எதை மறைக்க அவிநாசியப்பர் கோவில் சிதைக்கப்பட்டது? பின்னணி இதுவா?
By : Mohan Raj
கொங்கு நாட்டு தளங்களில் ஒன்றான கோவில் அவிநாசி அவிநாசியப்பர் கோவில், இந்த தளம் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மேலும் இந்த தளத்தின் சிறப்பாக முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதாகம் பாடி மீட்டார் என்பது, அதுமட்டுமல்லாமல் இந்த கோவிலில் உள்ள தேர் தெனிந்தியாவில் மிகப்பெரிய தேர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த தளத்தின் தலவிருட்சம் பாதிரி மரம் பிரம்மேர்ச்ச காலங்களில் மட்டுமே பூக்குமாம் மற்ற காலங்களில் பூக்காது என்பது அதிசயமாக கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவில்களில் தினதோறும் நுற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதுவும் விழா காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வழிபடுவது வழக்கமாக உள்ளது. இவ்வளவு சிறப்புகளையும் கொண்டிருக்கின்ற அவினாசி கோவிலில் கொடும் பாதக செயல் ஒன்று அரங்கேறியுள்ளது.
அதாவது எப்போதும் போல் அதிகாலையில் அர்ச்சகர் கோவிலை திறந்து உள்ளே வரும்போது கோவிலில் உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்திருப்பதை பார்த்து பதறி உள்ளார், தெற்கு உள்பிரகாரவளாகத்தில் 63 நாயன்மார்கள் உள்ள கோபுர கலசம் உடைக்கப்பட்டிருந்தது. சிலைகள் மீது அணிவித்து இருந்தால் துணிகள் மற்றும் அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்களும் துணிகளும் களைந்து இருந்திருக்கிறது. இதைக் கண்ட அர்ச்சகர் விரைந்து கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணைக்கு பிறகு முருகன் சன்னதியில் வெண்கலத்தில் செய்யப்பட்டிருந்த வேலுடன் சேவல் கொடி உள்ள இரண்டு வேல்கள் மற்றும் மற்ற பொருட்களும் காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது.
பிறகு அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது, கோவிலின் பெரிய கோபுரம் பின் பகுதியிலேயே ஒரு நபர் ஒளிந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம், வெள்ளைமடை பகுதியைச் சேர்ந்த சரவண பாரதி என்பவர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்குள் உள்ள பொருட்களை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அன்று முழுவதுமே கோவிலுக்குள் பக்தர்கள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மிகவும் கவலையுடன் இருந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு எதிர்ப்புகள் தற்போது கிளம்பி வருகிறது. சமீப காலமாக தமிழகத்தில் கோவில்கள் தாக்கப்படுவது அதிகமாகி வருவதாகவும் ஆங்காங்கே கருத்துகள் நிலவி வந்த நிலையில் அவினாசி கோவில் தாக்கப்பட்ட சம்பவமும் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இந்த கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தை குறித்து தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அதன்படி அண்ணாமலை தனது டிவிட்டர் பதிவில் "நேற்று நள்ளிரவு, திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.திமுக ஆட்சிக்கு வந்தபின், கோவில்கள் தாக்கப்படுவதும், மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. ஆனால், உண்மையான குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படுவதாகத் தெரியவில்லை. கைது செய்யப்படுபவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி குற்றத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியே தொடர்வதாகத் தெரிகிறது. கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு, அமைச்சர் எதற்கு? உடனடியாக, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போல கோவில்கள் தாக்கப்படுவது தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கி'றேன்" என பதிவிட்டு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் கள்ளச்சாராய சாவு, அமைச்சர்களின் ஆடியோ விவகாரம் இதனால் திமுக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு, சட்ட ஒழுங்கு சீர்கேடு என இவை அனைத்தையும் மறைக்கத்தான் இந்த கோவில் சிலை உடைப்பு விவகாரமா என்று சந்தேகமும் எழுந்து உள்ளதாக வலதுசாரி சிந்தனையாளர்களான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போன்றோர் தெரிவித்துள்ளனர்.