ராணுவ வீரரின் மனைவியை படம் பிடித்து, ஒரு ஊரையே மதம் மாற மிரட்டும் திருச்சபை - கதறும் ராணுவ ஊழியர்!
By : Mohan Raj
ராணுவ வீரரின் மனைவியை படம்பிடித்து மதம் மாற திருச்சபை தொல்லை தந்த விவகாரம் திருவாரூர் மாவட்டத்தில் பெரிய அளவில் வெடித்துள்ளது.
சமீபகாலமாக மதம் மாறுதல், மதம் மாறும் தொடர்பான பிரச்சனைகள் போன்றவை அதிக அளவில் தமிழகத்தில் நடந்துவருகின்றன. குறிப்பாக இந்து மதத்தில் இருந்து மாற வற்புறுத்துவதும், மாறவில்லை என்றால் மிரட்டுவதும், குடியிருக்க விடாமல் செய்வதும், வாழவே விடாத அளவிற்கு தொல்லை தரும் சம்பவங்கள் நடந்துவருகின்றன என செய்திகள் அடிபடுகின்றன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவரின் குடும்பத்தை திருச்சபையை சேர்ந்த பாதிரியார் ஒருவர் மதம் மாற்ற தொல்லை தருவதும், மதம் மாறாவிட்டால் வாழவே முடியாத அளவிற்கு தொல்லை தருவதாகவும் கூறி மிரட்டுவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் இவர் தஞ்சாவூரில் உள்ள ஏர்போர்ஸில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார், அவரது வீட்டில் அவரது மனைவி காந்திமதி தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில் ராணுவ வீரர் தனபால் தனது மனைவியுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக அவரது சீருடையில் வந்திருந்தார், அந்த மனுவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து ராஜேந்திரன் என்பவர் கூடாரம் அமைத்து பேய், பிசாசு விரட்டுவதாக கூறியும், இந்துமத கடவுளை தரவாக பேசிக்கொண்டு சபை நடத்தி வருகிறார் எனவும், அங்கு தினமும் மைக் ஸ்பீக்கர் வைத்துக் கொண்டு சத்தம் கூச்சல் போட்டு தொந்தரவு செய்து வருகிறார். இதனால் தனது குழந்தையின் படிப்பு மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அந்த மனுவில் ஏர்போர்ஸ் ராணுவ வீரர் தனபால் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் ராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் கூட மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை, ராஜேந்திரன் மைக் வைத்துக்கொண்டு கடவுள் வருகிறார் என சத்தம் போட்டு கூச்சல் செய்து தொல்லை தருகிறார். மேலும் இந்து மதத்திலிருந்து மதம் மாறிய ராஜேந்திரன் மற்ற இந்துக்களையும் எங்கள் குடும்பத்தையும் மதம் மாற சொல்லி வற்புறுத்துகிறார். மேலும் நவம்பர் 2019 அன்று கோட்டாட்சியர் இது பற்றி விசாரணை நடத்தி முடிவில் கூடாரத்தை காலி செய்யுமாறு உத்தரவிட்டார் ஆனால் தற்போது வரை ராஜேந்திரன் கூடாரத்தை காலி செய்யவில்லை இப்போது ஒரு மாதமாக செய்தியாளர் என சொல்லிக்கொண்டு. கோட்டாட்சியர் கூறியதை மதிக்கவும் இல்லை, இன்னும் சில தீய ஆபாச வேலைகளில் தன் வசம் ரவுடிகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கும் எங்களுக்கும் தொல்லை தருகிறார். மேலும் மிகவும் தவறான முறையில் நடந்துகொண்டு எங்களுக்கு மன உளைச்சலை தருகிறார்.
இது குறித்து பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, காவல் துறையையும் அவர் மதிக்கவில்லை! மேலும் என் மனைவியை தகாத வார்த்தைகளால் மிகவும் தரக்குறைவாக பேசுகிறார் எந்நேரமும் பாக்கெட்டில் மொபைல் வைத்துக் கொண்டு தனியாக இருக்கும் மனைவியை போட்டோ எடுக்கிறார்கள். என் மனைவி குழந்தைகள் தனியாக இருக்கும் நேரத்தில் என் வீட்டில் கல் எரிந்து பயமுறுத்துகிறார் என ராணுவ வீரர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனபாலின் மனைவி கூறுகையில் அவர் என்னை இந்து மதத்தில் இருந்து மதம் மாற்ற முயற்சிக்கிறார், நான் அதற்கு அடிபணியாதால் என்னை ஆபாசமாக திட்டுவது புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அந்த திருச்சபையை சேர்ந்த ராஜேந்திரன். இதனால் அந்த திருச்சபையை சேர்ந்த ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள். இந்த விவகாரம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சபையை சேர்ந்த ராஜேந்திரன் வட்டாட்சியரையும், காவல்துறையும் மதிக்காமல் ஒரு ஊரையே மதம் மாற வேண்டும் என தொல்லை செய்து, ராணுவ வீரர் மனைவியை மதம் மாறவில்லை என்றால் படம் பிடிப்பேன் எனக்கூறி மிரட்டல் விடுப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.