உலக வங்கி தலைவரே இந்தியாவின் பெரிய ரசிகராம்... பிரதமர் மோடி அரசுக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம்..
By : Bharathi Latha
ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இந்தியா மிகவும் சிறப்பாக செய்து வருகிறது. இந்த ஒரு சமயத்தில் உலக நாடுகளின் மத்தியில் அங்கீகாரம் பெறும் ஒரு முயற்சியாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாது இந்தியாவின் பொருளாதாரத்தை கட்சிதமாக வழி நடத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு முக்கிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா தொற்றுநோய் மற்றும் உலகளாவிய பொருளாதார தடுமாற்றங்கள் போன்ற மோசமான நெருக்கடிகளின் போது இந்தியாவின் பணவீக்கத்தை நிர்வாகம் செய்தது மற்றும் இந்தியாவின் வங்கி கட்டமைப்பை திறமையாக கையாள்வதில் ரிசர்வ் வங்கியின் தலைவராக சக்திகாந்த தாஸ்-ன் பங்கீட்டை பாராட்டி Governor of the Year என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் லண்டனில் உள்ள சென்ட்ரல் பேங்கிங் இதழ் 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவர்னர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
இந்தியா தற்போது டிஜிட்டல் பேமண்ட்களில் உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக இருந்து வருகிறது. இதேவேளையில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் சிறப்பான முறையில் கட்டுப் படுத்தப்பட்டு உள்ளது. இன்னிலையில் தான் தற்பொழுது குஜராத் மாநிலம் காந்திநகரில் ஜி20 மாநாட்டின் போது உலக வங்கி தலைவர் அஜய் பங்காவை, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக நான் இந்தியாவின் மிகவும் தீவிர ரசிகன் என்று உலக வங்கி தலைவர் அஜய் பங்கா குறிப்பிட்டு இருக்கிறார்.
மூன்றாவது ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக குஜராத்தில் உள்ள காந்திநகரில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா இது பற்றி கூறும் பொழுது, இந்தியா நீண்ட காலமாக இருந்ததை விட இன்று பொருளாதார ரீதியாக அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறினார். நேரம் மற்றும் உள்கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளைப் பாராட்டினார். பிரதமர் மோடி அரசுக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் என்று இதைக் குறிப்பிடலாம்.
டிஜிட்டல் மயமாக்கல் மக்கள் சேவைகளை அணுகுவதை எளிதாக்கியுள்ளது. மேலும் அவர் நான் இந்தியாவின் "பெரிய ரசிகர்" என்று கூறினார். "உள்கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்காமல் நீங்கள் கடன் வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க முடியாது. கடந்த 15-20 ஆண்டுகளில் இந்தியா என்ன செய்துள்ளது, உள்கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல் ஆக்கி இருக்கிறது.
மேலும் இது மக்களுக்கு எளிதாக்குகிறது. ஆன்லைனில் சேவைகளை அணுக இது சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதால், தான் நான் அதன் பெரிய ரசிகன்" என்று அவர் கூறினார். அதுமட்டுமில்லாத சமீபத்தில் நடந்த கூட்டத்தின் போது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்களையும் ஆர்பிஐ வெளியிட்டு இருக்கிறது. RBI இந்திய வங்கிகளுக்கு ரூபே (Rupay) ப்ரீபெய்டு போரெக்ஸ் கார்டு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இந்த முயற்சி மூலம் ரூபே கார்டுகள் உலக நாடுகளில் பயன்பாட்டுக்கு செல்லும். இந்திய டிஜிட்டல் பேமெண்ட்-ன் முதுகெலும்பாக இருக்கும் Bharat Bill Payment System-ஐ மேலும் வலிமையாக்கவும், எளிதாக்கவும், கூடுதலாக பல தரப்பினர் சந்தைக்குள் வர BBPS தளத்தை ஸ்ட்ரீம்லைன் செய்யப்பட உள்ளதாக RBI கவர்னர் தெரிவித்து இருக்கிறார். G20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்ற பிறகு, உலக நாடுகளுக்கு முன் உதாரணமாக இந்தியா திகழ்ந்து வருகிறது.