Kathir News
Begin typing your search above and press return to search.

பாட்டிலுக்கு பத்து ரூபாய் விவகாரத்தால் அமைச்சர் செந்தில்பாலாஜி க்கு ஏற்பட்ட கலக்கம்

பாட்டிலுக்கு பத்து ரூபாய் விவகாரத்தால் அமைச்சர்  செந்தில்பாலாஜி க்கு ஏற்பட்ட கலக்கம்

Mohan RajBy : Mohan Raj

  |  26 May 2023 11:22 AM GMT

சமூக வலைதளத்தில் விழுந்த அடியால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக எடுத்த முடிவு.

மதுவிலக்கு ஆயத்துறை தீர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடந்துகொண்ட விதம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் பெரும்பாலான மதுபான கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்கப்படுகிறது ஏன் இப்படி அதிகம் வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்டால் கரூர் கம்பெனிக்கு செல்கிறது என்று கூறுகிறார்கள் இது பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா அல்லது இப்பொழுது கூறப்படும் புகார் பற்றி ஏதேனும் நடவடிக்கை எடுக்க உள்ளீர்களா என்று அவர் கேட்டுள்ளார். அதற்கு கோபத்துடனே எந்த கடையில் வாங்குகிறார்கள் என்னிடம் அந்த கடையை காட்டுங்க நான் வரேன் என்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களிடம் கோபமடைந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவ பல்வேறு தரப்பிடமிருந்தும் பத்து ரூபாய்க்கு மதுபானத்தை வாங்கிய மது பிரியர்கள் தனது வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். ஒரு வீடியோவில் எதற்காக பத்து ரூபாய் அதிகமாக வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு எல்லாம் மேலிடத்திற்கு தான் செய்கிறது என்று கூறியுள்ளார் டாஸ்மாக்கில் வேலை பார்த்த ஊழியர். இந்த வீடியோவை போன்று பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருந்தது. மேலும் பத்து ரூபாய் பாலாஜி என்று ஹாஸ்டாக்கும் ட்ரெண்ட் ஆகி வந்து கொண்டிருந்தது.அதோடு டாஸ்மார்க் சென்று மதுபானங்களை வாங்கும் மது பிரியர்கள் அநேகம் பேர் பத்து ரூபாய்க்கு கூடுதலாக மதுபானம் வாங்குவதை வீடியோவாக எடுத்து தனது சமூக வலையதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைதளத்தில் கடந்த வாரம் முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபானத்திற்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குகிறார் எனவும் டாஸ்மார்க்கில் இப்படி பத்து ரூபாய் அதிகமாக வாங்குவதற்கு அமைச்சரே பொறுப்பு எனவும் தகவல்கள் வலம் வந்தன.

இதனை தொடர்ந்து தற்போது டாஸ்மார்க் நிர்வாகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மதுக்களை விற்பனை செய்து வருகிற நிலையில், அரசு நிர்ணயித்த விலையை விட அதிகமான விலைக்கு விற்கப்படுவது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதேபோன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுக்கள் விற்கப்பட்டாலும் மது விற்பனையில் முறைகேடு ஏதேனும் நடைபெற்றாலும் மது கடை ஊழியர்கள் மட்டுமல்லாமல் டாஸ்மார்க் அதிகாரிகளும் அதில் தண்டிக்கப்படுவார்கள் மேலும் விதிகளை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

அதேபோன்று மது கடை மற்றும் டாஸ்மாக் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏதும் உறுதி செய்யப்பட்டால் அந்த புகாரில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்களை இடமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியத்தை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் தன் மீது ஏற்பட்ட கெட்ட பெயராலும் திமுக அரசிற்கு பின்னடைவு ஏற்படும், மேலும் இதே நிலை நீடித்தால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தன் பெயர் நிச்சயம் இடம்பெறும், பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை போன்று தானும் பதவியை இழந்து நிற்க நேரிடும் என்று யோசித்து குழம்பிப்போன அமைச்சர் செந்தில் பாலாஜி திடீரென இந்த முடிவை எடுத்து டாஸ்மார்க் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News