Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லியில் உட்கார்ந்தபடியே அடித்த பிரதமர் மோடி.. கதறும் திமுக கூட்டணி கட்சிகள்.....!

டெல்லியில் உட்கார்ந்தபடியே அடித்த பிரதமர் மோடி.. கதறும் திமுக கூட்டணி கட்சிகள்.....!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Jun 2023 5:22 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி, ஜூன் 27 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள் மற்றும் போபாலில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகளுடன், பூத் பணியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த ஒரு நிகழ்ச்சியில் தான் பிரதமர் மோடி அவர்கள் எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.


மேலும் இது பற்றி அவர் கூறும் பொழுது, 'பொது சிவில் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சியினர் விளையாடுகின்றனர். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும். எந்த மதம், சமூகத்தை சேர்ந்த மக்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது.

நாட்டில் வாக்கு வங்கி அரசியல் செய்பவர்களால் பாஷ்மாண்டா முஸ்லிம் மக்களின் வாழ்க்கை கடினமாதாக மாறி இருக்கிறது. அவர்கள் சமமாக நடத்தப்படாத நிலை இன்னும் உள்ளது. அவர்கள் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்களாளே சுரண்டப்படுகின்றனர்' என்றார். மேலும் பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்துவது என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாகும். அது நிச்சயம் பாஜக நிறைவேற்றியே தீரும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


அதுமட்டுமில்லாத அடுத்ததாக அவர் முன் வைத்தது வாரிசு அரசியலைப் பற்றி தான். அவர் எதிர்க்கட்சிகள் நடத்தும் வாரிசு அரசியலை ஒரு பிடி பிடித்தார். அத்துடன் குறிப்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நடந்த ஊழல்களையும் பட்டியல் போட்டார். திமுக தலைவர்களின் மலைக்க வைக்கும் சொத்துகள் விவரம் குறித்தும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். குறிப்பாக கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது மத்தியில் 1.86 லட்சம் கோடி அளவிற்கு நிலக்கரி ஊழல், 1.76 கோடிக்கு 2G அலைக்கற்றை ஊழல், 70 ஆயிரம் கோடிக்கு காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல் என்று பட்டியலிட்டார்.

அடுத்ததாக தமிழகத்தில் திமுக தலைவர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது என்றும், இப்படி பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கும், ஒட்டுமொத்த ஊழல்களையும் மொத்தமாக பார்த்தால் 20 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று குறிப்பிட்ட இருக்கிறார்.


பிரதமரின் இந்த அனல் பறக்கும் பேச்சின் தன்மை காரணமாக திமுக தலைமை கலக்கத்தில் இருக்கிறது. இதன் காரணமாக இதற்கு பதில் தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது பதில் ஒன்றை அளித்து இருக்கிறார். திமுக நிர்வாகி கும்மிடிப்பூண்டி வேணு இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், "பிரதமர் மோடி 2 நாட்களுக்கு முன்பு ஒரு உரையாற்றி உள்ளார். குடும்ப அரசியலை திமுக நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். உண்மை தான். திமுக நடத்துவது குடும்ப அரசியல் தான். ஆகவே இது உள்ளபடியே குடும்ப அரசியல் தான். அதுமட்டுமல்லாமல் அவரும் மேலும் பேசும் பொழுது, ஆளும் கட்சியாக இருந்தாலும், நல்லதை செய்ய கூட இன்றைய காலத்தில் பயப்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இப்படி பல்வேறு முறை தமிழகத்தில் குடும்ப அரசியல்.தான் நடைபெறுகிறது என்ற கூறினாலும் அதனை ஏற்காத திமுக தற்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட ஒரு கூட்டத்தின் வெளிப்பாடாக தங்கள் நடத்துவது குடும்ப அரசியல் தான் என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக திமுக தலைமை பேசியிருப்பது பயத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பொழுது தான் திமுகவிற்கு பதட்டம் ஏற்பட்டு இருக்கிறது, இது போக போக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News