Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக சொன்னதும்! வரலாற்றில் நடந்ததும்! உடன் கட்டை ஏறும் பழக்கத்திற்கு பின்னால் யார்? ஓர் அலசல்!

திமுக சொன்னதும்! வரலாற்றில் நடந்ததும்! உடன் கட்டை ஏறும் பழக்கத்திற்கு பின்னால் யார்? ஓர் அலசல்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Sep 2023 1:11 AM GMT

இந்து மதத்தில் தான் கணவன் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருக்கிறது. ஈவெ.ராமசாமி நாயக்கர் போன்றோர் தான் அதனை எல்லாம் ஒழித்தனர் என்பது போலவும் திமுகவினர் சொல்லிக்கொள்கின்றனர். ஆனால் இதற்கு பின்னால் நடந்த வரலாறே மூடி மறைக்கப்பட்டது யாருக்கு தெரியும்? அதனை தெரியவிடாமல் மறைத்து, தாங்கள் தான் முற்போக்கு சிந்தனை மூலம் மூட நம்பிக்கைகளை ஒழித்தோம் என திராவிட இயக்கங்கள் சொந்தம் கொண்டாடி வருகிறது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

உடன்கட்டை ஏறல்

"உடன்கட்டை ஏறல்" என்பது, ஒரு இந்து சமயச் சடங்கு ஆகும். கணவனை இழந்த மனைவி தன் கணவரின் சடலம் தீ மூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் தான் உடன்கட்டை ஏறுதல் என தவறாக கருத்தாக மக்களை எண்ணவைத்துவிட்டனர். அன்னியர்கள் , குறிப்பாக முகலாயர்கள், பெண்ணின் கணவர்களை கொன்று, பெண்களின், கற்பை சூரையாட முனையும் போது, அவள் தனது கற்பைக்காக்க , இந்த உடல் அன்னியர்களிக்கு போவதைவிட அக்கினிக்கு போவதே மேல் என அக்கினியில் விழுந்து உயிரைவிட்டனர். குறிப்பாக, சித்தூர் ராணி பத்மினி ஒரு உதாரணம். இதை அன்னியர்கள், குடும்ப கலாச்சார பெண்களை அழிக்கவும், இந்துமத்த்தில், மூடநம்பிக்கை இருப்பதுபோல் ஒரு மாய பிம்பத்தை ஏற்படுத்திவிட்டனர். இதை, இந்துக்களையும் நம்பவைத்து, மூடநம்பிக்கையாக சிதகயில் விழ கட்டாயப்படுத்தினர்.

இராஜாராம் மோகன்ராய் வந்தார் வென்றார்

பிராமணர்களுக்கு எதிராக திராவிட இயக்கங்கள் என்னென்னவோ சொல்லி, அவர்களை காயப்படுத்த பார்க்கின்றன. ஆனால் உடன் கட்டை ஏறுதல் என்பது மூட நம்பிக்கை. அதனை ஒழிக்க வேண்டும் என முதலில் களம் இறங்கியதே பிராமணர் இராஜாராம் மோகன்ராய் தான். 1815 இற்கும் 1818 இற்கம் இடைப்பட்ட காலத்தில் வங்காள மாநிலத்தில் உடன்கட்டை ஏறல் 378 இல் இருந்து 839 ஆக அதிகரித்தது. அப்போது உடன் கட்டை ஏறும் பழக்கத்தை இராஜாராம் மோகன்ராய் கடுமையாக எதிர்த்தார்.

இந்து மதம் இராஜாராம் மோகன்ராய் பார்வையில்

இராஜாராம் மோகன்ராய் வங்காளத்திலுள்ள வசதி படைத்த வைதிக பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரம்ம சமாஜத்தை நிறுவியவர். ஆங்கில நாகரிகத்தில் அதிக நாட்டம் கொண்டதால் பலமுறை இங்கிலாந்து சென்று திரும்பினார். அவர் தமது நாற்பதாவது வயதில் வேலையை விட்டு விலகினார்.

எஞ்சிய வாழ்நாளைச் சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் இந்து சமுதாயத்தில் இருந்த மூடநம்பிக்கைகளுக்கும் மற்றும் ஏனைய தீமைகளுக்கும் எதிராகக் குரல் எழுப்பினார். இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை.

மாறாக இந்து சமய அமைப்பில் அனைத்துச் சமயங்களின் அரிய கோட்பாடுகள் அமைந்திருந்தன. எல்லா மக்களும் சாதி, சமய பாகுபாடின்றி ஒன்றாக சேர்ந்து ஒரே இறைவனை வழிபட, இந்நிறுவனம் வழிவகுத்துக் கொடுத்தது. 1819 இல் வேதாந்த சாத்திரங்களின் சாரத்தை ஆங்கிலத்திலும், வங்காள மொழியிலும் வெளியிட்டார். பின்பு நான்கு உபநிடதங்களை மொழிபெயர்த்தார்.

சாதியை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை

வேதங்கள் மற்றும் ஐந்து முக்கிய உபநிடதங்களை வங்காள மொழிக்கு மொழிபெயர்த்திருந்த அவர் அவற்றைக்கொண்டு சதி என்பதை உண்மையான இந்து மதம் ஆதரிக்கவில்லை என்று தீவிரமாக வாதாடி சதி தேவையில்லை என்று முழங்கினார். வில்லியம் பெண்டிங்க் காலத்தில் சதிக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது ராஜா ராம்மோகன் ராயின் உழைப்பாலே நிகழ்ந்தது என்பதே உண்மை. ஆனால் இந்து மதத்தில் பிழை உள்ளது, வேதங்கள் வர்ணாசிரமத்தை சொல்கின்றன என்று சொல்லியே ஒரு சமூகத்தின் மீது பழி போட்டு அரசியல் செய்கிறது திராவிட இயக்கங்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News