ரெய்டு செய்தி காதில் விழுந்தவுடன் முதல் ஆளாக பதுங்கிய பிடிஆர் - அடுத்து அவரா?
By : Mohan Raj
அண்ணாமலை புகாரை தொடர்ந்து வெடிக்கும் ரெய்டு பின்னணி என்ன?
சமீப நாட்களாக திமுகவினரின் ஊழல்களும் அதை மறைக்க அவர்கள் புலம்பும் ஆதாரங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. முதலில் பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலை திமுகவினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக செய்தியாளர்களிடம் கூறினார். அவர் கூறியது படியே ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவினரின் டாப் அமைச்சராக உள்ள முதல்வரின் மகன் உதயநிதி கலாநிதி மாறன், கனிமொழி, ஜெயத்ரட்சகன், டி ஆர் பாலு அன்பில் மகேஷ், பொன்முடி மற்றும் முதல்வரின் மருமகனாகிய சபரீசன் உள்ளிட்ட 17 பேரின் சொத்து விவரங்களை வெளியிட்டார். இறுதியில் 1.31 லட்சம் கோடி திமுகவினரின் சொத்தாக உள்ளது என்றும் இது முதற்கட்டம்தான் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலையின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் இது பற்றி எந்த ஒரு தொலைக்காட்சி செய்திகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சொத்து விவரம் பற்றி முதல் இரண்டு நாட்களாக மௌனம் சாதித்த திமுகவினர் பிறகு படிப்படியாக எங்கு வாய் திறக்காமல் இருந்தால் தன் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையில் வழக்கு பதியப்படுமோ என்ற எண்ணத்தில் முதலில் ஆர் எஸ் பாரதி, பிறகு உதயநிதி அவரைத் தொடர்ந்து டி ஆர் பாலு என அண்ணாமலையிடம் இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு செய்ய உள்ளதாக நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு எதற்கும் பின் வாங்காமல் என்னுடன் உள்ள ஆதாரங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் கொடுத்து வழக்கு பதிவு செய்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார் அண்ணாமலை. திமுகவின் சொத்து பட்டியல் பற்றிய விவகாரமே முடியாத நிலையில் அடுத்ததாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போன்ற ஆடியோ ஒன்றை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அந்த ஆடியோவில் முதல்வரின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் சிறிது சிறிதாக வருமானத்தை ஈட்டி வந்தனர் தற்போது அவர்களின் வருமானம் 30,000 கோடியாக உள்ளது இதை என்ன செய்வது? எப்படி மாட்டிக் கொள்ளாமல் இருப்பது? என நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியது இடம் பெற்றிருந்தது. இந்த ஆடியோ வெளியாகிய பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆடியோ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு நாட்கலுக்கு அமைதி காத்து வந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தான் அந்த ஆடியோவில் இடம் பெற்றிருப்பது என்னுடைய குரல் அல்ல என்று கூறியுள்ளார். அதாவது பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் ஒப்படைத்து விசாரிக்க போவதாக கூறியதை அடுத்து பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் இல்லை என்று மறுத்துள்ளார்.
அதாவது இந்த ஒலி நாடா பொய்யானது யார் குரலில் வேண்டுமானாலும் இப்படி பேசலாம், இதற்கு பதில் அளித்த அண்ணாமலை அந்த ஒலி நாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசியது போல் ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன் என்னுடைய குரல் மாதிரியை நான் ஆய்வுக்கு வழங்க தயாராக உள்ளேன் என்று கூறினார். மேலும் பாஜக மாநில தலைவரான அண்ணாமலை நீங்கள் சொல்லும் விசித்திர கதைகளை வேறு வழி இன்றி உங்கள் கட்சியினர் நம்பலாம் ஆனால் நீங்கள் என்ன கதை கூறினாலும் அதை நம்புவதற்கு நம் தமிழக மக்கள் திமுகவினர் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள் என்றும் தனது அறிக்கையில் கூறியிருந்தார். மேலும் என்னுடைய குரல் மாதிரிகளை ஆய்வுக்கு நான் வழங்க தயார் என்று கூறி பி டி யாருக்கு பதிலடியாக அண்ணாமலை இரண்டு ஒலி மாதிரிகளை நிதி அமைச்சர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணையில் சமர்ப்பிக்கட்டும் இரண்டு ஒலி நாடாக்களின் உண்மை தன்மையை நீதிமன்றம் விசாரித்து கூறட்டும் என்றார்.
அண்ணாமலை இப்படி ஒலி மாதிரிகளை தாருங்கள் என்று கூறியதற்கு பிறகு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் கப்சிப் என்று ஆகிவிட்டார். மேலும் இது சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆளுநர் ஆர் என் ரவியிடம் பாஜக தரப்பில் கொடுத்திருப்பதால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் பிடிஆர். இதுமட்டுமல்லாமல் ஆளுநரிடம் பாஜக புகார் கொடுத்துவிட்டு வந்த அடுத்தநாள் அதிகாலையிலேயே G ஸ்கொயர், திமுக எம்.எல்.ஏ மோகனின் வீடு, முதல்வர் மருமகன் சபரீசனின் ஆடிட்டர் வீடு, செட்டிநாடு நிறுவனங்கள் உள்ளிட்ட 50 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். மாலை 7 மணி ஆகியும் அந்த ரெய்டு தொடர்வதால் திமுகவினர் கடும் பயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் ஆடியோ பற்றி என்னுடையது கிடையாது என மறுப்பு கூறிவந்த பி.டி.ஆர் ரெய்டு விவகாரம் வெளிவந்த நேரம் முதல் சமூக வலைத்தளம் முதல் எங்குமே வராமல் பதுங்கினார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.