Kathir News
Begin typing your search above and press return to search.

'ஆயிரம் ரூபாய் தரோம், யாரையாவது கூப்டு சினிமாக்கு போ' - பெண்களை முகம் சுளிக்கும் வகையில் பேசிய துரைமுருகன்

ஆயிரம் ரூபாய் தரோம், யாரையாவது கூப்டு சினிமாக்கு போ - பெண்களை முகம் சுளிக்கும் வகையில் பேசிய துரைமுருகன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 April 2023 1:37 AM GMT

இருக்கிற சொத்து குவிப்பு ஆடியோ விவகாரம் போதாது என திமுக மூத்த தலைவர் துரைமுருகன் வேறு முதல்வர் ஸ்டாலினை மீண்டும் ஒரு வம்பில் சிக்க வைத்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டு காலத்தில் மக்களிடம் நடந்த நல்ல விஷயங்கள் எது என கேட்டால் சற்று யோசிக்க செய்வார்கள், அதே சமயத்தில் திமுக அமைச்சர்கள் செய்த அடாவடி என்ன? திமுக தலைவர்கள் குவித்து வைத்துள்ள சொத்து எவ்வளவு என கேட்டால் உடனே பதில் சொல்வார்கள். அந்த அளவிற்கு திமுக அமைச்சர்கள் செய்த அடாவடியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் சொத்து பட்டியலும் மக்கள் மத்தியில் அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது.

அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே என் நேரு, அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், அமைச்சர் நாசர் போன்றோர் அனைவரும் செய்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் திமுகவின் வரலாற்றில் மக்கள் மத்தியில் மிகுந்த கெட்ட பெயரை திமுக அரசுக்கு வாங்கி கொடுத்தது. இது போதாது என்று அண்ணாமலை வெளியிட்ட ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்து பட்டியல் வேறு தற்போது ரெய்டு, ஆடியோ என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் வேறு ரெய்டு நடந்து கொண்டிருக்கும் பொழுது டெல்லி சென்று வந்த விஷயம் பரபரப்பு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் முதல்வர் குடும்பம் எந்த நேரத்தில் எது நடக்குமோ என பரிதவித்து வரும் நிலையிலும் இருந்து வருகிறது.

இப்போது முதல்வர் ஸ்டாலினின் பிபியை எகிற செய்யும் வகையில், திமுகவின் மீதமுள்ள இமேஜை டேமேஜ் ஆகும் வகையிலும் அமைச்சர் துரைமுருகன் பேசிய அடுத்த சர்ச்சை பேச்சு மக்களை ஏக போகத்துக்கும் கடுப்பில் ஏற்றியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக உலா வருகிறது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது. அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அப்படியே மனைவி சம்பாதிப்பதை கணவன் வாங்கி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்' என பேசினார். அடுத்து பேசியதுதான் ஹைலைட்டே, ''உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்.. நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" இவ்வாறு துரைமுருகன் பேசும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்த எஸ்ஆர் சேகர் வெளியிட்டுள்ளார்.

----வீடியோ------

இந்த வீடியோவை பார்த்து பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். நானே இந்த பக்கம் ரெய்டு, இந்த பக்கம் அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ டென்ஷன்ல இருக்கேன் இதுல இது வேற என முதல்வரை தற்பொழுது புலம்பு வைத்துள்ளார் திமுகவின் மூத்த தலைவரும், பொது செயலாளருமான துரைமுருகன். நாள் ஒரு மேனியும், பொழுதொரு வண்ணமும் விடிந்தால் என்ன ஆகுமோ என பயந்து கொண்டிருக்கிறேன் என மேடையிலேயே முதல்வரை புலம்ப வைத்த திமுகவினருக்கு இப்பொது இது போன்ற சம்பவம் எல்லாம் நடக்கவில்லை என்றால் தான் ஆச்சரியம் என கூறும் அளவிற்கு கடந்து போகும் அளவிற்கு அமைந்து விட்டது திமுகவின் நிலை!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News