Kathir News
Begin typing your search above and press return to search.

உத்தர பிரதேசத்தில் யோகி செய்த அசத்தல் காரியம்.. குவியும் பாராட்டுக்கள்..

உத்தர பிரதேசத்தில் யோகி செய்த அசத்தல் காரியம்.. குவியும் பாராட்டுக்கள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 July 2023 9:42 AM GMT

இப்படி ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வாய்க்கவில்லையே என்ற ஆதங்கத்தை எங்கு போய் சொல்வது என்ற அளவிற்கு சமூக வலைத்தளங்கள் தற்போது வேகமாக வலம் வரும் ஒரு நபராக தற்போது உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏன் இவரை இப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேட்டால், இவர் தற்போது அனைவருடைய பாராட்டுக்களையும் பெரும் அளவிற்கு செயல் ஒன்றை செய்து இருக்கிறார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள ரவுடிகளின் நிலத்தை அரசு கட்டுக்குள் கொண்டு வந்து அரசு அந்த நிலத்தில் தற்போது ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு தான் உத்திர பிரதேச முதல்வர் அவர்கள் மிகவும் பிரபலமடைந்து இருக்கிறார்.


உத்தர பிரதேச மாநிலத்தில் ரவுடியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் அத்தீக் அகமது. அத்தீக் என்பவர் மீதும் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது மீதும் உத்திரபிரதேச போலீஸ் நிலையத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. இருவரும் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

மேலும் இப்படி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை கொன்றதோடு மட்டுமல்லாமல், இவர்கள் மக்களிடம் ஏமாற்றி பறித்துக் கொண்ட இடங்களில் தற்பொழுது அரசு மக்களுக்கு உதவும் வகையில் வீடுகளை கட்டிக் கொடுத்து இருக்கிறது.இவர் மீதான வழக்குகளின் போது அவரிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த நிலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


இந்த இடங்களில் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாக இருந்து வரும் அனைவருக்கும் ஒரு சொந்த வீடு என்று திட்டம். குறிப்பாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் அரசு ஆக்கிரமிப்பு செய்த இடங்களில் தற்போது வீடுகள் கட்டப்பட்டு வந்தன. ஒவ்வொரு வீடும் 41 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அறைகள், ஒரு சமையலறை, ஒரு கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கட்டப்பட்ட 76 வீடுகளின் பயனாளிகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இப்படி அராஜகமாக மக்களிடம் இருந்து நிலங்களை பறித்துக் கொண்ட ரவுடிகளிடம் நிலத்தை மீட்டு அவற்றை மீண்டும் மக்களுக்கே வழங்கும் ஒரு அரசாக உத்தரபிரதேச அரசு விளங்குவதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டு குதிந்து வருகிறது..


இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற விழாவில், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏழைகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை வழங்கினார்.விழாவில், ஆதித்யநாத் பேசும் போது, "மாஃபியாக்களிடமிருந்த நிலங்களை அரசு பறிமுதல் செய்து அதே ஏழை மக்களுக்கு வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறது. இது உத்தர பிரதேச அரசின் மகத்தான சாதனை’’ என்று தெரிவித்தார். அது மட்டுமல்லாது இந்த ஒரு மகத்தான சாதனைக்கு பிறகு உத்திரபிரதேச அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் ஏன் உலக அளவில் கூட இந்த ஒரு விஷயம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக சமீபத்தில் கூட, பிரான்சில் நடைபெறும் கலவரத்திற்கு தீர்வு காண யோகி ஆதித்யநாத்தை இங்கு அனுப்புங்கள் என்பது போன்று பிரான்ஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டு விட்டார் பதிவை செய்திருந்தார். அதற்கு "உலகில் எங்கெல்லாம் கலவரம், சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறதோ, அங்கு 'யோகி மாடலை' உலகம் தேடுகிறது'' என்று உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் ட்வீட் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாத மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு நிகழ்வாக உத்தரப்பிரதேச முதல்வரின் இந்த ஒரு செயல் அமைந்து இருப்பதாகவும் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News