Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே ஒரு கையெழுத்து... ஒட்டு மொத்தமாக அசத்திய மோடி அரசு...

ஒரே ஒரு கையெழுத்து... ஒட்டு மொத்தமாக அசத்திய மோடி அரசு...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 July 2023 4:17 AM GMT

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக வரிகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி (GST) எனும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. இந்த ஜிஎஸ்டி வரிகள் விதிப்பு, வரிகள் குறைப்பு பற்றி ஆலோசிக்க மாதந்தோறும் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் நிதி அமைச்சர் அல்லது அவரது பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இதில் வரியில் மாற்றம் செய்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படும். இந்த முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு, மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்படும்.


அந்த வகையில் நேற்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம் நடைபெற்றது. இந்த ஐம்பதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அனைத்து மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டு ஜிஎஸ்டி தொடர்பான கோரிக்கைகளையும் முன்வைத்தனர். முன்னதாக, ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம் மற்றும் கேசினோ நிறுவனங்களின் வருவாய்க்கு 28 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

அதன் பிறகு வந்த அறிவிப்பு தான் ஒட்டுமொத்தமாக பல தரப்புகளிலிருந்து பாராட்டுகளைப் பெற்று இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு தான் என்ன? என்று பார்க்கிறீர்களா, அது தான் உயிர்க்காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு என்ற அறிவிப்பு.


இது தொடர்பாக 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “புற்றுநோய் மற்றும் அரிய வகை நோய்க்கான மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் ஒப்புதல் தரப்பட்டது.

இந்த ஒரு அறிவிப்புதான் பல்வேறு தரப்புகளிலிருந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசிற்கு பாராட்டுகளை பெற்றுத் தந்து இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மருந்துகள், அரிதான நோய்களுக்கான மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி-க்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது நடுத்தர மக்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று இருக்கும் ஒரு அறிவிப்பாக இருக்கிறது.


ஒரு கையெழுத்தின் மூலம் ஒட்டுமொத்த பாராட்டுகளையும் பெற்ற ஒரு அறிவிப்பாக மிகவும் உள்ள அரிதான உயிர் காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது, பிரதமர் மோடி தலைமையிலான அரசிற்கு மற்றும் சிறப்பை சேர்த்து இருக்கிறது. இதற்கு மட்டும் தான் முழு விலக்கு அழிக்கப்பட்டு இருக்கிறது என்று கேட்டால் அது கிடையாது மற்றொன்றிற்கும் ஜிஎஸ்டியில் இருந்து வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.


செயற்கைக்கோள் ஏவும் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் GST வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் இல்லாது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக நிதி அமைச்சர் இது பற்றி கூறும் பொழுது, புற்றுநோய்க்கான விலை உயர்ந்த மருந்தின் மீதான வரி விலக்கு பரிந்துரைக்கு தமிழக அரசு தனது ஆதரவை தெரிவிக்கிறது என்றும், அரிய வகை நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்து இருப்பதற்கும் தமிழக அரசு ஆதரவை தெரிவிப்பதாக தங்கம் தென்னரசு 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமத்தில் குறிப்பிட்டார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News