நாங்கல்லாம் செக்குலரிஸ்ட் தெரியுமா? - பல் இளிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மதச்சார்பின்மை!
By : Mohan Raj
மதச்சார்பற்ற போர்வையில் சுற்றும் ஏ ஆர் ரகுமானின் குட்டு மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட தென் இந்தியா முழுவதும் பரவலாக பேசப்பட்டு திரையிடக்கூடாது என எதிர்ப்புகளைப் பெற்று வருகின்ற படம் தான் கேரளா ஸ்டோரி. ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை தன்னுடன் சுமந்து வந்து பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரையரங்குகளில் வெளியிடப்பட்டாலும் இன்னும் ஆங்காங்கே அதற்கான பல சர்ச்சைகள் வெடித்துக்கொண்டே இருக்கின்றது. இந்த சர்ச்சைகளுக்கு நடுவிலே தனது மத சார்பின்மையை காட்டும் வகையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள செருவல்லி மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்று இருந்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வெளியிட்டது மட்டுமல்லாமல் அந்த விடியோவுடன் 'மனித குலத்தின் மீதான அன்பு நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்' என்று தனது கருத்தை வேறு பதிவிட்டு தான் ஒரு மதச்சார்பற்றவர் என காட்டிக்கொள்ள ஏ ஆர் ரகுமான் முயற்சி பண்ணிருக்காரு!
ஆனால், இப்பொழுது மதச்சார்பின்மை, சமத்துவம் பேசுகின்ற ஏ. ஆர் ரகுமான் இதற்கு முன்பு மூன்று சம்பவங்களில் இந்து மதத்தை மட்டும் ஒதுக்கும்படியான நிகழ்வுகளை நடத்தியதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் நிகழ்வு, பிறைசூடன் பல தமிழ்ப் பாடல்களுக்கு வரிகள் எழுதிய புகழ்பெற்ற விருது பெற்ற தமிழ்க் கவிஞர். ரஹ்மானின் சில பாடல்களுக்கு பிறைசூடன் வரிகள் எழுதியுள்ளார். தமிழ் யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த போதுதான் ரகுமான் செய்த செயலை பிறைசூடன் கூறியுள்ளார், ஒருமுறை ரஹ்மானின் வீட்டிற்கு பிறைசூடன் சென்றுள்ளார், அப்போது ரஹ்மானின் தாயார் விபூதி மற்றும் குங்குமம் ஆகியவற்றை அகற்றச் சொன்னாராம். ஏனென்றால் அந்த நேரத்தில் ரஹ்மான் ஏற்கனவே குடும்பத்துடன் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தார். ஆனால், ரகுமானின் தாயார் கூறியதற்கு பிறைசூடன் கேட்காமல் சிறுவயதில் இருந்தே தனது நெற்றியில் உள்ள இந்து மத அடையாளமான விபூதியை நான் வைத்துக்கொண்டுள்ளேன் என்னால் அளிக்க முடியாது என கூறியுள்ளார். இப்படிப்பட்டது ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டின் மதசார்பின்மை!
இரண்டாவது சம்பவமாக, ஒரு ரஹ்மான் ரசிகர்கள் நியூ படத்தின் ‘காலையில் தினமும்’ பாடலைக் கேட்காமல் இருக்கவே முடியாது, மறைந்த பாடலாசிரியர் வாலியால் எழுதப்பட்ட அன்னையர்களுக்கான பாடல் இது. ஆனால் இந்தப் பாடலின் வரிகளை எழுதிய பிறகு நடைபெற்ற சம்பவத்தை பற்றி வாலி என்ன சொல்லிருக்காருன்னு பார்த்தீங்கன்னா! ரஹ்மான் அந்த பாட்டுல அம்மாவை கடவுள் அப்டின்னு சொல்ற ஆரம்ப வரிகளை மாத்தணும் அப்டின்னு சொல்லிருக்காரு! வாலி எழுதிய ஆரம்ப வரிகள், "காலையில் தினமும் கண் விழித்தாள் நான் கை தொழும் தெய்வம் அம்மா" அப்டின்னு எழுதி படப்பிடிப்பும் முடிச்சுட்டாங்க, ஆனா இந்த வரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஹ்மான், தாயை தனது கடவுளுடன் ஒப்பிட இஸ்லாம் அனுமதிக்கவில்லை அப்டின்னு சொல்லி! பாடலாசிரியர் வாலியை பாடல் வரிகளை மாற்றும்படி சொல்லிருக்காரு. இதனால் எரிச்சலடைந்த வாலி, ரஹ்மானின் வற்புறுத்தலின் பேரில் தமிழில் கடவுள் என்று பொருள்படும் ‘தெய்வம்’ என்ற சொல்லை ‘தேவதை’ அப்டினு மாத்தி கொடுத்துருக்கார். தாயை புகழ்வதை விட தனது இஸ்லாம் முக்கியம் என நினைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மனநிலையை கூறும் சம்பவம் இது!
மூன்றாவது சம்பவம், பாய்ஸ் (2003) படத்தில் வரும் ஐயப்ப பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை என்றும் தமிழ் திரையுலகத்தின் இசைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இசை ஆல்பத்தின் கேசட்/சிடி அட்டையில் கூட ஐயப்ப பாடல் குறிப்பிடப்படவில்லை, அந்த படத்தில் வரும் ஐயப்ப பாடலை மத சார்பற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளர் இருந்த பிரவீன் மணி இசையமைச்சுருக்கார், இவர்தான் லிட்டில் ஜான் அப்படின்ற படம் மூலமா இசையமைப்பாளரா அறிமுகம் ஆனவர்! ஏ.ஆர்.ரஹ்மான் தான் ஐயப்பப் பாடலை இசையமைத்தால் இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணானதாக இருக்கும் என்று கூறி இசையமைப்பாளர் பிரவின் மணியை இசை அமைக்க கூறியிருக்கிறார், ஆனால் அதே ரஹ்மான் தான் மின்சார கனவு படத்தில் இயேசுவை வணங்கும் ‘அன்பென்ற மழையிலே’ பாடலுக்கு மியூசிக் போட்டார் அப்டின்றதும் இங்க நாம பார்க்கவேண்டியது.
இப்படி பல சம்பவங்கள் மற்ற மதத்தின் நம்பிக்கைகளை விட தன் மதத்தின் நம்பிக்கையே சிறந்தது அப்டின்னு சொல்லும் ஏ.ஆர்.ரகுமான் தான் இப்ப்போ கேரளா ஸ்டோரி படத்திற்கு 'மதங்களை தாண்டி மனிதர்கள்' அப்டின்னு சொல்றாரு. வேடிக்கையா இருக்குன்னு ரசிகர்கள் சொல்றாங்க!