Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக மீனவர்களின் உரிமைக்காக பேசிய மோடி.. இலங்கை அதிபர் உடனான சந்திப்பில் நடந்த வரலாற்று தருணம்..!

தமிழக மீனவர்களின் உரிமைக்காக பேசிய மோடி.. இலங்கை அதிபர் உடனான சந்திப்பில் நடந்த வரலாற்று தருணம்..!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 July 2023 2:54 AM GMT

இந்தியாவுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்தியா இலங்கை இடையே எரிசக்தி, யுபிஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கையெழுத்தாகின.


அப்போது, இருநாடுகள் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், மீனவர்கள் பிரச்னையில் இரு தரப்பும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதனை அடுத்து பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது, இந்தியா துணை நின்று உதவியதையும் நினைவுகூர்ந்தார். இறுதியாக பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் இந்தியா-இலங்கை இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பை பற்றி குறிப்பிடும் பொழுது, "இந்தியா வருகை தந்திருக்கும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சந்தித்தபோது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் குறித்து நமது பிரதமர் அவர்கள் வலியுறுத்தினார்.

மேலும், இலங்கையில் 13வது சட்டத் திருத்தத்தை, முழுவதுமாக அமல்படுத்தி, இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுமாறு இலங்கை அதிபரிடம் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தார். மேலும் இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், இலங்கையில் ₹75 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதையே, நமது மாண்புமிகு பிரதமர் முன்னுரிமையாகக் கொண்டுள்ளார்.


ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. 1800 ஆண்டு பழமையான சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது.

இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது.


நாகப்பட்டினம் காங்கேசன் துறை இடையேயான கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க, பாரதப் பிரதமர் மோடி அவர்கள் மற்றும் இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இது சாத்தியமாவதற்கு முழுமுதற் காரணமான மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News