நீ செய்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்...! அடுத்த இலங்கை போல் சிதற காத்திருக்கும் பாகிஸ்தான்..!
By : Mohan Raj
இந்தியாவிற்கு எதிராக ஒரு காலத்தில் போர் புரிந்த ஒரு நாடு இன்று...!
இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து பாகிஸ்தானின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. 2023 ஜனவரி மாதத்தில் இலங்கை போலவே பாகிஸ்தானுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, கையிருப்பில் இருக்கும் அன்னிய செலவாணி குறைந்து கொண்டே செல்வதால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயரும் அத்தியாவசிய தேவை பொருட்களுக்கு தட்டுப்பாடுகளும் வேலையில்லா திண்டாட்டமும் சட்ட ஒழுங்கு சீர்கேடும் நடைபெறும் என்று செய்திகள் வெளியானது.
அதற்குப் பிறகு பாகிஸ்தானில் விற்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றின் விலைவாசியும் 23 சதவீதம் அதிகரித்து நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் விலையும் அதிகரித்தது. அதேபோன்று வேலையில்லாத திண்டாட்டமும் அதிகரித்தது, வேலையில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாமல் அரசு திண்டாட்டிய நிலைமையும் நிகழ்ந்தது! இப்படி நாட்டு மக்களின் உயிருக்காகவும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத அரசின் நிலைமையும் அரசியல் சிரதன்மையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சில தீவிரவாத அமைப்பினர் போட்டி அரசாங்கம் நடத்தப் போவதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது.
மேலும் ஒவ்வொரு நாளும் தொடங்கும் பொழுது தேவைப்படும் ஒரு முக்கிய பொருளாக இருக்கும் பாலின் விளையும் 210 ரூபாய்க்கு விற்பனையான கொடுமை பாகிஸ்தானில் நடந்தேறியது. இதற்கிடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வர முடியாமல் பாகிஸ்தான் மக்களின் நிலைமை மிகவும் பரிதாபமானது மற்றும் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 300ரை தாண்டி விற்பனையாளதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தையும் சமாளிக்க பெறப்பட்ட கடன்களும் அதிகரித்ததால் பாகிஸ்தான் தனது நிதி பிரச்சனையை சமாளிப்பதற்காக சர்வதேச நாணய நிதியிடம் கடன் கோரியது!
இப்படி இருக்கும் சூழ்நிலையில்தான் இந்தியா தனது சந்திராயன் மூன்று விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி நிலவின் தென் துருவத்தில் காலை பதித்தது இதன் வெற்றியை பல நாடுகள் கொண்டாடி வந்த சமயத்தில் பாகிஸ்தானில் இருந்து, இந்த வெற்றியை நாம் எப்பொழுது அடைவோம்! அடைவதற்கான சூழல் தற்போது உள்ள இந்தியாவைப் போன்று வளர்வதற்கு இன்னும் பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்ற ஏக்கங்கள் நிறைந்த பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியானதும் உலக நாடுகளின் பார்வைக்கு எட்டியது. இதனால் மக்கள் பாகிஸ்தான் அரசின் மீது கொந்தளிப்பில் இருந்து வருகின்றனர்,
ஒரு காலத்தில் இதே பாகிஸ்தானால் ஏற்படும் தாக்குதல்களால் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தனது நிம்மதி கலந்த சாதாரண வாழ்க்கையை மறந்து விட்டனர் ஆனால் அந்த நிலைமையை பிரதம நரேந்திர மோடி மாற்றியதோடு அரசின் முக்கிய கூட்டங்கள், ஏன் ஜி 20 மாநாடு கூட ஜம்மு காஷ்மீரில் எந்தவித பிரச்சனையும் இன்றி நடை பெற்றது. மேலும் குண்டுகள் இல்லாம் ஜம்மு காஷ்மீரின் அழகை சுற்றி பார்க்கலாம் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்ற பதிவுகளும் சமூக வலைதளங்களில் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது தீவிரவாத சிந்தனை, மற்ற நாட்டின் பகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலும் இந்தியாவுடன் மோதி வெல்ல போகிறோம் இந்தியாவின் எல்லை பகுதியை கைப்பற்றி விடுவோம் என்ற பல திட்டங்களை இந்தியாவிற்கு எதிராகவே சிந்தித்து வந்த பாகிஸ்தான் தனது மக்களை கவனிக்க தவறிவிட்டது என்ற குரல்கள் தற்போது ஆங்காங்கே எழுந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் இலங்கையைப் போலவே பாகிஸ்தானிலும் புரட்சிகள் வெடித்து, இலங்கையைப் போல் பாகிஸ்தானும் இந்தியாவிடம் கையேந்தி நிற்கும் நிலைமை ஏற்படும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.