கள் மெல்ல மெல்ல ஒருவராக வாய் திறக்க துவங்கியுள்ளனர், மேலும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூட இன்று பேசும்பொழுது 'இது பற்றி எங்கள் யாரையும் பேச வேண்டாம் என முதல்வர் கூறி இருக்கிறார் இருந்தாலும் நான் சொல்கிறேன் அண்ணாமலை விளம்பரத்திற்காக இதை பண்ணுகிறார் என்று சொன்னார். இதன் மூலம் ஏற்கனவே அண்ணாமலை எது கூறினாலும் பேச வேண்டாம் என முதல்வர் தரப்பு திமுகவினருக்கு வாய் பூட்டு போட்டதாக தெரிகிறது. இப்படி அண்ணாமலை எது நடந்தாலும் பரவாயில்லை மோதி பார்த்து விடலாம் என தைரியமாக எதிர்த்து நிற்பது தற்பொழுது அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியாகவும், உறுதுணையாகவும் அதே சமயத்தில் திமுகவினருக்கும் கடும் தலைவலியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News