Kathir News
Begin typing your search above and press return to search.

வேணும்ன்னா இரண்டு படம் தயாரிக்கிறோம்! ஆனா சீட்டெல்லாம் நோ! - ஆண்டவரை டீலில் விட்ட அறிவாலயம்!

வேணும்ன்னா இரண்டு படம் தயாரிக்கிறோம்! ஆனா சீட்டெல்லாம் நோ! - ஆண்டவரை டீலில் விட்ட அறிவாலயம்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 May 2023 2:06 AM GMT

படம் நடிப்பதோடு வச்சுக்கணும் தேர்தலில் சீட்டெல்லாம் கேட்டு வரக்கூடாது என அறிவாலயத்திலிருந்து கிடைத்த தகவலால் அப்செட்டில் உள்ளார் கமல்.

நடிகர் கமலஹாசனால் 2018ல் அரசியல் கட்சியாக தொடங்கப்பட்டது மக்கள் நீதி மய்யம். 2018 பிப்ரவரியில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை ஏற்றி மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிமுகப்படுத்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால் மேலும் டெல்லி சட்டமன்ற உறுப்பினர் சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்றிலிருந்து இக்கட்சியின் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தனது முதல் போட்டியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம்.

அதன்படி 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொது தேர்தலுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் 40 பேர் கொண்ட கட்சி தொண்டர்களை வேட்பாளர்களாக நியமித்து அவர்களின் பட்டியல்களையும் வெளியிட்டார் கமலஹாசன். இருப்பினும் அந்த தேர்தல் மக்கள் நீதி மய்யதிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது, தங்களது வேட்பாளர்கள் நிறுத்திய அனைத்து தொகுதிகளிலும் அவர்கள் வாங்கிய வாக்கு டெபாசிட் வாக்குகளை விட மிகக் குறைவாகவே இருந்தது. அதற்கு அடுத்ததாக 2021 சட்டமன்ற தேர்தலிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் களமிறங்கினர் கமலஹாசன். ஆனால் அதிலும் கடும் தோல்வியை சந்தித்தார். இப்படி கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற என இரண்டு தேர்தலிலும் தோல்வியை சந்தித்தன் காரணமாக கமலஹாசன் தீவிர அரசியலில் இருந்து விலகி மீண்டும் பிக் பாஸ் மற்றும் படங்கள் நடிப்பது என்று தனது பாதையை மாற்றினார். இப்படி அவர் தனது பாதையை மாற்றிய காரணத்தினால் அவர் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்களும், தலைவர்களும் மற்ற கட்சிக்கு மாறினர். இதனால் மக்கள் நீதி மய்யம் ஆளே இல்லாத கட்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற குழப்பத்தில் கமல்ஹாசன் அதிகமாக திமுக'விடம் உறவாடி வந்தார்.

ஆனால் திமுகவும் கமல்ஹாசனுக்கு சீட்டு வழங்க தயாராக இல்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவலை தெரிந்து கொண்ட கமலஹாசனும் கோவையில் மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டத்தில் கமல்ஹாசன் அதிகமாக இதை மனதில் வைத்து பேசியுள்ளார். இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அது பற்றி முடிவு எடுக்கவே இங்கு கூடியிருந்தோம். இதுவரையில் முடிவை இன்னும் எடுக்கப்படவில்லை விரைவில் முடிவு எடுக்கப்படும். மேலும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு ராகுல் காந்தி என்னை அழைத்திருக்கிறார் அது பற்றியும் விரைவில் முடிவெடுக்கப்படும். மேலும் இந்த கூட்டத்தில் பேசியிருப்பது எங்களுக்கானது ஆதலால் என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம் என்றும் பதிலளித்துள்ளார். இறுதியாக செய்தியாளர்கள் சட்டமன்ற தேர்தலில் விட்டதை நாடாளுமன்றத்தில் பெறுவதற்கு திட்டமா? என்று கேட்ட கேள்விக்கு இருக்கலாம் அதுவும் நல்ல எண்ணம் தானே என்று பதிலளித்துள்ளார் கமலஹாசன்.

ஆனால் இதன் பின்னணியில் வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது புகைப்பட கண்காட்சி, திமுக விழாக்கள், படம் நடிப்பது போன்றவற்றிற்கு மட்டும் கமலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் தேர்தல் என்று வந்தால் கமலஹாசனுக்கு கொடுக்கப்படும் சீட்டு உபயோகமற்றது என திமுக முடிவு செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது இந்த தகவல்களும் கமலஹாசனுக்கு தெரிய வந்துள்ளதால் அதனால் அவர் அப்செட்டில் உள்ளதாக தெரிகிறது.

இந்த அப்சட்டின் காரணமாகவே தற்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் நடவடிக்கைகளை வரும் தேர்தல் வரையில் சற்று அதிகப்படுத்தலாம் என கமலஹாசன் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இப்படி கட்சி நடவடிக்கைகளை அடிக்கடி ஒவ்வொன்றாக நடத்தி வருவதன் மூலம் வரும் தேர்தலுக்கு குறைந்தபட்சம் கூட்டணிக்கு நாம் பேச சென்றாலாவது ஒரு மதிப்பு இருக்கும் எனவும் கமல்ஹாசன் தரப்பு திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News