Kathir News
Begin typing your search above and press return to search.

இனி இந்தியா இந்து நாடு - செம்மையா ஒர்கவுட்டான அமித்ஷா, மோடியின் மாஸ்டர் ப்ளான்

இனி இந்தியா இந்து நாடு - செம்மையா ஒர்கவுட்டான அமித்ஷா, மோடியின் மாஸ்டர் ப்ளான்

Mohan RajBy : Mohan Raj

  |  29 May 2023 2:25 PM GMT

தமிழனாக பெருமை கொள்ளும் தருணம்.. பாராளுமன்றத்தில் ஜொலிக்கப் போகும் செங்கோல்..இந்து நாடான இந்தியா!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்திய வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இது அனைவராலும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டு கட்டங்களாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நிகழ்வுகள் நடைபெறும் என்று ஏற்கனவே மக்கள் செயலகம் சார்பில் செய்து ஒன்று வெளியிடப்பட்டது, அதன்படி திறப்பு விழாவின் முதல் பகுதியாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு அருகே மத சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது,. இதில் நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட 40 மத குருக்கள் பங்கேற்றனர், பிரதமர் மோடி ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்களை புதிய நாடாளுமன்ற பூஜைக்கு அழைப்பு விடுத்து அவர்களிடம் பிரதமர் மோடி ஆசி வாங்கி, பூஜிக்கப்பட்ட செங்கோலுக்கு சர்வ சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிர்வாதம் செய்தார்.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் இடதுசாரிகள் செங்கோல் விவகாரத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழர்களின் முக்கிய பாரம்பரிய அம்சமாக விளங்கும் செங்கோலை வைத்து புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை செய்வது, எல்லாம் வெளி வேஷம். அதன் காரணமாக நாங்கள் பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என்று பல்வேறு கருத்துக்களை சர்ச்சைகளையும் கூறி வருகிறார்கள். ஆனால் இது ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம். குறிப்பாக தமிழர்களுக்கு முக்கியத்துவம் தரும் அழகான தருணத்தை நாம் கொண்டாட வேண்டும். என்னதான் ஒரு பக்கம் இடதுசாரிகள் செங்கோல் பற்றியும், பிரதமர் பற்றியும் தவறான தகவல்களை பரப்பிக் கொண்டு வந்தாலும், பலரும் பிரதமர் நரேந்திர மோடியின் இந்த ஒரு செயலை பாராட்டி வருகிறார்கள். மேலும் அவருக்கு இந்தியா முழுவதும் வாழ்த்து செய்திகளும் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இளையராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தமிழகத்தின் பாரம்பரியத்தை பிரதமர் மோடி நிலைநாட்டியதாகவும் அதற்காகத்தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

அதில் இசைஞானி இளையராஜா மேலும் கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி நாளை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்துவைக்கிறார். குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தை கட்டிமுடிக்க துணைபுரிந்த பிரதமர் மோடி, மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில், இடைநிலைக் கொள்கைகள் மற்றும் முடிவெடுப்பதற்கான இடமாக இந்த புதிய கட்டிடம் மாற நான் மனதாரப் பிரார்த்திக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். மதிப்பிற்குரிய செங்கோலை கொண்ட அரச குடும்பத்தினர் அவர்களின் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை நீதி, ஒழுங்கு, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜா மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் தன்னுடைய ட்விட்டரில் பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு தன்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார். இது பற்றி அவருடைய ட்விட்டர் பதிவில் பதிவிடுகையில், "இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல்.

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி" என்று தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக தனது ட்விட்டர் பதிவில் தமிழன்டா என ஹாஷ்டகுடன் பதிவிட்டார்.

ஏற்கனவே பாஜக இந்தியாவை இந்து நாடு என அறிவிக்கப்போகிறது என இடதுசாரிகள் கதறி நிலையில் இப்படி இந்து முறைப்படி நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவை பாஜக அரசு நிகழ்த்திக்காட்டியுள்ளது விரைவில் இந்து நாடக அறிவிக்க முன்னோட்டமான நிகழ்வாக பார்க்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News