Kathir News
Begin typing your search above and press return to search.

பாலைவனமாக மாறும் கிணத்துக்கடவு - 'நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா?' என தலையில் அடித்துக்கொண்டு கதறும் மக்கள்!

பாலைவனமாக மாறும் கிணத்துக்கடவு - நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? என தலையில் அடித்துக்கொண்டு கதறும் மக்கள்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 May 2023 7:55 AM GMT

தினசரி தமிழகத்திலிருந்து கொள்ளை போகும் 5000 லோடு கனிம வளம்!

கோவை மாவட்டம் தேக்கானி, காரச்சேரி, கள்ளப்பாளையம், மயிலேறி பாளையம், செட்டி பாளையம், மதுக்கரை, கிணத்துக்கடவு சுற்று வட்டாரங்களில் கல்குவாரிகள் அதிகம் இருக்கின்றன. இதில் சில குவாரிகளுக்கு மட்டுமே அரசு உரிமம் வழங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள நடுப்பட்டி கிராமத்தில் இயங்கக்கூடிய கல் குவாரிகளால் அப்பகுதியில் உள்ள விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து இந்த பகுதி மக்கள் சொல்வதாவது, அனுமதி பெற்று தான் இந்த கல்குவாரி இயங்கி வருது! நாங்க இல்லன்னு சொல்லல! ஆனா?அனுமதித்த அளவுக்கு அதிகமா இங்க உள்ள பாறைகளை குடைந்து கனிம வளங்களை எடுக்குறாங்க, இதனால இங்க சுத்தி உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுது, ஒருவர் மட்டும் லாபம் பாக்குறதுக்காக ஒட்டுமொத்த கிராமத்தினரும் தினமும் சாக முடியுமா? இப்படியே போனா நாங்க சீக்கிரம் சவுக்குழியில் தள்ளப்படுவோம் என கிராம மக்கள் முறையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டு இருக்கும் 300 குடும்பங்கள் வாழும் இந்த கிராமத்தில் அசோக் ப்ளூ மெட்டல், சப்தகிரி ப்ளூ மெட்டல் என பல கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கனிம வளங்களை வெடிவைத்து எடுப்பதாகவும், அதனை அத்துமீறி கேரளாவுக்கு கொண்டு செல்வதாகவும் அப்பகுதியில் புகார் வந்துள்ளது. திமுக பிரமுகர்க்கு சொந்தமான கல்குவாரியில் அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான கனிம வளங்களை வெடிவைத்து தகர்த்து எடுக்கும் போது அதில் இருந்து பறக்கும் கற்களும்,தூசிகளும் விவசாய நிலங்களின் மீது படுகிறது இதனால் விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும், அந்த தூசிகள் குவாரிக்கு அருகில் உள்ள வீடுகளின் உணவுகளில் படுவதால் அதை சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவதாகவும், அதை குவாரி உரிமையாளர்களிடம் கேட்டால் அவர்கள் மிரட்டுவதாகவும் அங்குள்ள பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இப்படி பல நாட்களாக அங்குள்ள பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த தொடங்கினர். இதனைத் தொடர்ந்து சிவப்பிரகாஷ் என்பவரது கல்குவாரியில் கடந்த மார்ச் 29, 2023 ஒரு தனியார் தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் அருண் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலாஜி ஆகியோர் வீடியோ எடுக்க சென்றனர். அப்போது குவாரியை சேர்ந்த மூன்று நபர்கள் இந்த இருவரையும் வழிமறித்து அவர்கள் வைத்திருந்த கேமராவை பிடிங்கி அடித்து புதரில் தள்ளி விட்டார்கள். இந்த தகவலை அறிந்து அங்கு வந்த போலீசார் காயம் அடைந்த பாலாஜியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாங்க . பாதிக்கப்பட்ட இரண்டு தனியார் தொலைக்காட்சி நிபுணர்களும் போலீசார் இடம் புகார் செய்தும் அப்பகுதி போலிஸ் ஒரு நாள் முழுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சமாதானம் செய்வதில் மட்டும் குறியாக இருந்தார்களாம்.

தாக்கப்பட்ட டிவி ஒளிப்பதிவாளர் பாலாஜி இந்த சம்பவம் குறித்து சொல்லும்போது, அந்த கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமங்களை தோண்டியதால் அதை நாங்கள் கேமராவில் பதிவு செய்தோம் அப்போது குவாரியை சேர்ந்த மூன்று நபர்கள் அங்கு வந்து எங்களை வழிமறித்து தகாத வார்த்தைகளில் எங்களை திட்டி எங்கள் கேமராக்களை உடைக்க முயன்றனர். நாங்கள் அதை தடுத்தபோது எங்கள் கேமராவை பிடுங்கி என்னை பலமாக அடித்து தள்ளிவிட்டார்கள் எனக் கூறினார்.

இப்படி திமுக பிரமுகரின் கல்குவாரியினால் பல பிரச்சனைகள் உள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேலுமணி "தமிழகத்தில் தினசரி 4000 முதல் 5000 லோடு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன, ஆனால் அதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதற்கு காரணம் திமுகவை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாகனத்துக்கும் அதிக லஞ்சம் பெற்று இந்த கனிம வளங்களை விற்கிறார்கள்” எனக் கூறினார். இந்த கனிமவளக் கொள்ளை தொடர்பாக சட்டமன்றத்திலேயே அதிமுக சார்பில் கடுமையாக பேசியிருக்கிறோம் ஆனால் அதைப் புறக்கணித்து விட்டார்கள் திமுகவினர்” அப்டின்னு சொல்லிருக்கார்.

கிணத்துக்கடவு பகுதியில் கொள்ளை போகும் இயற்கை வளங்களை ஆளுங்கட்சி அராஜகத்தை மீறி எப்படி காப்பாற்றப்போறம் அப்டின்னு இந்த பகுதியில் வாழ்ற கிராமத்து மக்கள் ரொம்பவே கவலையா இருகாங்க!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News