இதை எதிர்பார்க்கவே இல்லையே...! எதிர்க்கட்சிகளின் கணக்குகளை உடைத்தெறியப்போகும் டெல்லி தகவல்...!
By : Mohan Raj
வெளிவந்த அந்த அறிவிப்பு...! அப்போ கன்ஃபார்ம் தானா...?
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் என்பது இந்திய நாட்டின் ஒரு முக்கிய தேர்தலாகவும் மத்தியில் ஆட்சி மாற்றங்கள் நிகழுமா அல்லது மூன்றாவது முறையும் என்டிஏ அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்க கூடிய தேர்தல்.
மத்தியில் பாஜகவின் தலைமையிலான ஆட்சி மறுபடியும் அமையக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாஜகவை வீழ்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதற்கான மூன்றாவது கூட்டத்தையும் மும்பையில் நடத்தி முடித்துள்ளனர்.
இருப்பினும் வழக்கமாக தேர்தலுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் பத்திரிகை நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் அனைத்துமே பாஜகவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சாதகமாக இருப்பது எதிர்க்கட்சி தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தேசிய அளவில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல் பாஜக தனது செல்வாக்கையும் மக்களின் ஆதரவையும் ஒவ்வொரு மாநிலங்கள் தோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுகவுடன் ஆன கூட்டணியில் பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் எப்பொழுது நடக்கும் என்ற சந்தேகங்களும் விரைவில் நடப்பதற்கான சாத்திய கூறுகள் அனைத்தும் வெளிப்படையாக உள்ளது.
தேர்தல் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னதாகவே நடத்தப்படலாம் என்பதை ஒரு கட்சியின் எம் பி யே கூறியது தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. மற்ற சில முக்கிய அமைச்சர்களும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க தேர்தலுக்கான வேலைகளை ஒவ்வொரு கட்சியினரும் படு விமர்சியாக செய்து வருகிறது. இருப்பினும் இன்னும் ஆறு மாத காலத்தில் தேர்தல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் மாதத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெற போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. அதாவது நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தினர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் பெரும்பாலும் சண்டை சச்சரவுகள் தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு சம்பவங்கள் அதோடு நம்பிக்கையில்லா தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்த பிறகு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இருப்பினும் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று இரு அவைகளின் கூட்ட தொடரரும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை மொத்தம் ஐந்து அமர்வுகளை அடங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரில் என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்பது பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் உள்ளது இருப்பினும் தேர்தல் விரைவாக நடத்தப்படலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் அதற்கான முடிவுகள் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விரைவில் அதுவும் குறிப்பாக ஜனவரி மாதத்தில் தேர்தல் வரலாம் என பல அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே திமுக தரப்பிலிருந்து நாடாளுமன்ற நிலை குழு தலைவர் டி ஆர் பாலு வேறு விரைவில் தேர்தல் வரலாம் தயாராக இருங்கள் என கூறியதும் முதல்வர் ஸ்டாலினும் பேசுகையில் தேர்தல் எதிர்பார்த்ததை விட முன்கூட்டிய வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என கூறியதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டுவது கண்டிப்பாக தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான அறிகுறிகள் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அப்படி தேர்தல் முன்கூட்டியே வரும்பட்சத்தில் அது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கண்டிப்பாக சாதகமாக இருக்காது எனவும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.