எதிர்கட்சியா இருக்கும்போது நல்லா சக்கரையா பேசுனீங்களே முதல்வரே? - போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்!
By : Mohan Raj
வாக்குறுதி எங்கே எனக்கேட்டு பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திமுகவிற்கு மற்றுமொரு தலைவலி ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்துவந்த திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தனது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு வாக்குறுதிகளை மக்கள் முன் வைத்தது. அதில் ஒன்றாக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தீர்வு நடத்தப்படுவதாக அதிமுக ஆட்சியில் கூறப்பட்டது, திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மற்றொரு பணி நியமனத் தேர்வு நடத்துவதற்கான அரசாணை ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்.
ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு காப்பாற்றவில்லை, சாக்குபோக்கு காரணத்தை கூறி மறுபடியும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்தப்பட்டு பின்பே பணியமர்த்தப்படும் என்று அரசாணையை பிறப்பித்துள்ளது என பட்டதாரி ஆசிரியர்கள் கூறினர். இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போது உள்ள முதல்வருமான மு க ஸ்டாலின் டெட் தேர்விற்கு பிறகு பணி நியமன தீர்வு நடத்தப்படும் என்ற அரசாணைக்கு எதிராக அன்று குரல் கொடுத்திருந்தார். ஆனால் தற்போது நிலைமையே மாறிவிட்டது ஆதலால் திமுக தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றலாம் என்று கூறப்பட்டிருந்தது. பிறகு 2013 ஆம் ஆண்டில் இந்த டெட் தேர்வில் வெயிட்டேஜ் என்று புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய முறை மூலம் பணி நியமனம் அமர்த்தப்படும் என்பதற்கு பல்வேறு தரப்பிடமிருந்து எதிர்ப்புகளும் போராட்டங்களும் கிளம்பியதால் டெட் தேர்வில் வெயிட்டேஜ் முறை கைவிட்டப்பட்டது. அதற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட டெட் தேர்வில் புதிய முறை கொண்டுவரப்பட்டு அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஒரு நியமன போட்டி தேர்வில் சந்தித்த பிறகே பணி நியமனம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பணி நியமத்திற்காக மீண்டும் ஒரு போட்டி தேர்வு நடத்தக்கூடாது என்றும் தேர்ச்சி பெற்ற பெரும்பாலான ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற வேண்டும் என்றும், பாதி பேர் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு எஞ்சியவர்களுக்கு பணி நியமத்திற்காக மற்றுமொரு போட்டி தேர்வு நடத்துவது எந்த தரப்பில் நியாயம் ஆதலால் 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு இந்த அரசாணையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஆசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நல சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில தலைவர் கபிலன் சின்னசாமி தலைமையில் இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறியதாவது எதிர்க்கட்சியாக இருக்கும் போது வாக்குறுதி அளித்து ஏமாற்றி எங்களது ஓட்டுகளையும் பெற்று விட்டு இப்பொழுது உங்கள் அரசு ஆளும் அரசாக இருக்கும் போது ஏன் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடாது என்று பட்டதாரி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புள்ளதால் திமுகவிற்கு மற்றுமொரு தலைவலியாக இது அமைந்துள்ளது. ஏற்கனவே குடும்ப தலைவிகள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போக்குவரத்து சங்க ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்ற பலரும் திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தற்போது பட்டதாரி ஆசிரியர்களும் இந்த போராட்ட பட்டியலில் சேர்ந்துள்ளனர்.