Kathir News
Begin typing your search above and press return to search.

திடீர் தனிக்குடித்தனம் சென்ற உதயநிதி - துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை என கோபமா?

திடீர் தனிக்குடித்தனம் சென்ற உதயநிதி - துணை முதல்வர் பதவி கொடுக்கவில்லை என கோபமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  16 May 2023 11:07 AM GMT

உதயநிதி தனிக்குடித்தனம் போய்விட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது 2021 சட்டமன்ற தேர்தலில்

திமுக முன்னாள் தலைவரும், தனது தாத்தாவுமான கருணாநிதி தொடர்ச்சியாக

போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார் உதயநிதி ஸ்டாலின். முதல் ஒரு

வருடம் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக அமைச்சரவை இரண்டாம்

ஆண்டிலேயே திமுகவின் முக்கிய அமைச்சர் பொறுப்பை வழங்கியது. இளைஞர் நலன்

மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார் உதயநிதி ஸ்டாலின்,

அமைச்சரானவுடன் தமிழக அமைச்சரவை தரவரிசை பட்டியலில் பத்தாவது இடத்தையும்

பிடித்தார்.

அதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படியாக எப்படியும் துணை முதல்வர்

ஆகிவிடுவார் உதயநிதி ஸ்டாலின் என திமுக தரப்பினும் பல்வேறு அரசியலும்

விமர்சகர்களும் கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில் சமீபத்தில்

அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ விவகாரத்தின் காரணமாக திமுக அமைச்சரவை பட்டியல்

மாற்றப்பட்டது. அமைச்சர் பி டி ஆர் இலாகா மாற்றப்பட்டு, அமைச்சர் நாசர்

அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அதுபோல் பிடிஆர் இடமிருந்து

நிதித்துறை பறிக்கப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை

வழங்கப்பட்டது. இப்படி அமைச்சரவை மாற்றத்தின் போது உதயநிதிக்கு துணை

முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என திமுகவிலேயே நிறைய உதயநிதி

ஆதரவாளர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் எதிர்பார்த்தது போல் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு

வழங்கப்படவில்லை. இந்த நிலையில் உதயநிதி தனிக்குடித்தனம் சென்று விட்டார்

என தகவல்கள் வெளியாகி உள்ளது. மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர்

தனியார் யூ ட்யூப் நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்தார். 'அப்பொழுது

அவர் கூறியதாவது அமைச்சரவை மாற்றம் என்பது நடக்கக் கூடியது தான்

நடந்துள்ளது ஆனால் இந்த அமைச்சரவை மாற்றம் உண்மையிலேயே அண்ணாமலைக்கு

கிடைத்த வெற்றி தான். இது மட்டுமல்லாமல் நிதி அமைச்சர் பி டி ஆர்

பழனிவேல் தியாகராஜன் இடம் தகவல் தொழில்நுட்பத் துறையை கொடுத்ததற்கு

காரணம் அவரை டம்மி ஆக்க வேண்டும் என்பதற்காகத்தான் இது மட்டுமல்ல உதயநிதி

துணை முதல்வர் ஆனால்தான் நல்லது! உதயநிதி தற்பொழுது திமுக அமைச்சரவையில்

முடிவு எடுக்கும் முக்கிய அமைச்சராக உள்ளார். அது மட்டுமல்லாமல் முதல்வர்

மகன் வேறு தவறாக துணை முதல்வர் பதவியேற்றால் நன்றாக இருக்கும்' என்றார்.

மேலும் உதயநிதி பற்றி கூறிய அவர், 'உதயநிதி தற்பொழுது தனிக்குடித்தனம்

சென்றுவிட்டார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியே தனிக்குடித்தனம் சென்று

விட்டார் குறிஞ்சி என்ற பெயர் கொண்ட பங்களாவிற்கு அப்பாவு வீட்டிற்கு

பக்கத்தில் சென்று விட்டார்' என கூறினார்.

மேலும் 'பத்திரிகையாளர்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சென்றுள்ளார்'

எனக்கூறி உள்ளார். மேலும் துணை முதல்வர் பொறுப்பு வழங்க வேண்டும் என

உதயநிதி கோரிக்கையை முன் வைத்ததாகவும் அது கிடைக்கவில்லை என்ற

காரணத்தினால் தனிக்குடித்தனம் சென்றார் எனவும் சில தரப்பில் இருந்து

தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அமைச்சரவை பட்டியல் வெளியானது, மே

மாதத்தில் ஆனால் சவுக்கு சங்கர் கூறியபடி உதயநிதி தனிக்குடித்தனம்

சென்றது ஏப்ரல் மாதத்தில் அதனால் இது காரணமாகவும் இருக்காது என்றும் சில

தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் வளரும் இந்த காலகட்டத்தில் அரசியல்

மற்றும் நிர்வாகம் போன்றவைகளுக்கு சரியாக இருக்கும் என்ற காரணத்தினால்

உதயநிதி தனிக்குடித்தனம் சென்றார் எனவும் பல்வேறு வகையான விமர்சனங்களை

அரசியல் விமர்சகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

இது மட்டுமல்லாமல் விரைவில் உதயநிதிக்கு துணை முதல்வர் என்ற பொறுப்பு

வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News