Kathir News
Begin typing your search above and press return to search.

சர்வதேச அரங்கில் நம் புதிய இந்தியா - ஜஸ்டின் ஆண்டனி சர்வேதேச மீனவர் வளர்சி அறக்கட்டளை தலைவர்!

சர்வதேச அரங்கில் நம் புதிய இந்தியா - ஜஸ்டின் ஆண்டனி சர்வேதேச மீனவர் வளர்சி அறக்கட்டளை தலைவர்!

Mohan RajBy : Mohan Raj

  |  1 July 2023 6:27 AM GMT

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை பற்றி சர்வதேச மீனவர் வளர்ச்சி கட்டளையின் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி சில விஷயங்களை கூறியுள்ளார். அது பற்றி பார்க்கலாம்

அமெரிக்க பயணத்தின்போது நம் பிரதமருக்கு கிடைத்த மரியாதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதது. இது பிரதமருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த கவுரவமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச நிறுவனங்களின் பலதரப்பட்ட முதலீடுகள், உலக நாடுகளில் எத்தனையோ பிரதமர்களிருக்க "நான் பிரதமர் மோடியின் ரசிகன்" என்ற உலக பணக்காரர் எலான் மஸ்க், ஆட்டோகிராப் மற்றும் செல்பி எடுப்பதற்காக வரிசையில் நின்ற அமெரிக்க எம்.பி.-க்கள், சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பயங்கரவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நம் பிரதமர் சூளுரைத்தது ஆகியவற்றை பார்க்கும்போது இந்தியா உலக அரங்கில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்கிறது என்பதும், இப்பாரினில் தலைமை பீடத்தை அலங்கரிக்கப் போகிறது என்பதும் தெள்ளத்தெளிவாக புரிகிறது.

எதிரி நாட்டாரின் பாதங்கள் உன் மீது பட்டுவிடாமலும், அவர்தம் துப்பாக்கி குண்டுகள் உன்னை சுட்டுவிடாமலும், இயற்கையின் சீற்றத்தாலோ அல்லது செயற்கையின் மாற்றத்தாலோ நீ கெட்டுவிடாமலும், மண் வழியும், விண் வழியும், கடல் வழியும் உன்னை காப்போமென சூளுரைத்து

கண்காணா உயரங்களிலும் தனிமை சிகரங்களிலும், பொழியும் மழையிலும், நடுங்கும் குளிரிலும், சுழன்றடிக்கும் சூறாவளிக்காற்றிலும்

தேசத்துக்காக உள்நாட்டிலே நெஞ்சுயர்த்தி நிற்கின்ற ராணுவம் ஒரு பக்கமென்றால், உலகையே நம் பாரத தேசத்தின் வெண்கொற்றக் கொடையின் கீழ் கொணர முயல்வதும், சர்வதேச உறவை மிகப்பெரிய உயரங்களுக்கு எடுத்துச்செல்லும் 140 கோடி மக்களை கொண்ட பாரத பிரதமரின் ஆளுமை மறுபக்கம்.

மோடியின் பயணத்தால் இந்திய-அமெரிக்க நட்புறவில் புதிய அத்தியாயம் தொடங்கப் பட்டுள்ளதென்ற அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் கூற்று இங்கே பெருமிதத்துடன் நினைவுகூரத்தக்கது.

இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் அங்கு வசிக்கும் மக்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் மிகுந்த ஆர்வத்தையும், உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் அமெரிக்கப் பயணம், உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவை வெகுவாகக் கொண்டாடுவதாக அமைந்துள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் பிரதமர் மோடிக்கு அமெரிக்கா மிக உயர்ந்த அந்தஸ்தை வழங்கியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த கவுரவமல்லவா. இதுவரை மூன்று தலைவர்களுக்கு மட்டுமே இந்த உயர்ந்த கவுரவத்தை வழங்கிய அமெரிக்கா தற்போது இந்திய பிரதமருக்கும் இந்த நன்மதிப்பை அளித்துள்ளது.

இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சரக்கு மற்றும் சேவைகளில் இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014 முதல், இந்த வர்த்தக சேவை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகத்திற்கு பங்களித்துள்ளது. இந்த பொருளாதார ஒத்துழைப்பின் மூலம் இந்தியா வளரும் நாடாக உருவெடுத்துள்ளது. 2014ல் இந்தியப் பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. இப்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியாவுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைப் பெறுவதற்கு இந்தியப் பிரதமர் ஒப்பந்தம் செய்யப் போவதாகத் தெரிகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, கலாச்சார தொடர்பு மற்றும் அங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்லெண்ணத்தை மீட்டெடுக்கவும் முயற்சிக்கிறார் என்பதும் தெளிவாகிறது. அதே நேரத்தில், வசுதைவ குடும்பத்தின் உணர்வில், இந்தியா உள்நாட்டு கோவிட்-19 நிலைமையை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், தடுப்பூசி திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் உண்மையான, உறுதியான இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர் பிரதமர் மோடி. இந்தியா 180 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது மற்றும் கோவிட் தொற்றுநோய் உலகைத் தாக்கியபோது உலகெங்கிலும் உள்ள 100 நாடுகளுக்கும் தாயுள்ளத்தோடு உதவியுள்ளது.

உலகம் கோவிட்-19-ல் பாதிக்கப்பட்ட போது, ​​பரஸ்பர மனிதாபிமானத்தை பிரதிபலிக்கும் வகையில், இந்த தொற்றுநோய் நெருக்கடியில் உலக சமூகத்திற்கு உதவ முன் வந்த இரு நாடுகளாக இந்தியாவும் அமெரிக்காவும் இருந்தன. இந்தியாவும் அமெரிக்காவும் நேர்மையான மற்றும் உண்மையான பங்காளிகள் என்பது இப்போது தெளிவாகிறது. இந்திய-அமெரிக்க உறவு நீடித்த ஒன்றாக மாறியுள்ளது மட்டுமல்லாது, நல்ல வேகத்தில் வளர்ந்துள்ளது. இந்திய பிரதமர் மோடி ஆழ்ந்த, உண்மையான மற்றும் நேர்மையான தலைமையாக உருவெடுத்துள்ளார் என உலக மக்கள் உணர்கின்றனர். இந்த அமெரிக்கப் பயணத்திற்குப் பிறகு, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பு உலகளாவிய மாற்றமாக மாறும் என்று தெரிகிறது. அமெரிக்கத் தலைமையால் இந்தியா ஒரு உண்மையான மற்றும் நேர்மையான பங்காளியாகப் பார்க்கப்படுகிறது மற்றும் உலக அரங்கில் சமநிலையைக் கொண்டுவருவதில் நம்பிக்கை உள்ளது.

பிரதமர் மோடியின் இந்த 4 நாள் அரசு முறை அமெரிக்கப் பயணம் நம் தேசத்துக்கு இந்த நூற்றாண்டில் ஒரு தனித்துவத்தை உருவாக்கியுள்ளதென்றால் அது மிகையாகாது.


இவ்வாறு சர்வதேச மீனவர் வளர்ச்சி கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆண்டனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News