Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரு ரூபாய்க்கு கூட கையேந்தும் நிலை - ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த செந்தில்பாலாஜி

ஒரு ரூபாய்க்கு கூட கையேந்தும் நிலை - ஒரே இரவில் நடுத்தெருவுக்கு வந்த செந்தில்பாலாஜி

Mohan RajBy : Mohan Raj

  |  15 Jun 2023 5:40 AM GMT

ஊரில் அரண்மனை கட்ட ஆசைப்பட்டு ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கைக்கும் முடிவுகட்டிக்கொண்ட செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது தற்போது கை வைத்திருப்பதால் பலவிதமான அரசியல் மாற்றங்கள் அதுவும் குறிப்பாக செந்தில்வ பாலாஜி என் அரசியல் வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்பது போன்ற பல தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக தற்பொழுது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது கை வைத்திருப்பதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் உண்டு என்பதனால் மட்டுமல்ல அமலாக்கத்துறை ஏற்கனவே செந்தில் பாலாஜியின் வழக்கில் தலையிட முயன்று நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு அமலாக்கத்துறை வரக்கூடாது என கேட்டுக்கொண்டது.

அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட தடையை சட்டப்படி உடைத்து அமலாக்கத்துறை தற்பொழுது செந்தில் பாலாஜியின் வழக்கில் நுழைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆளும் கட்சியின் அமைச்சராக தற்போது இருக்கும் செந்தில் பாலாஜி கரூரில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டி வருகிறார் எனவும் கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் அளவிற்கு அரண்மனை போன்று அந்த வீட்டை கட்டி வருகிறார் எனவும் தகவல்கள் வெளிவந்தன. இது மட்டுமல்லாமல் தற்பொழுது வருமானவரி துறையினர் சோதனை நடந்து முடிந்தது மட்டுமின்றி தற்பொழுது அமலாக்க துறையும் இறங்கி தற்போது தனது காவலில் செந்தில்பாலாஜியை எடுத்திருப்பதால் சொத்துக்கள் மற்றும் வங்கி விவரங்கள் ஆகிய அனைத்தும் முடக்கப்படும் எனவும் தெரிகிறது.

இதுமட்டுமல்லாமல் அவர் இனி தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு ரூபாய் கூட வெளியில் எடுக்க முடியாது எனவும் மேலும் புதிதாக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவிற்கு அமலாக்கத்துறை அனைத்தையும் முடக்கிவிடும் என்றும் தெரிகிறது.

இதுகுறித்து பேராசிரியர் ராம சீனிவாசன் கூறியதாவது 'செந்தில் பாலாஜி வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திவரும் சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி என பா.ஜ.க-வும் ஒப்புக்கொள்ளும். தி.மு.க-வுக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா... கரூரில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, ரௌடிகளை வைத்து அதிகாரிகளை மிரட்டினார்கள். அடித்தார்கள். இப்போது, தைரியம் இருந்தால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்களை கைவைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் இருப்பதால்தான் அமலாக்கத்துறை தற்போது சோதனையிட வந்திருக்கிறது. ஆனால், அதுபற்றி எங்களுக்குத் தெரியாது. இனிமேல்தான் அது வழக்கு மூலம் வெளியே தெரியும். அமலாக்கத்துறை சோதனை நடந்தால், அனைத்துச் சொத்துகளும், வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும். இனி, செந்தில் பாலாஜி சொத்துகளை விற்கவோ வாங்கவோ முடியாது. அதை அமலாக்கத்துறை விரைவில் மேற்கொள்ளும் என்பதை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மேலும் செந்தில்பாலாஜி எப்படியும் வெளியில் வரவேண்டும் என நீதிமன்றத்தில் தொடுத்த ஜாமீனும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் அவரது சிகிச்சையை அமலாக்கத்துறையினர் ஏற்று நடத்துவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் செந்தில்பாலாஜி உடலளவில் ஒத்துழைப்பு தர மறுத்து முரண்டுபிடிப்பதால் வழக்கின் போக்கு மற்றும் அமலாக்கத்துறையின் பிடி இன்னும் இறுகும் எனவும் தெரிகிறது. இதுமட்டுமல்லாமல் செந்தில்பாலாஜி வசமிருந்து மின்துறை மற்றும் டாஸ்மாக் போன்ற துறைகளை பிடுங்க முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த தலைவர்கள் அறிவுரைப்படி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுமட்டுமில்லாமல் செந்தில்பாலாஜி நெருங்கிய அனைத்து இடங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இப்படி ஐந்து கட்சி மாறி பந்தாவாக அரசியல்வாதியாக வலம் வந்த செந்தில் பாலாஜி தற்பொழுது கரூரில் அரண்மனை போன்று ஒரு வீடு கட்ட ஆசைப்பட்டு இப்படி அரசியல் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பறிகொடுத்த நிற்பது தமிழக அரசியல் பேசு பொருளாக மாறி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News