Kathir News
Begin typing your search above and press return to search.

கேங் வார் என்ற பேச்சுக்கே இடமில்லை... பாஜக தலைமையில் முக்கியத்துவம் பெறும் உத்தரப் பிரதேசம்...

கேங் வார் என்ற பேச்சுக்கே இடமில்லை... பாஜக தலைமையில் முக்கியத்துவம் பெறும் உத்தரப் பிரதேசம்...

Bharathi LathaBy : Bharathi Latha

  |  25 July 2023 2:42 AM GMT

இப்படி ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வாய்க்கவில்லையே என்ற ஆதங்கத்தை எங்கு போய் சொல்வது என்ற அளவிற்கு சமூக வலைத்தளங்கள் தற்போது வேகமாக வலம் வரும் ஒரு நபராக தற்போது உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். ஏன் இவரை இப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேட்டால், இவர் தற்போது அனைவருடைய பாராட்டுக்களையும் பெரும் அளவிற்கு அப்படி ஒரு செயலை செய்து இருக்கிறார்.

பாஜக அரசு அமைவதற்கு முன்பு கலவரத்திற்கும், கேங் வார்ருக்கும் பெயர் பெற்ற மாநிலமாக இருந்து வந்த உத்தர பிரதேசத்தை தற்போது அமைதி மாநிலமாக மாற்றி இருக்கிறார் உத்தர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத். அதுமட்டுமல்லாத அவருடைய அதிரடி நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் ஆக்க ரவுடிசம் ஒழிக்கப்பட்டது.தவறு செய்தவர்களின் உடனடியாக தண்டிக்கும் அவருடைய சிறப்பு நடவடிக்கையில் இந்தியாவில் மட்டுமல்லாது உலக தரப்பிலும் அவருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தை பெற்று தந்தது என்று கூறலாம்.


உத்தரப் பிரதேசத்தில் தற்போது கேங் வார் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், பாஜக அரசு மாநிலத்தின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நேற்று உத்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கோரக்பூரில் ரூ.72 கோடி மதிப்பில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பின்பு மக்களுக்கு உரையாற்றினார்.


அவருடைய உரையின் போது இது பற்றி கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தில் கேங் வார் முற்றிலுமாக மறைந்துவிட்டது. பாஜக அரசு தற்போது மாநில வளர்ச்சியில் முழு கவனம் செலுத்தி வருவதால் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகிறது" என்றும் பெருமையாக கூறியுள்ளார்.


மேலும் தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் நலத்திட்டங்கள் அனைத்தும் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்த அரசின் திட்டங்களை பெறாதவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பாக பல்வேறு இளைஞர்கள் தங்களுடைய தொழிலாக ரவுடிசத்தை கொண்டு இருந்தார்கள்.

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடையாது. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களில் வேலைக்காக புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். அங்கு கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். பல்வேறு இளைஞர்கள் மாநிலத்தை விட்டு வெளியில் சென்று பல்வேறு இதர மாநிலங்களில் அவதிப்பட்டு வந்தார்கள்.

அங்கு அவர்களுக்கு சரியான உணவு, இருப்பிடம், சம்பளம் என்ற எதும் முறையாக இல்லாமல் தவித்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பு இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கில் பாஜக தலைமையிலான மோடி அரசாங்கம் தொடர்ந்து செயலாற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


தொழில் வளர்ச்சிக்கு இப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே சமூக வளர்ச்சிக்கும் இந்த பாஜக அரசு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. முன்பு இந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகள் மருத்துவ கல்லூரிகள் இல்லாமல் இருந்தது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையில் ஆன மத்திய அரசாங்கம் பதவியேற்று பிறகு மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை உருவாக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான அடிப்படை பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News