திராவிட மாடல் என்ற பர்னிச்சரை சுக்கு நூறாக உடைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி - பின்னணியில் டெல்லியா?
By : Mohan Raj
கேப்பு விடாமல் திமுகவை அடிக்கும் ஆளுநர்!
தமிழகத்தில் ஆளுநர் ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவர் கூறும் சில கருத்துக்கள் திமுகவிற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்ததால் ஆளுநர் ஆர் என் ரவிக்கும், திமுகவிற்கும் இடையே பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் நாள் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என.ரவி தொடர்ந்து திமுகவின் கருத்துக்களுக்கு முரண்பாடாக செயல்பட்டு வருவதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் பேசும்பொழுது மத்திய அரசை ஒன்றிய அரசு என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் அவர்கள் மத்திய அரசை மத்திய அரசு என்று தான் கூற வேண்டும், எதற்காக ஒன்றிய அரசு என்று கூறுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலைஞர் மற்றும் அண்ணா காலங்களில் உபயோகித்த வார்த்தைகளை மட்டுமே நாங்கள் இப்போது உபயோகிக்கிறோம். அண்ணா எப்பொழுதும் சட்டசபையில் பேசும்பொழுது ஒன்றிய அரசு என்ற வார்த்தையை உபயோகிப்பார். அதனால் தான் நாங்களும் அந்த வார்த்தையை உபயோகிக்கிறோம் என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் தமிழ்நாட்டை "தமிழ்நாடு" என்ற பெயர் மாற்றம் செய்து தமிழகம் என அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர், தமிழ்நாட்டிற்கு இந்த பெயர் வருவதற்காக சுதந்திர போராட்ட வீரரான சுந்தரலிங்கம் 76 நாள் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அதற்கான வரலாறு ஆர் என் ரவிக்கு தெரியாது என்றெல்லாம் பல தலைவர்கள் கூறி,இந்த கருத்துக்கு நாங்கள் வன்மையான கண்டனம் தெரிவிக்கிறோம் என்றும் கூறினார்கள். இதற்கு விளக்கம் அளித்த மு க ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது, சுதந்திர போராட்டத்தில் சென்னை மாகாணம் என பெயர் கொண்ட தற்போதைய தமிழ்நாட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்விகள் எழுந்தபோது சுதந்திர போராட்ட தலைவர்கள் அனைவரும் முன்வைத்த பெயர் "தமிழ்நாடு" என்பதுதான் யாரும் தமிழகம் என்ற பெயரை முன் வைக்கவில்லை, எனவே தமிழ்நாடு என்ற பெயர்தான் சரியான பெயர் இதை மாற்றுவதற்கு வாய்ப்பே இல்லை என கூறினார்.
இப்படி நிறைய கருத்துக்களை தமிழக ஆளுநர் திமுகவினருக்கு எதிராக கூறிய காரணத்தினால் கடுப்பான திமுகவினர் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என குடியரசு தலைவர் வரை சென்று மனு கொடுத்தனர்.
இந்த நிலையில ஒரு வழியா ரைடு விவகாரம், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம் முடிந்து அப்பாடா என நிம்மதியாக இருந்த திமுகவினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக இருக்கிறது ஆளுநரின் அடுத்த அடி.
தமிழ்நாட்டின் ஆட்சியை திராவிட மாடல் என குறிப்பிடும் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளுநர் ஆர் என் ரவி "திராவிட மாடல் என்பது ஒரு காலாவதியான கொள்கை" என விமர்சனம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான போது முதலமைச்சர் ஸ்டாலின் "தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய திராவிடம் மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளித்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது என குறிப்பிட்டார்". மேலும் இதனைத் தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்திலும் இந்த வெற்றியை குறிப்பிட்ட முதலமைச்சர் அதிலும் திராவிட மாடல் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து தமிழகத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை ஒரு திராவிடம் மாடல் ஆட்சி என்று திமுகவினரும் கூறி வருகின்றனர்.
திமுக வினரின் இந்த கருத்தை மறைமுகமாக எதிர்க்கும் விதமாக ஆங்கில நாளிதழ் பேட்டி அளிக்கும்போது ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் கூறியதாவது "திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிதான். திராவிட மாடல் என்று எதுவும் இல்லை, அது வெறும் ஒரு அரசியல் வாசகம் மட்டும் தான் திராவிட மொழிக் கொள்கையை ஒரே நாடு ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது, இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும் வளரலாற்றையும் மறைக்க பார்க்குது" அப்படின்னு விமர்சித்திருக்கிறார்.
இப்படி திராவிட மாடல் என்ற சொல்லாடலை திமுகவினர் பெருமையாக கூறி வரும் வேளையில் திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கை என ஆளுநர் பற்றவைத்த நெருப்பு தற்பொழுது பற்றி எறிகிறது, ஏற்கனவே கடந்த மாதம் அண்ணாமலை வெளியிட்ட சொத்துப்பட்டியல் விவகாரத்தில் பெருமளவு பின்னடைவை சந்தித்து வந்த அந்த விவகாரம் சற்று ஓய்ந்த நிலையில் தற்பொழுது ஆளுநர் திராவிட மாடல் என்னும் பர்னிச்சரை உடைத்து திமுகவினரை மேலும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.