அவங்க நிலவுக்கே போய்ட்டாங்க...! ஆனா நாம இன்னும்..! - சந்திராயனை பார்த்து வயித்தெரிச்சலுடன் பாகிஸ்தான்.....!
By : Mohan Raj
சந்திரயான் வெற்றியால் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலை...!
வளர்ந்த நாடுகளே வாய் அடைத்துப் போய் இருக்கும் சாதனை ஒன்றை இந்தியா நிகழ்த்தியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா தற்போது தாங்கி நிற்கிறது அதாவது கடந்த மாதம் 14ஆம் தேதி பிஎஸ்எல்வி எல் வி எம் மூன்று ராக்கெட் மூலம் சந்திரயான் மூன்று விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
அதற்குப் பிறகு சந்திரயான் 3 குறித்த அப்டேட்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று சந்திரயான் மூன்று விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரை இயங்கியதோடு அதிலிருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளிவந்து நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய ஆரம்பித்துவிட்டது. இந்த வெற்றி இதுவரை உலகில் எந்த நாடும் அடைந்திடாத ஒரு வெற்றி அதுவும் யாரும் நினைத்து பார்க்க முடியாத குறைவான தொகை பட்ஜெட்டுடன் இந்தியா சாதித்துக் காட்டியுள்ளது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் தற்போது சாதகமானதாக மாறி இந்த வெற்றியை மார்த்தட்டி கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திராயன் மூன்று விண்கலம் தரை இறங்கிய தினத்தை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நினைவு பரிசுகளை வழங்கியதோடு இஸ்ரோவிற்கு சென்று அங்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி உள்ளார்.
இப்படி தொடர்ந்து விண்வெளி துறையில் இந்தியா சாதித்து வருவது அண்டை நாடான பாகிஸ்தானிற்கு ஏக கடுப்பை ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு காரியத்திலும் இந்தியா வெற்றியை சாதித்தாலும் அதில் பாகிஸ்தானும் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இறங்கும். ஆனால் இந்தியாவைப் போன்ற விண்வெளி துறையின் கட்டமைப்பு பாகிஸ்தானிடம் கிடையாது. இதே பாகிஸ்தான் தான் கடந்த முறை சந்திராயன் 2 திட்டம் ஜஸ்ட் மிஸ் ஆனதற்கு இந்தியாவை பயங்கரமாக ட்ரோல் செய்தது. இந்த நிலையில் தற்போது சந்திராயன் மூன்று திட்டத்தில் இந்தியா படு வேகமாக உயர்ந்து நிலவின் தென் பகுதியில் கால் வைத்துவிட்டது என்பதை பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் திணறி வருவதாகவும் வாய் அடைத்துப் போய் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனை ஒரு பாகிஸ்தான் நடிகையே தனது ட்விட்டர் பதிவு மூலமாக வெளிப்படுத்தி உள்ளார். அதாவது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகையான சேகர் ஷின்வாரி, சந்திராயன் மூன்று வெற்றிக்காக இந்திய விண்வெளி துறை ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன் இருநாட்டிற்கும் இடையே மோதல் மற்றும் போர் பற்றிய அபாயகாரம் இருப்பதை தாண்டி இந்த வாழ்த்துக்களை நான் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமான இடைவெளி அனைத்து விஷயங்களிலும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. நிலவில் பாகிஸ்தான் தனது காலை பதிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 முதல் 30 ஆண்டுகள் கூட ஆகும் மேலும் சொல்ல வேண்டுமென்றால் தற்போது இங்கு நிலவும் பிரச்சனைகளுக்கு நாமே காரணம்! தற்போது இந்திய அடைந்துள்ள ஒரு நிலையை நாம் எண்ணி பார்க்கும் பொழுது வெட்கப்பட்டு தலை குனிய வேண்டிய நேரம் இது, இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தான் நெருங்க வேண்டும் என்றால் அது மிகவும் சுலபமானதாக இருக்க முடியாது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என்று பதிவிட்டு இந்தியா அடைந்த வெற்றிக்கு வாழ்த்தையும் இந்த வெற்றிக்கு மாறாக பாகிஸ்தான் எந்த ஒரு வெற்றியையும் நிலை நாட்டுவதற்கு இன்னும் கிட்டத்தட்ட 30 வருடங்கள் மேலாகும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
இப்படி இந்தியா அடைந்த வெற்றிக்கு பாகிஸ்தானில் இருந்து ஏக பெருமூச்சுகள் இன்னும் அதிகமாகியுள்ளது.....!