Kathir News
Begin typing your search above and press return to search.

பாடல்களில் மதத்தை பரப்புகிறாரா ஹாரிஸ் ஜெயராஜ்? - வெளிவந்த பகீர் பின்னணி!

பாடல்களில் மதத்தை பரப்புகிறாரா ஹாரிஸ் ஜெயராஜ்? - வெளிவந்த பகீர் பின்னணி!

Mohan RajBy : Mohan Raj

  |  23 May 2023 5:27 AM GMT

மறைமுகமாக தன்னுடைய பாடல்களில் கிறிஸ்துவத்தை பரப்பியதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



பொதுவாக சினிமாக்களில் வரும் பாடல்களில் பல்வேறு இசையமைப்பாளர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை இடம்பெற முயற்சி செய்வார்கள். அப்படி தான் இசை அமைத்த பாடல்களில் கிறிஸ்துவத்தை மறைமுகமாக புகுத்தியதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மீது தற்பொழுது புதிதாக குற்றச்சாட்டு ஒன்று எழுதி இருக்கிறது. இந்த ஒரு குற்றச்சாட்டு தான் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாகவும் மாறி இருக்கிறது. சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர்.

மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார்.


இவர் தன்னுடைய 12-ம் வயதியல் 1987ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். இவர் கவுதம் மேனன் இயக்கத்தில் 2001 -ம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதேபோல, ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீபோர்ட் பிளேயராக இருந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் தற்போது தனி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். இந்த சூழலில், 1999-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான முதல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இருந்தார்.


எனினும் இவர் முதல்வன் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஹிட் சாங் ஒன்றிற்கு கம்போஸ் செய்த கீபோர்ட் பிளேயர் ஹாரிஸ் ஜெயராஜ் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, முதல்வனே என்கிற பாடலை முழுக்க முழுக்க கம்போசிங் செய்தது ஹாரிஸ் ஜெயராஜ்தானாம். அந்தப் பாடல் தொடக்கத்தில் ஒரு முழு ஹம்மிங் லயன் இடம் பெற்றிருக்கும். அந்த ஹம்மிங் ஹா…. லே…. லூ….யா… என்று இருக்கும். இந்த ஒரு இடத்தில் தான் அவர் கிறிஸ்துவத்தை புகுத்தியதாக தற்பொழுது சர்ச்சை ஒன்று எழுந்து இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அல்லேலூயா என்பதை தனித்தனி எழுத்துக்களாக பிரித்து, ஹா… லே…. லூ… யா… என்று ஹம்மிங் செய்திருக்கிறார் என்கிறார்கள். இது தொடர்பான வீடியோவில் திரை துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் அளித்த பேட்டியின் போது ஹாரிஸ்ஜெயராஜ் அவர்களை இதைப் பற்றி தன்னிடம் தெரிவித்ததாக அவர் அந்த பேட்டியில் பதிவு செய்து இருக்கிறார்.


இப்படி திரைத்துறையை தனது மதத்தை பரப்புவதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார் என சமூக வலைதள வாசிகளிடம் கடந்த சில நாட்களாக இந்த விஷயம் பேசப் பொருளாக மாறி இருக்கிறது

Next Story
கதிர் தொகுப்பு
Trending News