விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலையை கொடுக்கும் அமுல்.. ஐயோ போச்சுடா, என்ன ஆவின் நிறுவனம் எடுத்த திடீர் முடிவு!
விவசாயிகளின் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து ஆவின் நிறுவனம் முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.
By : Bharathi Latha
குஜராத் கோஆப்ரேட்டிவ் மில்க் மார்கெட்டிங் பெடரேஷன் (GCMMF) என்பது நம் நாட்டின் மிகப் பெரிய பால் கூட்டுறவு அமைப்பு. இந்தக் கூட்டுறவு அமைப்பு இந்தியாவில் 'அமுல்' என்கிற பிராண்ட் பெயரில் செயல்பட்டு வருகிறது. குஜராத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் விற்பனை நிறுவனமான இது, தமிழ்நாட்டில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தான் மிகப்பெரிய பால் கூட்டுறவு அமைப்பாக இதுவரை இருந்து வந்திருக்கிறது.
ஆனால் தொடர்ச்சியாக பல காலங்களாக தமிழக விவசாயிகளிடம் குறைந்த கொள்முதல் விலையில் பால் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு விவசாயிகள் கொள்முதல் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தி தர வேண்டும், இது தொடர்பாக தமிழக அரசு உடனடி நடவடிக்கை இட வேண்டும் என்றும் வார கணக்கில் போராட்டங்களை செய்து பால்களை தரையில் கொட்டிய சம்பவம் நீங்கள் அறிந்ததே!
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமுலின் வருகை அமைந்திருந்தது. தமிழக விவசாயிகளிடம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையாக ஒரு லிட்டருக்கு ரூபாய் ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே விலை வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை விலை வழங்குகிறது. எனவே ஆவின் தரும் வெளியே காட்டிலும் அமுல் நிறுவனம் விவசாயிகளுக்கு தரும் கொள்முதல் விலை அதிகமாக இருக்கிறது.
விவசாயிகள் இதனால் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகள் பலவும் ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சமீபத்தில் கூட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல் படுவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியிருந்தார். ஆவின் நிறுவனம் நன்றாக செயல்படாததன் காரணமாகவே விவசாயிகள் அமுல் நிறுவனத்திடம் பாலை விற்க முன்வந்து இருக்கிறார்கள். இதற்கும் மத்திய உள்துறை அமைச்சரிடம் முதல்வர் சந்தித்து மனு அளித்தது ஏன்? என்பது தற்போது வரை தெரியவில்லை.
எங்கு அமல் நிறுவனம் தமிழகத்தில் நுழைந்து விட்டால் ஆவின் மூலம் தகவல் கிடைக்க வருமான முற்றிலும் பறிபோக்கை விடும் என்ற ஒரு பயத்தில், தற்போது தமிழக அரசு முக்கிய முடிவுகளை எடுத்து இருக்கிறது. இதன் காரணமாக ஆவின் நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்த இருப்பதாக தற்பொழுது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
ஆனால் இதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இதுகுறித்து தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது, அமுல் வந்தாலும், ஆவினுக்கு பாதிப்பு ஏற்படாது, ஆவின் சமாளிக்கும் என்று கூறியிருந்தார். இதனிடையே, தமிழகத்தில் திடீரென பால் தட்டுப்பாடு விவகாரம் எதிரொலித்தது.
இதுவரை போட்டிக்கு ஆள் இல்லை என்பதன் ஒரே காரணம் காரணமாக பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வந்த ஆவின் நிறுவனம், அமுல் நிறுவனத்தின் வருகையை தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கை படி தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கு தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.இப்படி தனது இஷ்டத்திற்கு ஆடிய ஆவின் நிறுவனத்தை ஒற்றை அறிவிப்பால் அமுல் நிறுவனம் தனது ஒற்றை அறிவிப்பால் ஒழுங்காக வேலை செய்ய வைத்துவிட்டது என எதிர்க்கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.