Kathir News
Begin typing your search above and press return to search.

பதவி பறிபோகும் என பயந்து தஞ்சை பெரியகோவில் விழாவிற்கு செல்லாமல் தெறித்து ஓடிய திமுக அமைச்சர், எம்.எல்.ஏ'க்கள்!

பதவி பறிபோகும் என பயந்து தஞ்சை பெரியகோவில் விழாவிற்கு செல்லாமல் தெறித்து ஓடிய திமுக அமைச்சர், எம்.எல்.ஏக்கள்!

Mohan RajBy : Mohan Raj

  |  3 May 2023 3:17 AM GMT

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தில் பயத்தினால் கலந்து கொள்ளாமல் சென்ற திமுக எம்எல்ஏக்கள்!

தஞ்சை பெரிய கோயில் என மக்களால் அறியப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில் தஞ்சாவூரில் உள்ள காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இந்தியாவுல உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாவும் அறிவிக்கப்பட்ட இந்த சிவன் கோயில கட்டியது முதலாம் ராஜராஜ சோழன். ஆண்டுகள் பல கடந்த பின்பும் கம்பீரமாக நிற்கும் இந்த தஞ்சை பெரிய கோயிலை பார்ப்பதற்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தினமும் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இப்படி அயல்நாட்டினர் கூட வியப்பாக பார்க்கிற தமிழர்களின் கட்டடக் கலைக்கு பெருமை சேர்க்கும் இந்த கோவில் தமிழக ஆட்சியாளர்களுக்கு மட்டும் எப்பவுமே பிடித்தமான கோயிலா இருந்ததில்லை. இதுக்கு காரணம் பல ஆண்டுகளாக அரசியல்வாதிகளுக்கு இடையே நிலவும் சென்டிமென்ட் தான்.

இந்த செண்டிமெண்ட் மைண்ட்ல வச்சுக்கிட்டு தான் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற தஞ்சாவூர் சித்திரை திருவிழா தேரோட்டத்துல திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் இருந்ததாக சர்ச்சை எழுந்திருக்கு. இந்த செண்டிமெண்ட் பட்டியல்ல முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஏன் ? முன்னாள் ஜனாதிபதிகள் ஜெய்சிங், எஸ்டி சர்மா கூட இருந்துருக்காங்க.

இப்படி வரலாற்று சிறப்புமிக்க உலகப் பிரசித்தி பெற்ற கோவிலுக்குள் செல்வதற்கு இந்திய அரசியல்வாதிகளுக்கு மட்டும் பயன் தரக்கூடிய அந்த செண்டிமெண்ட் என்னன்னா?, ராஜராஜ சோழன் நுழைவாயில் வழியாக, பெருவுடையாருக்கு எதிரே வந்து தரிசிப்பவர்கள் பிரபலமானவராக இருந்தால் அவர் பதவியோ இல்ல உயிரோ பறிபோகும் என்பது தான் அந்த செண்டிமெண்ட் . இது நம்பதகாததாக இருந்தாலும் சில நிகழ்வுகள் இந்த அரசியல் தலைவர்களை பயப்பட வைக்கிறது.

1976 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜனுடைய சிலையை வைக்க வேண்டும் என மத்திய அரசிடம் அனுமதி கேட்டார், அந்த அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரத்துல கோயிலுக்குள்ள வராகி அம்மனுக்கு புது மண்டபம் எழுப்பி கும்பாபிஷேகம் நடத்த நினைத்தார்கள். ராஜராஜனோட சிலையை வைக்கக்கூடாது வராகி அம்மனுக்கு புதிதாக மண்டபம் மட்டும் கட்டலாமா? என திமுக தரப்பினர் எதிர்க்கவே மத்திய அரசு மண்டபத்தை இடிக்கும்படி உத்தரவிட்டது. இந்த பிரச்சனைக்கு பிறகு கலைஞர் கருணாநிதி அரசு தரப்பில் பல பிரச்சனைகளை சந்தித்தார். அவரது ஆட்சி டிஸ்மிஸ் கூட செய்யப்பட்டுச்சு, இதுல குறிப்பிடத்தக்க விஷயம் என்னன்னா வராகி அம்மனோட புதிய மண்டபம் இடிக்கப்பட்ட அதே நாளில் தான் ஜனவரி 31,1976 அன்று திமுகவோட ஆட்சி வந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த எமர்ஜென்சி வந்து அடுத்த தேர்தல்ல வராகி அம்மனோட மண்டபத்தை இடிக்க உத்தரவிட்ட பிரதமர் இந்திரா காந்தியும் தோற்றுப் போய் அவரது ஆட்சியும் போனது. இதுவே தஞ்சை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட இரண்டு தலைவர்களின் முதல் நிகழ்வாகும்.

அதனைத் தொடர்ந்து 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது யாகசாலை பூஜையின்போது பந்தலில் தீ பற்றி கோயில் முழுவதும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர், பலரும் படுகாயம் அடைந்தனர். இதற்குப் பிறகு 23 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிகள் பல மாறினாலும் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராஜராஜ சோழனின் 1000 ஆவது முடிசூட்டு விழாவிற்கு வரும்போதுதான் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் மயக்கம் அடைந்து விழுந்ததாகவும், சில நாட்களில் அவரோட உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், அதே நேரத்துல இந்திராகாந்தி அவர்களின் மரணமும் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ரெண்டு நிகழ்வுகளுக்கு அப்புறம் கோவிலுக்கு போனா ஒன்னு பதவி பறிபோயிடும், இல்லனா உயிர் போகும் என்ற அச்சம் அரசியல்வாதிகளுக்கு இடையே ரொம்பவே அதிகமானது.

அப்படியெல்லாம் எந்த செண்டிமெண்ட் இல்ல இதெல்லாம் சும்மா மூடநம்பிக்கை தான். இந்த பயத்த நாங்க உடைக்கிறோம் என தமிழகத்தில் அப்போதைய ஆட்சியில் இருந்த திமுகவினர் தஞ்சை பெரிய கோயிலில் தனது கட்சியின் ஆண்டு விழாவை கொண்டாடினார்கள். அந்த விழாவில் முதல்வர் கருணாநிதி, கனிமொழி, பழனி மாணிக்கம், ஆ. ராசா உட்பட திமுக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த விழா நடத்தி அடுத்தடுத்த ஆண்டுகள்ல அதில் கலந்து கொண்ட அத்தனை பேரோட பதவியும் பறிபோனது. ஆ. ராசாவும் கனிமொழியும் திகார் சிறை வரைக்கும் சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் நம்பிக்கையே இல்லை என்று கூறும் திமுகவினர் கூட தஞ்சை பெரிய கோவிலின் செண்டிமெண்டில் கொஞ்சம் பயந்து தான் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் போது தஞ்சை பெரிய கோயில் தொடர்பான எல்லா விழாக்களிலும் அந்த கட்சியின் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். ஆனால் திமுக ஆட்சியில் உள்ளூர் திமுக எம்எல்ஏக்கள் கூட கலந்து கொள்வதில்லை . அப்படிதான் இப்போ சமீபத்தில் நடந்த தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதவி பறிபோகும் என்ற சென்டிமென்டால் கலந்து கொள்ளலாம் இருந்திருக்கலாம் என சர்ச்சைகள் எழுந்திருக்கு.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்த தேரோட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை ? என திமுகவை சேர்ந்த டி.கே. ஜி. நீலமேகம் அவர்களை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை எடுக்கவில்லையாம். அவரது தரப்பினரிடம் அவர்கள் விசாரித்த போது மேயர் சன். ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோரே இதற்கான ஏற்பாட்டை செய்தனர் என்றும் அவர்களுக்கும் எம்எல்ஏ தரப்புக்கும் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் அதனால்தான் நாங்கள் கலந்து கொள்ளவில்லை வேறு எந்த காரணமும் இல்லை. டி கே ஜி அடிக்கடி பெரிய கோவிலுக்கு செல்ல கூடியவர் தான் என்று கூறினர்.

இதேபோல் தான் கடந்த ஐப்பசி மாதம் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழாவில் அவருடைய சிலைக்கு தஞ்சை மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு தொகுதி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் கோயிலுக்குள் செல்லாமல் சென்றுவிட்டார் என்பதும், நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ ஏ டி கே ஜி நீலமேகம் கலந்து கொள்ளவில்லை என்பதும், அதே தினத்தில் ராஜராஜ சோழனின் சிலைக்கு மரியாதை செய்ய வருவதாக சொன்ன அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனும் வராமலேயே சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு செய்ய வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பெரிய கோவிலின் சுற்றுச்சுவரை ஒட்டி உள்ள பெத்தண்ணன் கலையரங்கு வரை வந்துவிட்டு கோவிலுக்குள் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News