Kathir News
Begin typing your search above and press return to search.

கிராமப்புற மாணவர்கள் தரமான கல்வி பெற தடை போடும் தி.மு.க.! அநீதியா? பாரபட்சமா?

கிராமப்புற மாணவர்கள் தரமான கல்வி பெற தடை போடும் தி.மு.க.! அநீதியா? பாரபட்சமா?

Soma SundharamBy : Soma Sundharam

  |  23 May 2023 11:45 AM GMT

இருபாலரும் இலவசமாக தங்கிப்பயிலும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், ஆழமான புரிதலுடன் கூடிய, தரமான கல்வியை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கி, நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக அவர்களை தயார்படுத்துவதாகும். இதுவரை இப்பள்ளியில் படித்த பலரின் வாழ்விலும் ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களும், தங்கள் இடத்திற்கு இப்பள்ளியை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்கின்றன, இதற்கு ஒரே விதிவிலக்காக கருப்புக் கொடி காண்பிப்பது தமிழ்நாடு மட்டுமே. இப்பள்ளிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது திராவிடக் கட்சிகளே தவிர, தமிழக மக்கள் அல்ல எனபதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். குறிப்பாக தி.மு.கவும், அதனை மையமாகக் கொண்ட அமைப்புகளுமே (ecosystem) இதற்கு முட்டுக்கடையிடுகின்றன.

தேர்ந்தெடுக்கும் செயல்முறையும், இடஒதுக்கீடும்:

1. நவோதயா பள்ளிகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள், CBSE அமைப்பினால் நடத்தப்படும் 'ஜவஹர் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வு' ஒன்றை எழுத வேண்டும். அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 6ம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கும் மாணவர் சேர்க்கை, பிறகு 9ம், 11ம் வகுப்பு வரை நீள்கிறது. கிராமப்புற மாணவர்களும் பதிலளிக்கும் வகையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்படுகிறது.

2. கிராமப்புற மாணவர்களுக்காக 75% இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவிகளுக்கும், 3 % மாற்றுத்திறனாளிகளுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதுபோக, அம்மாவட்டத்தில் SC & ST யினரின் மக்கள் தொகையைப் பொறுத்தும், 27% OBC வகுப்பினருக்கும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இலவச கல்வி

JEE, NEET உள்ளிட்ட கடினமான நுழைவு மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு தரமான கல்வியை வழங்குவதில் நவோதயா பள்ளிகள் பெயர் பெற்றுள்ளன.

ஒவ்வொரு NV பள்ளியும் தங்கும் பள்ளியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவினங்களை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்கள், அனைத்து மாணவிகள், SC & ST பிரிவை சேர்ந்தவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் கல்வி இலவசம். 9 முதல் 12 படிக்கும் மாணவர்களிடத்தில் பெயருக்கு மாதம் 600 ருபாய் கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தங்கும் இடம், உணவு, பள்ளி சீருடைகள், புத்தகங்கள், படிப்புக்கு தேவையான உபகரணங்கள், பள்ளிக்கு சென்று வர போக்குவரத்து வசதி அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றது.

நவோதயா பள்ளிகளின் செயல்பாடு

கடந்த இரண்டு ஆண்டுகளில் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களின் கல்விச் சாதனைகள், அதன் கல்வித் தரம் மற்றும் கற்பிக்கும் வழிமுறைக்கு சான்றாக உள்ளான். அரசு பள்ளிகள், தேர்வுகளில் சரியான முடிவுகள் கொடுக்காது என்று பலரும் கூறுவதை முற்றிலும் தவறு என நிருபித்து ஒரு முன்மாதிரி பள்ளியாக விளங்குகிறது.

2023 ஆம் ஆண்டு நடந்த சிபிஎஸ்சி தேர்வில் பத்தாவது வகுப்பில் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய 45, 911 மாணவர்களில் 85.05% மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 வது வகுப்பு முடிவுகளில் இவ்வண்ணிக்கை அதையும் விட அதிகமாக உள்ளது. அங்கு மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்கள் 35, 722 ஆவர்.


JEE மற்றும் NEET போன்ற நுழைவுத் தேர்வுகளில் இம்மாணவர்கள் பெற்ற முடிவுகள் மிகவும் நன்றாக உள்ளன. 2021 ஆம் ஆண்டில் JEE மெயின் தேர்வுகளில் மொத்தம் 10,247 NV மாணவர்கள் தேர்வெழுதினர், இதில் 4292 மாணவர்கள் மெயின் தேர்வுகளிலும் 1121 மாணவர்கள் அட்வான்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றனர். 2022 ஆம் ஆண்டு மொத்தம் 7585 NV மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 4296 மாணவர்கள் மெயின் தேர்வுகளிலும், 1010 பேர் அட்வான்ஸ்ட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றனர்.


நீட் தேர்வுகளை பொருத்தவரை, 2021 ஆம் ஆண்டில் 17,520 பேர் தேர்வு எழுதினர். அதில் 14,025 பேர் தேர்ச்சி பெற்றனர். 2022 ஆம் ஆண்டில் 24, 877 பேர் தேர்வு எழுதினர். அதில் 19,352 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது, தன்னுடைய குறிக்கோளை எந்தவித தடங்கல்களும் இல்லாமல் நவோதயா பள்ளிகள் செயல்படுத்துகின்றன என்ற முடிவுக்கு நாம் கண்டிப்பாக வரலாம். மத்திய அரசின் முழு ஆதரவுடன் இப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

27 மார்ச் 2023 அன்று நடந்த லோக்சபா அமர்வில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய கல்வித்துறை நாட்டில் 1249 கேந்திர வித்யாலயாக்களும், 649 நவோதயா வித்யாலிகளும் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.


இதே தகவல்களின்படி, தமிழ்நாட்டில் 45 கேந்திர வித்யாலயாக்கள் உள்ளன. ஆனால் ஒரு நவோதயா வித்யாலயா பள்ளி கூட இல்லை. தங்கள் மாநிலங்களுக்கு நவோதையா பள்ளிகள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து ஏற்பாடு செய்வது மாநில அரசின் கடமையாகும். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுபோக, செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயாக்களின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டு வரை 598 ஆக இருந்தது. பிரதமர் மோடி பதவிக்கு வந்த பிறகு மார்ச் 2021 வரை அதன் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.

தங்களால் மட்டுமே தமிழக அரசின் கல்வித்துறை சிறப்பாக விளங்குவதாக தி.மு.க தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், நீட் தேர்வுக்கு முன்னதாக கூட மருத்துவ பள்ளி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களால் பெருமளவில் இடம்பெற முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி பெற இயலவில்லை. நீட் தேர்வு குறித்து வெளியிடப்பட்ட AK ராஜன் கமிட்டி அறிக்கையில் 2010 முதல் 2014 வரை எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் வகுப்புகளில் இடம் பெற்றனர் என்பதை குறித்து எந்த தகவலையும் வழங்க தி.மு.க அரசு விரும்பவில்லை.


ஒரு தனிப்பட்ட நபரால் பதிவிடப்பட்ட RTIக்கு தமிழக அரசு அளித்த பதிலில் 1967 முதல் 2009 வரை எத்தனை அரசு பள்ளி மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்புகளில் இடம் பெற்றனர் என்பது குறித்த எந்த பதிவேடும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்தனர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு விடுத்துள்ள அறிக்கையில், நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் கட்டுமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவர்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் வழிகாட்டி போல விளங்கும் இத்தகைய பள்ளிகளை மத்திய அரசு உருவாக்க, பச்சைக்கொடி காட்டுவதில் மாநில அரசுக்கு என்ன தயக்கம்? இம்மாணவர்கள் நம் நாட்டின் குடிமக்கள் இல்லையா? கிராமப்புற சமூகத்தினருக்கு தி.மு.க இத்தகைய பாரபட்சத்தினைக் காட்டி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News