Kathir News
Begin typing your search above and press return to search.

அப்போ திமுகவுக்கு நாகரீகம் கிடையாதா? - கூட்டணியில் இருந்துகொண்டே திருமாவளவன் அடித்த ஆப்பு!

அப்போ திமுகவுக்கு நாகரீகம் கிடையாதா? - கூட்டணியில் இருந்துகொண்டே திருமாவளவன் அடித்த ஆப்பு!

Mohan RajBy : Mohan Raj

  |  21 April 2023 1:45 PM GMT

திருமாவளவனின் சமூக நீதி முகத்திரையை கிழித்தெறிந்த பத்திரிக்கையாளர்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடிக்கும் நீர் மற்றும் மருந்தும் உணவைப் பற்றி கேட்டுள்ளனர். பிறகு இதற்காக வேங்கை வயல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பார்வையிட்ட பொழுது தான் தெரியவந்தது அத்தொட்டியில் மனித கழிவுகள் இருப்பது. இச்சம்பவத்தை எதிர்த்து பல மாநிலங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்பாட்டத்தை நடத்தினர், தீண்டாமை பற்றி பேசுபவர்கள் எதற்காக ஒரே கிராமத்தில் இரண்டு மேல் தொட்டிகளை வைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. இச்சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் நடத்தி வந்தனர்.

பல தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தப்பட்ட போதிலும் யாரும் இச்சம்பவத்தில் கைது செய்யப்படவில்லை, இந்த வழக்கின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்ட காரணத்தினால் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட நூறு நாட்கள் ஆகியும் ஒருவர் கூட இச்சம்பவத்தில் கைது செய்யப்படவில்லை. இதற்கிடையில் இந்த குற்றத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக ஒப்புக்கொள்ள வைக்க முயல்வதாகவும் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது கிட்டத்தட்ட பல நாட்கள் கடந்தும் குற்றவாளியை கண்டுபிடிக்காத நிலையில் தற்போது வரை நிலவி வருகிறது. இந்நிலையில் திமுகவினருடன் கூட்டணி கொண்டுள்ள திருமாவளவன் தற்போது ஒரு கேள்வியை சந்தித்துள்ளார், சென்னை தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் வேங்கை வயல் சம்பவம் குறித்தும், தமிழக அரசின் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது, இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு குழுவிடம் பேசி இருக்கிறோம். இது பற்றி இதற்கு முன்னதாகவே சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறோம் அரசு அந்த விவகாரத்தில் நிலவும் உண்மைகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளனர் எனவே அரசின் நடவடிக்கைகள் மீது நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று பதில் அளித்தார் திருமாவளவன்.

ஆனால் ஏன் இந்த சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காத நிலை ஏற்படுகிறது என்று கேள்வி எழுப்பிய போது நாட்கள் என்பது ஒரு பிரச்சனை இல்லை இத்தனை நாட்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஜெயராம் கொலை வழக்கில் இவ்வளவு ஆண்டுகளாகியும் இன்னும் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை அதற்காக நாம் உள்நோக்கம் கற்பிக்க முடியுமா? சில வழக்குகளில் நிர்வாகச் சிக்கல் இருக்கலாம் விசாரணையில் இன்னும் உறுதி செய்யப்படாத தகவல்கள் இருக்கலாம் மேலும் தமிழக அரசு தலித் மக்களுக்கு எதிரான அரசாக இல்லை, இந்த பிரச்சனையில் யாரையும் காப்பாற்றும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபடவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் அவரிடம் ஒரு செய்தியாளர் நீங்களும் தற்போது திமுக காரர் போல பேசுகிறீர்களே என்று கேள்வி எழுப்பினார் இந்த மாதிரி பேசுகிற வேலை வைத்துக் கொள்ள வேண்டாம், இதுபோல பேசுவது எல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள், இதெல்லாம் நாகரீகம் இல்லாத பேச்சு, உங்களுக்கு ஒரு நாகரிகம் வேண்டும், நாகரீகம் தவறி பேசாதீர்கள் என்று திருமாவளவன் பதில் அளித்தார்.

இதன் மூலம் திருமாவளவன் வேங்கை வயல் விவாகரத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக போட்ட ரெட்டை வேடம் அம்பலமாகியுள்ளது. அதாவது பட்டியலின மக்களின் பாதுகாவலன் என காட்டிக்கொண்டு திமுகவை ஆதரித்து வருகிறார் திருமாவளவன். திருமாவளவன் திமுகவின் ஆதரவாளர்தான் பட்டியலிட மக்களின் பாதுகாவலனோ, சமூகநீதி காவலரோ கிடையாது என்ற உண்மை தற்பொழுது இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News